1. நேர்காணல் ஒன்றுக்கு முன்னர் உங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும்?

1. நேர்காணல் ஒன்றுக்கு முன்னர் உங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும்?


நேர்காணல் என்பது ஏனைய தொடர்பாடல் நடவடிக்கைகள் போன்று இரு வழித் தொடர் செயன்முறை ஆகும். நேர்காணலின் அடைவுகள் நீங்கள் நேர்காணலுக்கு உட்படுத்தும் நபர் போன்றே உங்களிலும் தங்கியுள்ளது. ஒரு சிறந்த நேர்காணல் உரையாடல் ஒன்றின் உணர்வைக் கொண்டிருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் பேசும் விடயங்கள் என்பன உங்களுக்கு தேவையான விடைகளைப் பெற திட்டமிடப்பட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அமையும்.

நேர்காணலுக்கு முன் உங்களது செய்தி விடயதானம் மற்றும் அதனுடனான உங்களது தகவல் மூலத்தின் தொடர்பு என்பவை பற்றி முழுமையான ஆய்வை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களது பின்புல விபரங்களை வழங்கும் ஆவணங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அது உங்களுக்கு பொருத்தமான கேள்விகளை வடிவமைக்கவும் விபரமான விளக்கங்களைப் பெறவும் உதவும். பிரச்சனைகள் காணப்படும் இடத்துக்கு சென்று பல வகை நபர்களை நேர்காணலுக்கு உட்படுத்த திட்டமிடுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் ஒரு சில நபர்கள் அல்லது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து மிகத் தூரத்தில் உள்ள தகவல் மூலங்களில் தங்கியிருக்க வேண்டிய அபாய நேரிடர் ஏற்படும். உதாரணமாக, வேலை தருனோர் தமது பணியாளர்களை எவ்வாறு உருஞ்சுகிறார்கள் என அறிய வேலை நீக்கம் செய்யப்பட பண்ணைத் தொழிலாளர்கள், கைத்தொழில் துறைப் பணியாளர்கள் அல்லது அது போன்ற ஏனையோர் காணப்படும் இடத்துக்கு செல்ல வேண்டும். அவர்களிடம் பெறுவது போன்ற தகவல்களை நீங்கள் பெரிய நகரத்தில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் உங்களால் பெற முடியாது. களத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களை விடயதானம் தொடர்பான கொள்கை ஆவணங்கள் அல்லது பொறுப்புகள் மற்றும் பாதீடுகள் என்பவற்றுடன் தொடர்பு படுத்த தரவு வரைபடம் ஒன்றைப் பயன்படுத்துங்கள். உங்களது கண்டுபிடிப்புகளை அவற்றையொத்த இடங்களில் இடம் பெறும் விடயங்களுடன் ஒப்பிடுங்கள் அல்லது வரலாற்றின் வௌ;வேறு கால கட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்குங்கள். இந்த வகையான ஆரம்பத் தயார்படுத்தல் உங்களை தொடர்புடைய கேள்விகளை கேக்க இயலுமாக்குவதுடன் உங்களது செய்திக்கு தேவையான தகவல்களையும் வரவழைக்கும்.