1.3. கருவிகள்


நீங்கள் நேர்காணலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள எந்தக் கருவியையும் நேர்காணலுக்கு முன்னர் பரீட்சித்துக் கொள்ளுங்கள். உங்களது ஒலிப்பதிவு மற்றும் எழுத்துக் கருவிகள் அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளதை உறுதி செய்வதுடன் எப்போதும் மாற்றுக் கருவிகளையும் (spares) கொண்டு செல்லுங்கள் (பேனைகள், ஒலிப்பதிவுக் கருவிகள், மின்கலங்கள், இலத்திரனியல் சேமிப்பு அட்டைகள் (SD Cards) போன்றன). நீங்கள் தகவல் மூலத்திடம் இருந்து நேர்காணலில் பெரும் எந்த விடயத்தையும் பயன்படுத்துவதற்கான விடுகைப் படிவத்தில் (release form) நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் கையொப்பம இட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவ்வாறான படிவங்கள் உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது நீண்ட நேர்காணல்களுக்கு, அது ஒலிபரப்புக்கு ஏற்றவாறு சுருக்கப்பட வேண்டி உள்ளதால், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. குழுமங்கள் மற்றும் அரசியல் பேச்சாளர்கள் உடனான நேர்காணல்களுக்கு இவை அவசியமில்லை, ஏனெனில் அவர்களின் பணி வரையறையின் படி, அவர்கள் நேர்காணல்களுக்கு இணங்குவதுடன் அந்த நேர்காணல்களை நீங்கள் தீர்மானிக்கும் விதத்தில் பயன்படுத்த முடியும். எவ்வாறாயினும் நீங்கள் நேர்காணலை சமர்ப்பித்த விதம் அவர்களால் விரும்பப்படவில்லையாயின் அவர்கள் முறைப்பாடுகள் மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.