2. நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது?

2. நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது?


ஊடகவியலாளர்கள் தமது சொந்த விரும்பத்தகாத பிரசித்தம் மூலம் அனேகமாக பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறான ஊடகவியலாளர்கள் மோப்பம் பிடிப்பவர்கள், பரபரப்பை ஏற்படுத்துபவர்கள், மக்களின் நற்பெயரை சிதைப்பவர்கள், கடினத்துடன் பணி புரியும் மக்களை தடுப்பவர்கள் மற்றும் மரியாதை கொடுக்காதவர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப் படுகின்றனர். சிலவேளைகளில் இந்த குற்றச் சாட்டுகள் உண்மையாகவும் இருக்கின்றன. இந்த எதிர்மறையான கண்ணோட்டங்களை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி பண்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வதாகும். முரட்டுத் தனமானவராக இருக்க வேண்டாம் அத்துடன் நியாயமற்ற விடயங்களைக் கோரவும் வேண்டாம். “நான் இரவிலும் பகலிலும் எந்த நேரத்திலும் உங்களை தொலைபேசியில் அழைப்பேன், நான் அழைக்கும் போதெல்லாம் எனக்குத் தேவையானவற்றை நீங்கள் வழங்க வேண்டும்” இவ்வாறன தொனியை வழங்கும் வகையில் நடந்து கொள்வது சமூகத்துடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தூண்டும்.

அநேகமான மக்கள் தாம் நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்கள் என நம்புகின்றனர். எனவே, உங்களது தகவல் மூலத்தை இந்த வகையில் தொடர்புபடுத்தி ஏன் ஆரம்பிக்கக் கூடாது? கேள்விகளை பின்வருவன போன்ற சொல்லாக்கங்களில் வினாக்களைத் தொடுப்பது சிறந்த அடைவுகளைக் கொண்டு வரும்; “இது எவ்வாறு நடக்கின்றது என்பதை நான் உண்மையாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”, “இந்தப் பிரச்னையை சமூகத்தின் நன்மை கருதி விளக்குவதற்கு உதவுங்கள்”, “இந்த மாசு குழந்தைகளைக் கொன்று கொண்டு இருப்பதால் தயவு செய்து என்னுடன் இணைந்து பணி புரியுங்கள். அநேகமான சம்பவங்களில் ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பகிர்வது பொது மக்களின் சிறந்த நலன்கள் தொடர்பிலேயே ஆகும் என தகவல் மூலங்களை நம்ப வைக்கப்பட்டால் குறித்த தகவல் மூலங்கள் ஊடகவியலாளர்களுக்கு உதவி புரியும்.

இது மூலோபாயத்துடன் மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல: நான்காவது சக்தி (the fourth estate) என கம்பீரமான பட்டம் வழங்கப்பட்ட போதிலும் எந்த ஊடகவியலாளரும் போது மக்கள் அதிகாரிகளைக் கண்காணிக்க ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவதில்லை. ஊடகவியலாளர்களும் சிவில் சமூகத்தின் ஓர் அங்கமாகும். அந்த வகையில் அரசு தனது மக்களுக்கு பணி செய்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பாண்மையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. இந்த பதவி நிலையில் ஊடகவியலாளர்களுக்கு வெகுசன ஊடக அலைவரிசைகள் மற்றும் பத்திரிகைகள், ஒலிபரப்பு நிலையங்கள் போன்ற நிறுவனங்களில் சலுகை மிக்க அணுகல்கள் காணப்படுகின்றன. விசேடமாக அவர்கள் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் அல்லது வன்முறை மிக்க குழுமங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபடும் போது ஊடகவியலாளர்கள் இன்பம் தரக் கூடிய, உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைத் தன்மை வாய்ந்த (குறைந்த பட்சம் முடிந்தளவு வெளிப்படைத் தன்மை வாய்ந்த) முறைமைகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஊடகவியலாளராக நீங்கள் எல்லை மீறவில்லை என்பதை உறுதி செய்ய பின்வரும் கேள்விகளை உங்களிடம் எப்போதும் கேட்டுக் கொள்ளுங்கள்: நான் புலனாய்வுக்கு உட்படுத்தும் நபர் நானாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறு இருக்கும்? நான் உலகை எவ்வாறு நோக்க வேண்டும், ஊடகவியலாளர் வகிபாகத்தை நான் எவ்வாறு நோக்க வேண்டும்? நான் எந்த அளவுக்கு பொறுப்புக் கூறுபவனாக இருக்கிறேன்? நான் பிறருக்கு எதிராக மேற்கொள்ளும் புலனாய்வு விடயங்களின் பால் நானும் சபலம் கொள்ளக் கூடுமா? எது என்னைத் தடுக்கும்? என்னுடைய சோதனைகள் மற்றும் சமநிலைகள் எவை?