2.1. நேர்காணலுக்கான அடிப்படை விதிகள்


நேரத்துக்கு செல்லுங்கள்
நீங்கள் தாமதமாகச் சென்றடைந்தால், உங்கள் தகவல் மூலத்தை தூரமாக்குவீர்கள், நேர விரயம், மன்னிப்புக் கோருவதில் நேர இழப்பு, நேர்காணலின் ஆரம்பத் தருணங்களில் மூச்சு வாங்கல் மற்றும் நேர்காணலில் கவனக் குவிவு கொண்டிருக்க முடியாத நிலா போன்றன ஏறபடும்.

பொருத்தமான உடைகளை அணியுங்கள்
ஆடைகளுக்கான விதிகள் ஏற்கனவே காணப்பட்ட விதத்தை விட மிகவும் தளர்வாகக் காணப்படினும், முதல் பார்வையில் நீங்கள் உங்களது தகவல் மூலத்தில் இருந்து தூரமாவதை விரும்ப மாட்டீர்கள். சூழமைவுக்கு பொருந்தும் வகையில் ஆடை அணியுங்கள், பொருத்தமான மரியாதையைக் காண்பிப்பதுடன் உங்களது வாழ்க்கை முறை அல்லது பார்வைகளை பற்றிய தகவல்களை உங்களது ஆடைகள் அனுப்பாத வண்ணம் நடுநிலையாக இருந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அமரும் இடத்தைத் தேர்வு செய்யுங்கள்
தேவைப்படின் உங்களது ஒலிப்பதிவுக் கருவியின் தேவைகளை சாக்காகப் பயன்படுத்துங்கள் (உதாரணமாக, இது இந்த இடத்தில் இருந்தால் ஒலிகளை நன்கு பதிவேற்றும்). நீங்கள் கண் தொடர்புகளை (eye contact) ஏற்படுத்தக் கூடிய இடம் ஒன்றில் அமர வேண்டும், எனினும் முகத்தை நேரடியாக நோக்கும் வகையில் நேருக்கு நேர் அமர்வது மோதல் உணர்வு கூடியது போன்று காணப்படும். அதைவிட, மட்டத்தில், எதிர்த்திசையில் உங்களது தகவல் மூலத்துடன் சிறிய கோணம் ஒன்றை ஏற்படுத்தியவாறு அமருங்கள். உங்களுக்கு இடையில் காணப்படும் புத்தக அடுக்குகள், திறந்த நிலையில் உள்ள மடிக்கணணி போன்ற தடைகளை அகற்றுங்கள். மென்மையான சோபா கதிரை எழுதவதற்கு கடினமானதாகவும் மிகவும் கூடிய அளவில் இலகு மற்றும் ஆறுதல் என்பவற்றைக் கொண்டிருக்கும்.

பொருத்தமான கண் தொடர்பைப் பேணுங்கள்
ஒருவருடைய முக பாவனைகளை அவதானிக்கும் போது உங்களால் குறித்த நபருடன் எப்போதும் சிறந்த உரையாடலை மேற்கொள்ள முடியும். நீங்கள் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு கண் தொடர்பைப் பேணுவது சிரமமாக இருக்கக் கூடும். எனினும் இடையிடையே நிமிர்ந்து பார்ப்பதையும் மற்றும் கேள்விகள் கேட்கும் எப்போதும் நிமிர்ந்து பார்ப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வெறுமனே உங்கள் கேள்விகளை வாசித்துக் கொண்டிருந்தால் உங்களது தகவல் மூலம் உங்களை தன்னம்பிக்கை அற்றவராக, நேர்காணல் மேற்கொள்வதில் புதியவராக அல்லது தகவல் மூலம் கூறும் விடயங்களை கருத்தில் கொள்ளாதவர் எனக் கருதக் கூடும். இது முரட்டுத் தனத்தின் ஒரு அறிகுறியாக விளங்கப்படுவதோடு தகவல் மூலத்தின் ஈடுபடலுக்கான விருபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உடல்மொழி தொடர்பில் உணர்வு நிலையுடன் இருங்கள்
உடல்மொழி தொடர்பில் தெரிந்திருங்கள் (உங்களடையதும் அவரளுடையதும்). தற்பாதுகாப்பு முகபாவம் மற்றும் தோற்றப்பாங்கு என்பன மழுப்பலை சமிக்ஞை செய்வதால் அவை கேள்விகளை எங்கு கடினமாக்க வேண்டும் என்ற துப்பை வழங்கும். தகவல் மூலம் மனம் புண்பட்ட நிலை, ஆறுதல், நகைச்சுவை, கோபம் அல்லது சோம்பல் தொடர்பில் வெளிக்காட்டும் சமிக்ஞைகளை நோக்கி அவற்றில் இருந்து கட்டி எழுப்பவோ அவற்றுக்கு எதிர்வினை ஆற்றவோ முற்படுங்கள்.

பதிவில் வருகின்ற மற்றும் பதிவில் வராத விடயங்கள்
பதிவில் வரும் விடயங்கள் (on the record) என்பதன் பொருள் தகவல் மூலம் வழங்கும் அனைத்து தகவல்களையும் உங்களால் பயன்படுத்த முடியும் என்பதாகும். பதிவில் வராத விடயங்கள் (off the record) என்பதன் பொருள் குறித்த தகவல்களை தகவல் மூலம் அறிமுகப் படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பதாகும். அத்துடன் “பின்புல மாத்திரம்” எனக் குறிப்பிடப்படும் விடயங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்பட முடியாதவை ஆகும்; அவை நீங்கள் சூழமைவை விளங்கிக் கொள்ளும் நோக்கில் மாத்திரம் வளங்கப்படுவன ஆகும். இந்த பதிவில் வரும் மற்றும் வராத விடயங்கள் என்பன சட்ட ரீதியான பிணைப்பைக் கொண்டன அல்ல எனினும், அவை ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் மூலங்கள் இடையே உள்ள பொதுவான மரியாதைகளாகும்.

உங்களின் இந்த நேர்காணல் பதிவில் வருவதா அல்லது பதிவில் வராததா தகவல் மூலத்துக்கு உறுதி செய்வதுடன் எதிர்பார்க்கப்படும் நேர எல்லையையும் அறிவியுங்கள். உணர்திறன் மிக்க தலைப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கான தகவல் அறிந்த இசைவையும் பெற்றுக் கொள்ள்ளுங்கள். உங்களது நேர்காணல் முறைசாரா வகையில் அமைந்திருப்பின் குறிப்பு எடுப்பதற்கு அல்லது ஒலிப்பதிவுக் கருவியை இயங்க வைப்பதற்கு பொருத்தமான நேரத்தை தெரிவு செய்து அவற்றை வெளியே எடுத்த பின்னர் தகவல் மூலத்திடம்; நான் எமது உரையாடலை குறிப்பு எடுப்பதில் அல்லது ஒலிப்பதிவு செய்வதில் ஏதும் ஆட்சேபனை உள்ளதா? எனக் கேளுங்கள். நேர்காணல் முறைசார் வகையில் அமைந்திருப்பின் விரைவாக நடத்திச் சென்று உங்களது நேரத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துங்கள். நேர்காணலில் குறிப்பு எடுப்பது அல்லது ஒலிப்பதிவு செய்வது சில தகவல் மூலங்களுக்கு மிரட்டலாக அமையக் கூடும் என்பதை அறிந்திருங்கள். உங்களது ஒலிப்பதிவுக் கருவிகளை மறைத்து வைத்திருக்க வேண்டாம், எனினும் குறிப்பெடுத்தல் மற்றும் ஒலிப்பதிவு செய்தல் என்பவற்றை ஊடுருவல் அற்ற வகையில் மேற்கொள்ளுங்கள், அத்துடன் “இது எனக்கு உங்களது விடைகளை சரியாக பெற்றுக் கொள்ள உதவும்” எனக் கூறுங்கள். அவர்கள் பதற்ற நிலையில் காணப்பட்டால் அது தொடர்பில் கேளுங்கள்.

எப்போதும் குறிப்பெடுத்தலை மேற்கொள்ளுங்கள்
குறிப்பு எடுப்பது உங்களை கவனக் குவிவுடன் வைத்திருப்பதற்கும் முகபாவங்கள், சுற்றயல் மற்றும் வெளிப்படுத்தல்கள் போன்ற ஒலிப்பதிவுக் கருவிகளால் பதிவு செய்யப்பட முடியாத விடயங்கள் எடுக்கப்படுவதை அனுமதிக்கும். அத்துடன் ஒலிப்பதிவில் ஏதாவது பிரச்சனை காணப்படும் இடத்து ஒரு பாதுகாப்பை வழங்கும். குறிப்புகளை சரியாக எடுக்கவும் அத்துடன் அவர்களின் கூற்றுகள், உங்களின் சொந்த அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் என்பவற்றை வேறுபடுத்திக் குறிப்பிடவும்.

நடுநிலையான திறந்த கேள்விகளைக் கேளுங்கள்
உளவியலாளர்கள் வழங்கும் துணுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விடைகள் தொடர்பில் எவ்வாறு உணருவீர்கள் என்பதை வெளிப்படுத்தக் கூடிய கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பின்வருவன போன்ற கேள்விகளைத் தவிருங்கள்; இது ஒரு அதிர்ச்சி மிக்க அதிகாரத் துஷ்பிரயோகமாக இல்லையா? அதற்கு பதிலாக பின்வருமாறு கேளுங்கள்; அதிகாரத்தை இந்த வழியில் பிரயோகிப்பது தொடர்பில் எவ்வாறு உணர்கிறீர்கள்? உங்களது தகவல் மூலத்தின் நோக்கங்களை விளங்கிக் கொள்ள நீங்கள் விரும்பக் கூடும், நேரடியாக “ஏன்?” எனக் கேட்பது குற்றம் சாட்டும் அல்லது நம்பாதது போன்ற தொனியை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த “ஏன்?” என்ற கேள்விகளை மறைமுகமாகக் கேளுங்கள். “ஏன் இந்த ஊடக அறிக்கைகள் உங்களை கோபமடைய வைத்தது? என்பதற்கு பதிலாக் “அந்த ஊடக அறிக்கைகள் உங்களைக் கோபமடைய வைத்ததாகக் கூறினீர்கள்? அது பற்றி மேலும் கூறுங்கள்”

அமைதி பேணல் ஒரு கெட்ட விடயம் அல்ல
உங்களது தகவல் மூலம் கேள்விகளுக்கு விடையளிக்க அனுமதியுங்கள், அத்தடன் அடுத்த விடயத்துக்கு நகரும் முன் சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உரையாடலில் ஏற்படும் இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு கிடையாது. நேர்காணலுக்கு உட்படுத்தப்படுபவருக்கு விடைகள் தொடர்பில் சிந்திக்க நேரம் தேவைப்பட்டால் அதற்கு அவகாசம் வழங்குங்கள். அத்துடன் உணர்ச்சிகளில் அவர்கள் மீள்வதற்கு நேரம் தேவைப்பட்டால் அமைதியாக காத்திருப்பதுடன் அடுத்த கேள்விக்கு நகரும் முன்; நாங்கள் தற்போது ஆரம்பிக்கலாமா? எனக் கேளுங்கள்.

விருப்புள்ளவராக தோற்றமளிப்பதுடன் விருப்புள்ளவராக இருங்கள்
நேர்காணலின் போது நீங்கள் செவி மடுக்கும் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான இடையீட்டைக் கொண்டவராக இருக்க வேண்டும்; அவர்கள் தரும் விடைகளைக் குறித்துக் கொள்வதுடன் அவ்விடைகளை மேலதிக கேள்விகளை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும். பின்வருவதை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: இதுதான் எனக்குத் தேவைப்பட்ட விடையா? இதை என்னால் எவ்வாறு பயன்படுத்த முடியும்? நேர்காணல் முடிந்தவுடன் இரண்டாவது நேர்காணல் ஒன்றுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருக்கக் கூடும். நீங்கள் உங்களது ஆய்வை மேற்கொண்டீர்கள், எனினும் தகவல் மூலம் நீங்கள் எதிர்பார்த்த விடயத்தைக் கூறவில்லை. இந்த நிலையில் நீங்கள் பதற்றமடைய வேண்டாம், அல்லது விடயத்தைக் கைவிடவோ அல்லது மாற்றவோ வேண்டாம். அதனுடன் தொடர்ந்து செல்லுங்கள். அவர்களது புதிய கண்ணோட்டத்துக்கு பதிலளித்து அதன் தொடர்ச்சியைக் கேளுங்கள். முன்னதாகவே உருவகப்படுத்தப்பட்ட செய்தியை நோக்கி முயற்சிக்கவோ அல்லது தகவல் மூலங்களை நெருக்கவோ வேண்டாம். அந்த அதிர்ச்சி இறுதியில் இன்னும் சிறந்த செய்தியாக மாற்றமடையக் கூடும். அவ்வாறு இடம்பெறவில்லை எனில் பின்னர் நீங்கள் உங்களின் முந்தைய கருப்பொருளுக்கு திரும்பலாம். நேர்காணல் சிறப்பாக அமையாத விடத்து அத்தடன் நேர்காணலுக்கு உட்படுத்தப் படுபவர் முரட்டுத் தனமாக நடந்தாலும் நீங்கள் உங்களின் தகவல் மூலத்துடன் அடாவடி நிலைக்கு போக வேண்டாம்.

நேரத்தை மதியுங்கள்
எப்போதும் கடிகாரத்தில் ஒரு கண் வைத்திருங்கள், நேரத்துக்கு ஏற்ப உங்களது கேள்விகளை விரைவு படுத்துங்கள். உங்களது தகவல் மூலத்துடனான நேர உடன்பாடு கடந்த பின்னர் உங்கள் தகவல் மூலத்திடம் எமக்கு ஓ எண்ணிக்கையான கேள்விகளைக் கேட்க நேரம் கிடைக்குமா எனக் கேளுங்கள்.

நீங்கள் நேர்காணலை முடிக்கும் தறுவாயில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் உங்களது தகவல் மூலத்துடன் உறுதி செய்து கொள்ளுங்கள். “இந்த செய்தி எதிர்வரும் வியாழக் கிழமை பிரசுரிக்கப்படும்”. எனினும் பிரசுரத்துக்கு முன்னர் உங்களால் செய்தி வடிவத்தைக் காண முடியும் என்பன போன்ற உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

செய்தியை உள்ளவாறே அவர்களுக்குக் கூறுங்கள்
சிறந்த ஊடகவியலாளர்கள் தகவல் மூலங்களில் இருந்து பெறப்படும் விடயங்களை நேர்மையாகவே பயன்படுத்துவார்கள். நிச்சயமாக நேர்காணலில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் நீங்கள் பொய்யுரைக்கக் கூடாது. நேர்காணல் முடிவுற்ற பின்னர் கேள்வி ஒன்றின் உணர்வை கூற்றை சூழமைவுக்கு வெளியில் எடுத்து மாற்றக் கூடாது. நீங்களின் நேர்காணலில் பெற்ற விடைகளில் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு செல்லும் வேளை நேர்காணலில் அந்த விடைகளைப் பெற பயன்படுத்திய கேள்விகளின் வரிசை ஒழுங்கு தொடர்பில் விசேட கவனம் கொண்டிருக்க வேண்டும். அலங்கோலமான வரிசை ஒழுங்குகளில் விடயங்கள் காணப்படும் வேளை தவறுதலாக உண்மைகள் இலகுவாக திரித்துக் கூறப்படும். வாசகர்கள் புத்திக் கூர்மை உள்ளவர்கள், அவர்கள் உண்மை எங்கே உள்ளது என அறிந்து கொள்வார்கள்.