2.2. புலனாய்வு நேர்காணல் எவ்வாறு வித்தியாசமானது?


திட்டமிடல், தயார்படுத்தல் அத்துடன் விடயமறிந்த மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க கேள்விகள் என்பன போன்ற அடிப்படைக் கொள்கைகள் அனைத்து நேர்காணல் சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. எனினும் ஓர் புலனாய்வு அறிக்கையிடல் திட்டம் உங்களது திறன்களில் வேறுபட்ட எதிர்பார்ப்புகளையும் உங்களது அணுகுமுறைகளில் வேறுபட்ட முக்கியத்துவங்களையும் வேண்டி நிற்கின்றது. காலத்திட்ட அமைப்பு (Timing) என்பது அவ்வாறான வேறுபாடுகளில் ஒன்றாகும். நீங்கள் யாரை நேர்காணல் செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி அவர்கள் புலனாய்வின் எந்தக் கட்டத்தில் நேர்காணல் செய்யப்படுவது மிகவும் சிறந்ததாக அமையும் என சிந்திப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் புலனாய்வு அறிக்கையிடல் சூலமைவுகள் வித்தியாசமானவை ஆகும். அங்கு நேர்காணல் மேற்கொள்ளப்படும் தலைப்புகள் பெரியனவாக மற்றும் அதிக உணர்திறன் மிக்கனவாகவும் அமைவதன் காரணமாக நீங்கள் எதிர்ப்பு நிலை, தற்பாதுகாப்பு முனைப்புகள், நாவடக்கம் அல்லது உங்கள் தகவல் மூலத்தின் நழுவல் போக்கு என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி ஏறபடும். இந்தக் காரணத்தினால் நீங்கள் ஒரு வேறுபட்ட மூலோபாயத்தை கைக்கொள்ள வேண்டி ஏற்படலாம். அத்துடன் உங்கள் கேள்வி கேட்கும் உத்திகள் வேறுபட்ட இலக்குகளை அடைய வேண்டும்.

பொருத்தமான காலத்திட்ட அமைப்பு
உங்களது புலனாய்வின் முக்கிய நபர்களுடன் நீங்கள் எப்போது தொடர்பாட வேண்டும்? மிகவும் நேரத்துடன் அதை மேற்கொள்ளும் போது அது அவர்களுக்கு செய்தியை உங்களால் பிரசுரிக்க முடிவதற்கு முன் தப்புவதற்கான (அல்லது தடையுத்தரவு ஒன்றைப் பெற) எச்சரிக்கையாக அமையும். மிகவும் பிந்திய நேரத்தில் அதை நீங்கள் மேற்கொள்ள முடிவு செய்தால், அவர்கள் ஏற்கனவே தப்பியோடி இருப்பார்கள் அல்லது உங்களது கேள்விகளுக்கு கச்சிதமான விடைகள் அல்லது சட்ட ரீதியான மலுப்பல்களை தயாராக வைத்திருப்பார்கள். இதன் பிரகாரம் நீங்கள் அதிக அளவில் சான்றுகளை (ஆவணத் துணை) தேடி எடுத்த பின்னர் நேர்காணலை நடத்த பொருத்தமான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

ஏதுநிலை (vulnerability)
உங்களது முழுமையாக சரியானதாகவோ அல்லது முழுமையாக முடிக்கப்படாத நிலையில் இருந்தாலும், நீங்கள் ஏதாவது ஒன்று தொடர்பில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். இவ்வாறான சூழ்நிலைகளில் நீங்கள் புலனாய்வை மேற்கொண்டுள்ள பலம் வாய்ந்த நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் கருத்தைக் கோருவது அவர்களை சுதாகரிக்கச் செய்து அவர்களுக்கு நீங்கள் ஒரு பிரச்சனையாக தோன்றக் கூடும். அவர்கள் இதற்கு எல்லா வகைகளிளும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும். அவர்களின் எளிமையான மறுப்பு இலகுவாகக் கையாளத் தக்கது, எனினும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள். உங்களக்கு அச்சறுத்தல்கள் விடுக்கப்படலாம்- நேரடியான அச்சுறுத்தல்கள் அல்லது மூன்றாம் தரப்பின் ஊடாக (அனேகமாக உங்களது செய்தி ஆசிரியர் அல்லது பிரசுரிப்பாளர் மூலமாக) அதிக மறைமுகமான மிரட்டல்கள் மற்றும் பிரசுரத்துக்கு முன்னரான நீதி மன்ற வழக்குகள் மூலம் இந்த அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படலாம். இந்த நடவடிக்கைகளில் “நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல்” என்ற பதம் உள்நுழையும், இருந்தும் உண்மையான நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்குகள் இடம்பெறுவதில்லை.

இரகசியம்
புலனாய்வு ஊடகவியல் தெரியாத விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை இலக்காகக் கொண்டது. இந்த நிலை வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்கள் அல்லது பேசாமல் இருத்தலை ஏற்றுக் கொள்வதன் காரணமாக ஏற்படுகின்றது. உதாரணமாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் பாராளுமன்றம் அல்லது வறிய பெண் பிள்ளைகளை கடத்துதல் தொடர்பில் கலந்துரையாடலைத் தெரிவு செய்யாத சமூகம் ஒன்றுக்கு அதன் இடையில் பொய் ஒன்றைக் கூறுகிறார். இங்கு வெளிக் கொண்டு வரப்படும் விடயங்கள் வியப்பை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக எப்போதும் அமையும். இதன் பொருள் உங்களது நேர்காணலை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள் மிகவும் உணர்திறனுடன் கையாளப்பட வேண்டும் என்பதாகும். நேர்காணல் ஒன்றின் ஊடாக நீங்கள் பெற முனையும் விடயங்களை ஆரம்பத்திலேயே வெளியிட்டு விட்டால் தகவல் மூலங்கள் உங்களுடன் பேசுவதற்க் மறுக்கக் கூடும். நீங்கள் மிகவும் பொது இடம் ஒன்றினை உங்களது நேர்காணலுக்கு தெரிவு செய்யும் பட்சத்தில் நீங்கள் நேர்காணலுக்கு உட்படுத்தும் நபரை அபாயத்தில் தள்ளிவிடக் கூடும்.

தகவல் மூலம் ஒன்றை மறைந்திருந்து இலக்கு வைக்கும் முன்னர் ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்தியுங்கள். உதாரணமாக, ஒரு விடயத்துக்கு நேர்காணலைக் கோரியதன் பின்னர் நேர்காணலின் பொது வேறொரு விடயத்தைக் கொண்டு வருதல் அல்லது அவர்களது கதவுகளின் அருகே காத்திருந்து அவர்கள் வீட்டை அல்லது அலுவலகத்தை விட்டு வெளியேறும் சமயம் அவர்களை நேர்காணலுக்கு உட்படுத்த முயற்சிப்பது போன்ற முறைகள். இவை மற்றையவர்களின் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்தன போல் தோன்றும், எனினும் இது உங்களுக்கு மிக மிகப் பிழையான விடயமாகும். ஊடகம் பற்றி நன்கு அறிந்த பிரசித்தம் மிக்க நபர் எதிர்பாராத வினாக்களை எவ்வாறு வளைப்பது என்பதை நன்கு அறிந்திருப்பார் அல்லது உங்களை ஒரு முட்டாள் தனமான அடாவடி நபர் போல தோன்றச் செய்து விடுவார். அந்த இடத்தில் உங்களது ஒட்டு மொத்த முயற்சி மற்றும் தயார் படுத்தல்கள் அனைத்தும் ஒன்றுமே இல்லாதது போல் ஆகி விடும்.

நேர்காணல்களுக்கான மூலோபாயங்கள்
நேர்காணல் ஒன்றுக்கு சாத்தியமான மூன்று மூலோபாயங்கள் காணப்படுகின்றன. முறைசாரா நேர்காணல், எளிய பின்புலம் கொண்ட நேர்காணல் மற்றும் உண்மை கண்டறியும் நேர்காணல்களில் உங்களது கலந்துரையாடல் முழுவதும் கேள்விகளின் கடினத் தன்மை நடுத்தரமானதாகவே இருக்கும். நேர்காணல் நடந்து கொண்டிருக்கும் போது கேள்விகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தனவாக, உணர்திறன் மிக்கனவாக அல்லது விடையளிக்க் கடினமானவையாக மாற்றமடைவதில்லை. ஒரு ஆளுமையின் தோற்றுருவம் பற்றிய நேர்காணலில் குறித்த நபர் குறுகிய கவனக்குவிவு தொடர்பான கேள்விகளுடனேயே நேர்காணல் ஆரம்பமாகும். அவர்கள் எங்கே பாடசாலைக்கு சென்றார்கள்? அவர்கள் யாரை மணந்தனர்? ஏன் அது? அவர்கள் எவ்வாறு கவிதைகளை எழுத ஆரம்பித்தனர்? விடயதான நபரின் வாழ்வின் முக்கிய உண்மைகளை சேகரிக்கும் வகையில் இவை சிலவேளைகளில் மூடப்பட்ட கேள்விகளாகக் காணப்படும். எனினும் உங்களது வாசகர்கள் விடயதான நபர்களின் பார்வைகள் தொடர்பிலும் ஆர்வமாக இருப்பார்கள். எனவே நேர்காணல் முன்னேறிச் செல்லும் போது அது விரிவடையும். நவீன கால கதைப் புத்தகங்களின் நிலை பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? ஒரு ட்ரம்பட் வாத்தியக் கருவி போன்று நேர்காணல் கேள்விகள் குறுகியனவாக ஆரம்பித்து நேர்காணல் முன்னேறிச் செல்லும்போது விரிவடையும்.

ஒரு புலனாய்வு நேர்காணல் அநேகமாக இதற்கு எதிரான மூலோபாயத்தைப் பின்பற்றுகின்றது. அது பெரிய பொதுவான விடயம் ஒன்றுடன் ஆரம்பிக்கின்றது (உதாரணமாக, அரசாங்க ஒப்பந்தங்களை வழங்கும் தொடர்செயன்முறை என்ன? அது ஒரு திருப்திகரமான செயன்முறையா? அதை அரசாங்கம் எவ்வாறு கண்காணிக்கின்றது?). அத்துடன் இவ்வகையான கேள்விகள் முன்னேறிச் செல்லும் போது அது விபரமானதாகவும் கவனக் குவிவு கொண்டதாகவும் மாற்றமடைகின்றது. புலனாய்வு ஊடகவியல் நேர்காணல் ஒன்றில் இறுதியானதும் கடினமானதுமான கேள்வி அநேகமான சந்தர்ப்பங்களில் மூடியதும் அல்லது வழிநடத்தக் கூடியதுமாகும்: உதாரணமாக, இந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் நீங்கள் விலைமனுக் கோரல் தொடர் செயன்முறைகளைப் புறக்கணித்தீர்களா? ஏன்? இவ்வகையான கேள்விகளை நீங்கள் இறுதியாகவே கேட்பீர்கள், ஏனெனில், இந்தப் புள்ளியில் இருந்து தகவல் மூலம் ஒன்று நிறுத்தி விடும் அத்துடன் மேலதிகக் கேள்விகளுக்கு பதில் வழங்க மறுக்கும். நேர்காணல் ஆரம்பத்தில் விரிவாகவும் இறுதியில் குறுகியதாகவும் ஒரு புனல் போல கட்டமைக்கப்பட்டிருக்கும்.