3.3. மாறுவேட நேர்காணல்


மாறுவேடம் அணிந்த தகவல் சேகரிப்பு தொடர்பில் பெரும்பாலான ஊடகங்கள் கடுமையான ஒழுங்கு விதிகளைக் கொண்டுள்ளன. அத்துடன் சில நாடுகளின் சட்டக் கோவையில் அது சட்ட விரோதமான செயற்பாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலவேளைகளில் உங்களுக்கு தேவையான சான்றுகளைச் சேகரிக்க அது கிடைக்கக் கூடிய வழிமுறையாகக் காணப்படும். அதைப் பயிற்சி செய்வது முக்கியமானது. உங்களிடம் உள்ள இரகசியக் கமரா உங்களது மார்புடன் இணைக்கப் பட்டிருந்தால் அதன் புகைப் படங்கள் பிரயோசனம் மிக்கதாக அமையாது. உங்களால் ஆகாயம் அல்லது நடைபாதையின் படங்களை மாத்திரமே எடுக்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் ஒலிப்பதிவு செய்யும் சத்தங்கள் குறைவானவையாக மற்றும் இரைச்சல் மிக்கனவாக இருந்தால் நீங்கள் நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கி உள்ளீர்கள் என்றே பொருள்படும். தொலைகாட்சி குற்றவியல் நாடகங்களில் காண்பிப்பது போல் மாறுவேட நேர்காணல் அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அத்துடன் தொழில் நுட்ப வல்லமை தொடர்பில், உங்களுக்கு பேசவும் மற்றும் தேவையான தகவல்களை வழங்கவும் மக்கள் ஊக்கம் பெறக் கூடிய வகையிலான நேர்காணல் பாணி ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நேர்காணல்கள் இறுக்கமானதாகவும் செயற்கைத் தன்மை வாய்ந்ததாகவும் அமையும் பட்சத்தில் உங்களின் மூலோபாயம் வெளிப்பட்டு விடும்.

உங்களது தகவல் மூலம் நீங்கள் இரகசியமாக ஒலிப்பதிவை மேற்கொள்ளுகிறீர்கள் என சந்தேகிக்கும் நிலையில் அதை நேரடியாக உங்களிடம் கேட்கும். அந்த நிலையில் உங்களைப் பாதுகாக்கும் நோக்கில் நீங்கள் இல்லை எனப் பதில் கூற வேண்டி ஏற்படும். எனினும் இது கருவிகளைப் பயன்படுத்துவதில் இடர்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் உரையாடலை ஒலிப்பதிவு செய்யவில்லை என மறுக்கும் போது உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்ற நம்பிக்கையில் தகவல் மூலம் தூண்டப்பட்டு உரையாடல் தொடர்ந்து செய்யும் நிலையில் நீங்கள் அதற்காக சட்ட ரீதியாக தடுத்து வைக்கப்படலாம். ஐக்கிய இராச்சியத்தின் ஊடக வழக்கறிஞர்கள், மிகவும் முக்கியமான பொது நலம் ஒன்று காணப்படாத பட்சத்தில் கருவிகள் பயன்படுத்தப் பட்டதை ஏற்றுக் கொள்ள மாட்டார்க. ஏனைய நாடுகளின் அநேகமான வழக்கறிஞர்களும் இந்த நிலையை ஏற்றுக் கொள்வார்கள்.