1. புலனாய்வு ஒன்றை எவ்வாறு திட்டமிடுவது?

1. புலனாய்வு ஒன்றை எவ்வாறு திட்டமிடுவது?


ஒரு யோசனையில் இருந்து உங்களால் புலனாய்வு நோக்கி நேரடியாக பயணிக்க முடியாது. உங்களது யோசனை ஒரு ஆரம்பப் புள்ளி மாத்திரமே. புலனாய்வுச் செய்திகள் பாரிய சமூகப் பொறுப்பாண்மையைக் கொண்டிருப்பதாலும் மற்றும் பல்வேறுபட்ட சட்ட உரிமைகளுடன் தொடர்பு பட்டிருப்பதாலும் உங்களது அறிக்கையிடல் முடிந்தளவு முழுமையானதாகவும் துல்லியமானதாகவும் விபரம் மிக்கதாகவும் இருப்பது தொடர்பில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் ஊடகப்பணி என்பது குழு முயற்சியாக இருப்பதுடன் அதற்கு முக்கியமான வளங்கள் அவசியமாகின்றன. அத்துடன் உங்களது சகபாடிகளுடன் சிறந்த தொடர்பாடல் காணப்படுவதையும் உங்களது திட்டத்தை முன்கொண்டு செல்ல தேவையான பொருட்களை அணுகுவதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த அனைத்துக் காரணங்களுக்காகவும் செய்தியின் அனைத்து படி நிலைகளிலும் கவனம் மிக்க திட்டமிடல் காணப்பட வேண்டும்.

எங்கிருந்து உங்களது செய்தி யோசனை உருவாக்கம் பெற்றது என்பது உங்களது பணித் திட்டத்தை உருவாக்கும் காரணிகளில் ஒன்றாகும். குறித்த யோசனை உங்களது சொந்த அவதானிப்பின் ஊடாக அல்லது புதிர் மிக்க ஆதாரங்களின் ஊடாக பெறப்பட்டிருக்குமாயின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் ஒரு பரந்த போக்கை அல்லது பிரச்னையை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறித்த யோசனை துப்பு ஒன்றின் மூலம் பெறப்பட்டிருக்குமாயின் நீங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரும் முன்னர் குறித்த மூலத்தின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை அத்துடன் சாத்தியமான நோக்கங்கள் என்பவற்றை சோதனை செய்ய வேண்டும். எனினும் உங்களது மூலங்கள் குறையற்றவையாக மற்றும் ஆரம்ப யதார்த்தங்கள் மறுக்க முடியாதனவாகக் காணப்பட்ட போதும் உங்களது செய்தி யோசனையை உங்களது புலனாய்வின் மூலம் நிறுவக் கூடிய அல்லது நிறுவ முடியாத அல்லது விடைகளுக்கான இறுக்கமான கவனக் குவிவு கொண்ட கருதுகோள் அல்லது கேள்விகளாக மாற்றுவது தொடர் செயன்முறையின் முதலாம் படி நிலையாகும். எனினும் இந்த ஆரம்ப கட்ட திட்டம் ஒருபோதும் கல்லில் செதுக்கப்பட்டது போல் நிலையானது அல்ல: உங்களது புலனாய்வின் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் அல்லது புதிய வழிகாட்டல்களுக்கு ஏற்ப மாறுபடும் வகையில் போதிய அளவு நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

அனேகமாக ஒரு செய்தி அகன்ற விடயங்களை (முகாமைத்துவம் செய்யக் கடினமான வகையில்) புலனாய்வு செய்ய அனுமதிக்கும் பரந்த யோசனை ஒன்றுடனேயே ஆரம்பிக்கும். ஆமெரிக்காவின் அட்லாண்டா ஜேர்னல் கான்ஸ்டிடியுசன் பத்திரிகையின் முன்னாள் முகாமைத்துவ ஆசிரியரும் புலனாய்வு ஊடகவியலாளரும் ஆன தோமஸ் ஒலிவர் பின்வரும் குறிப்பை வழங்குகிறார்: “திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்குபவையாக வர முனைகின்றன அத்துடன் சிலவேளைகளில் ஒருவர் விடயம் ஒன்றைப் பற்றி அறிந்த அனைத்தையும் உள்ளடக்குகின்றன. உண்மையில் இது ஒரு பலவீனமே அன்றி பலம் அல்ல. இந்த யோசனையை சுத்திகரிக்க அதை உங்களது பாணியில் எழுதுவது சிறந்த உத்தியாக உள்ளது. செய்திச் சுருக்கம் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள் – இறுதிச் செய்தி எவ்வாறு இருக்கும் என்பதை விபரிக்கும் ஒரு பந்தி. செய்தி அறையின் மனங்களை திறக்கவும் சாத்தியமான விளக்கங்களை வரையவும் இது ஒரு வழிமுறையாகும். இது குறித்த செய்தி உள்ளூர்க் கோணத்தில் இருந்து நோக்கும் போது சிறப்பாக எல்லைகள் இடப்பட்டுள்ளதா என அறிய அல்லது குறித்த செய்தியில் பிராந்திய மற்றும் தேசிய தாக்கங்களை கொண்டுள்ளதா என அறியவும் இது உதவும். இந்த படிநிலையில் பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • என்ன நடந்து கொண்டிருக்கின்றது? உங்களது வாசகர் ஏன் இதன்பால் அக்கறை கொள்ள வேண்டும்?
  • இதில் சம்பந்தப்பட்டுள்ள இயங்குனர்கள் யார்? அவர்கள் எவ்வாறு அதைச் செய்கின்றனர்? அதன் பின் விளைவுகள் எவை?
  • என்ன பிழை இடம்பெற்றது? எவ்வாறு இந்தப் பிழை இடம்பெற்றது? ஏன் இந்தப் பிழை இடம்பெற்றது? அதன் பின்விளைவுகள் எவை?
  • என்ன விடயம்? என்ன செய்தி? இந்த செய்தியுடன் தொடர்பான முக்கிய பதங்கள் எவை?
  • இதன் காரண விளக்கம் என்ன? குறித்த செய்தி பிரசுரிக்கப்படுமாயின் யார் நன்மையடைய்வார்கள், யாருக்கு தீமையாக அமையும்? அந்த செய்தி சமூக விழுமியங்கள அல்லது நடத்தை தொடர்பில் விவாதங்களை இலகு படுத்துமா? குறித்த செய்தி பிழையான முறைமைகள் மற்றும் தொடர் செயன்முறைகளை கோடிட்டுக் காட்டுமா?

இந்த கேள்விகளுக்கு விடை காண்பது குறித்த செய்தி எவ்வாறு சொல்லப்படலாம் என்பதைப் பற்றி சிந்திக்க உதவுவதுடன் புலனாய்வுக்கான ஒரு திசையை அடையாளம் காண உதவும்.

உதாரணமாக, நீர் வழங்கல் சேவைகள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட பாரிய வயிற்றோட்டம் தொடர்பான செய்தியில் தனியார் கம்பனியிடம் இருந்து நீரை வாங்க வசதி அற்ற மக்கள் (முக்கிய பதம்: செலவிடும் திறன்) எவ்வாறு நீரைப் பெறுகின்றனர் என்பதைக் காண்பிக்க முடியும் அல்லது நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தை பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பு சோதனைகள் (முக்கிய பதம்: வெட்டும் மூலைகள், cutting coreners) எந்தளவுக்கு போதியவை என்ற நோக்கில் நீங்கள் எழுதுவீர்களா? இவ்வாறான கேள்விகளைக் கவனமாகக் கருத்தில் கொள்வது இந்த செய்தியின் கீழ்க் காணப்படும் விழுமியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர உதவும். இது பொது மக்கள் நலன் போன்ற முன்னுரிமைகள் எங்கே காணப்படுகின்றன என சுட்டிக் காட்டும். இந்த முன்னுரிமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டும் மேற்கொள்ளப்படும் செய்திகளை நிறுத்த உதவும். உங்களது செய்தியை வடிவமைக்கும் போது வேறுபட்ட வழிகளில் பொருளை வழங்கக் கூடிய திடமற்ற பதங்களைப் பாவிப்பதைத் தடுக்கவும். உங்களுக்கு தேவையான சான்றுகள் அனைத்தையும் சேகரித்த பின்னர் இந்த கேள்விகளுக்கு உங்களால் மீண்டும் திரும்ப இயலுமாய் இருப்பதோடு உங்களது ஆக்கத்தை பொருத்தமான திசை நோக்கி வடிவமைக்க முடியும்.