1.2.2. சான்றுகளின் போதிய அளவு


உங்களது ஆதாரங்களுக்கான மூலங்களை வழங்கக் கூடிய மூலங்களைப் பட்டியல் இட்ட பின்னர் உங்களது கருதுகோளுக்கு சான்றாக அமைக்கூடிய அல்லது உங்களது கேள்விக்கு போதிய அளவில் விடை வழங்கக் கூடியவை எவை என நீங்கள் தீர்மானிக்க வேண்டும். குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி ஏற்கனவே மேற்கொண்டதை விட குறைவான தரச் சோதனைகளையே மேற்கொள்கின்றது என நிறுவ அது போதுமானதா? அல்லது, குறைந்த சோதனைகளின் பின் விளைவுகள் எவை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமா? மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் தனது கருதுகோளுக்கு ஆதரவான ஆதாரங்களை ஒன்றிணைப்பது மாத்திரமன்றி கருதுகோளுக்கு முரண்படும் ஆதாரங்களையும் ஒழுங்கமைப்பார். உதாரணமாக, மிகவும் செல்வந்த நிலையில் உள்ள அரச அதிகாரி ஒருவர் Rs.10,000 இலஞ்சத்துக்காக சேவை ஒன்றை வழங்க தனது நேரத்தை வீணடிக்க மாட்டார். முரண்பாடான ஆதாரங்களை கருத்தில் கொள்ளுதல் இவ்வாறான விருப்பார்வ எண்ணங்கள் என்ற பொறியை தவிர்க்க உதவும். வேறுபட்ட கட்டங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த முழுமையான ஆதாரங்கள், மூலங்களின் வகைகள், மூலங்களின் எண்ணிக்கை மற்றும் உங்களின் ஆதாரத்தை செல்லுபடியற்றதாக மற்றும் நிறுவ முடியாததாக எது மாற்றும் என்பவை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருங்கள். ஆதாரத்தின் எந்தப் பகுதிகளுக்கு அதி கவனமான மற்றும் விபரமான சோதனை அவசியம்? ஆய்வின் போது இதை உங்களால் கையாள முடியுமா?

சான்று என்பதன் உட்கருத்து தொடர்பில் கவனமாக இருங்கள். எந்த ஒரு விடயத்துக்கும் முழுமையான சான்றைக் கண்டறிவது மிகவும் அரிதாகும். நாம் இதை புகைக்கும் துப்பாக்கி எனக் கூறுவது உண்டு. சிலவேளைகளில் உங்களது கருதுகோளை ஊகத்தின் மூலம் மாத்திரம் சரி எனக் காண்பிக்கும் வகையில் நீங்கள் போதிய ஆதாரங்களை ஒன்றிணைக்கக் கூடும். இது கிரிமினல் வழக்குகளின் போது ஆதாரங்களின் “நியாயமான ஐயத்துக்கு இடமின்றிய” அளவுக்கு ஒப்பானது. அதேவேளை சிவில் வழக்குகளுக்கு “நிகழ்தகவுகளின் சமநிலை” யே அவசியமாகின்றது. அது வழக்கு ஒன்றின் ஒரு பகுதியை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கும். நீங்கள் சான்று அல்லது நிகழ்தகவு எதைச் சமர்ப்பித்திருப்பினும் உங்களது இறுதிச் செய்தி பலமான ஆதாரம் அற்ற நிலையில் தெளிவாகச் சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும் உங்களிடம் செய்தி ஒன்று உள்ளது. எனினும் அதை நீங்கள் எழுதும் விதம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.