1.1.1. துறைசார் வல்லுனர்கள்


கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் துறைசார் வல்லுனர்கள் காணப்படுகின்றனர்: வரலாற்றாசிரியர்கள், ஆய்வு அறிவியலாளர்கள், வழக்கறிஞர்கள் பொறியியலாளர்கள் உட்பட அதிமான துறைசார் வல்லுனர்கள் உள்ளனர். குழுமங்களின் (Corporate) விவகாரங்களைக் கையாளும் போது (உதாரணமாக பல நாட்டவர்களின் நடவடிக்கைகள்) அங்கு பணி புரியும் நபர் உங்களது விடயதானமாக அமைதல் போன்ற சந்தர்ப்பங்களில் பொருத்தமான துறைசார் நிபுணரை அடையாளம் காண்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும் இந்த துறைசார் வல்லமையை அவர் எவ்வாறு பெற்றார் என்பது அல்லது உங்களின் புலனாய்வைத் தூண்டிய விடயத்தில் அந்த நபர் ஈடுபட்டாரா என்பதும் இதில் பெருமளவில் தங்கியுள்ளது. வித்தியாசமான ஆனால் தொடர்புடைய விடயங்களில் துறைசார் வல்லமை கொண்ட நபர்கள் உங்களது விடயதானத்தில் புதிய உள்நோக்குகளை வழங்கக் கூடும். மனித உரிமை பிரச்சாரகராக மனித உரிமை மீறல் தொடர்பான உங்களது செய்தி ஒன்றுக்கு ஒரு வழக்கறிஞர், பொலிஸ் அதிகாரி, வைத்தியர் அல்லது ஒரு விசாரணையாளர் கூட உதவியாக இருக்கக் கூடும்.

எனினும் எல்லா துறைசார் வல்லுனர்களும் சம மட்டத்தில் கானப்படுபவதோ அல்லது சம அளவில் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாகவோ இருப்பதில்லை. எனவே உங்களின் நம்பிக்கைக்கு உரிய சக ஊடகவியலாளர்களின் பரிந்துரைகளை நோக்குங்கள்.; அந்த வல்லுநர் பற்றி இணையத்தின் ஊடாக ஆய்வு செய்யுங்கள். அவர்கள் யாருக்காக ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் என கண்டறியுங்கள், ஏனெனில், அறிவியலாளர்கள் வர்த்தக கரிசனையுடன் நிதி வழங்கப்படுவதன் காரணமாக ஆதரவு திரட்டுவோர் (Lobbyist) போன்று பக்கச்சார்புடன் நடக்கக் கூடும். அவர்களின் பணிகள் எத்தகைய குற்றச் சாட்டுகளைப் பெற்றுள்ளன என நோக்குங்கள், அத்துடன் குறிப்பிட்ட துறை ஒன்றில் போட்டியான யோசனைகள் தொடர்பிலேயே பாராட்டு மற்றும் குற்றச்சாட்டுகள் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்பத் தகுந்த துறைசார் வல்லுனர்கள் (அல்லது துறைசார் வல்லுநர் அறிக்கைகள்) கூட கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பல துறைசார் வல்லுனர்கள் மறுக்கும் பட்சத்தில் இந்த வேறுபாடுகளை சூழமைவு ஒன்றின் ஊடாக சமர்ப்பிக்க வழி ஒன்றைத் தேட வேண்டும், அது வாசகர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும். துறைசார் வல்லுனர் ஆலோசனை உறுதியாக ஒரு பக்கம் சாய்ந்திருப்பின் அது தொடர்பில் ஊடகவியலாளர் கவனம் செலுத்த வேண்டும், எனினும் அது தவறானது என நிரூபிக்கப்படக் கூடும். துறைசார் வல்லுனர்கள் சம எண்ணிக்கையில் இருபக்கம் பிரிந்து நிற்கும் பொழுது அது பற்றி வாசகர்களுக்கு விளக்கும் கடமை உங்களுக்கு உண்டு. நீண்டகாலமாக உலகளாவிய வெப்பமடைதல் விவாதம் சம அளவில் இரு வேறு கருத்துக்கள் கொண்டது என்றே ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. பின்னர், அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகளாவிய வெப்படமடைதல் பற்றி விளக்கும் அநேகமான துறை சார் வல்லுனர்கள் சக்தி வள ஆதரவு திரட்டுவோரினால் பணக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என்ற உண்மை தெரிய வந்தது. உண்மையில் அதிகமான அறிவியல் சான்றுகள் பல வருடங்களாக உலகளாவிய வெப்பமடைதல் நிகழ்வதையும் அது அபாயகமானது என்பதையும் நிறுவி வருகின்றன.

கூட்டாட்சி முறை கொண்ட அநேகமான நாடுகளில், அரச திணைக்களங்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் என்பவை மிகவும் நம்பத் தகுந்த தகவல் மூலங்கள் என கருதப்படுகின்றன. அந்த நாடுகளில் அறிவியல் அறிக்கைகளின் பக்கச்சார்பின்மை, சரியான கூட்ட அறிக்கைகள், நீதி மன்ற நடவடிக்கைகள் மற்றும் பதிவுகளை மேற்கொள்ளல் என்பவற்றின் நீண்ட வரலாறு கானப்படுகின்றன. எனினும் பெரிய மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளில் இது வெகுளித்தனமான மற்றும் பயங்கரமான எடுகோள் என நிறுவப்பட்டுள்ளது. அரசினால் பணியமர்த்தப்பட்ட துறைசார் வல்லுனர் ஒருவர் ஏனைய துறைசார் வல்லுனர்கள் போல் சரியாகவோ அல்லது பிழையாகவோ இருக்கும் சாத்தியம் உண்டு – அத்துடன் சில விடயங்களில் தகவல்களை ஒரு குறித்த வகையில் சமர்ப்பிக்க அரச அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடும். ஏனைய மூலங்களைப் போலவே இங்கும் இந்த துறைசார் வல்லுனர் மூலங்கள் வழங்கும் தகவல்களை ஆராயும் போது அந்த வல்லுனர்களின் சாத்தியாமான நோக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனினும் இந்த உள்ளக நபர்கள் மிகவும் அறிவு மிக்கவர்கள். அவர்கள் எப்போதும் பக்கச்சார்பானவர்கள் மற்றும் எப்போதும் சரியானவர்கள் மற்றும் பக்கச் சார்பு அற்றவர்கள் என கருதுவது இரண்டும் தீங்கு விளைவிக்கக் கூடியனவே ஆகும். துறைசார் வல்லமை அற்ற மூலங்களில் இருந்து பெறப்படும் தகவல்களுக்கு பின்பற்றப்படுவது போலவே துறைசார் வல்லுனர்கள் வழங்கும் அனைத்து தகவல்களையும் அறிவு மிக்க இரண்டாம் மூலத்துடன் உறுதி செய்து கொள்ளுங்கள். அரச திணைக்கள துறைசார் வல்லுனர் ஒருவரிடம் இருந்து உத்தியோகப் பற்றற்ற முறையில் பதிவுகள் இல்லாத விளக்கம் ஒன்றைப் பெறுவது சில வேளைகளில் சாத்தியமானது, அது முழுமையான பின்புலத்தை வழங்கிய போதும் அதை உங்களால் செய்தியில் குறிப்பிட முடியாது.

சர்வதேச அமைப்புகளை நாம் எழுத்து வடிவ அறிக்கைகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றின் மூலங்கள் மாத்திரமே என எண்ண விழைகின்றோம். எனினும் அவற்றால் அவற்றின் நாடுகள் மற்றும் அவை இயங்கும் நாடுகளில் பயன்மிக்க தொடர்புகளைக் கூட வழங்க முடியும். உங்களுக்கு உதவ வேண்டும் என்ற எந்தக் கடப்பாடும் அவற்றுக்கு கிடையாது. எனினும் அவை சரியாக அணுகப்படும் பட்சத்தில் அவை அநேகமான சந்தர்ப்பங்களில் மிகவும் பரிவு மிக்கனவாகக் காணப்படுகின்றன, குறிப்பாக உங்களது விசாரணைகள் மேற்கொள்ளும் பிரச்சனை அவற்றின் உறுதியான கரிசனை கொண்ட விடயங்களில் ஒன்றாக காணப்படும் சந்தர்ப்பங்களில் இது உண்மையாகும். எனினும், இந்தக் காரணத்துக்காக, கொடை நிறுவனங்கள் (ஏனைய அனைத்து நிறுவனங்கள் போலவும்) மற்றும் ஏனைய முகவர் அமைப்புகள் தமது சொந்தக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் மூலம் அந்த நிறுவனங்கள் வழி நடத்துகின்றன அல்லது அவற்றை வலியுறுத்துகின்றன. அவர்களின் கருத்துகள் மற்றும் தகவல்களை ஒரு சூழமைவில் பொருத்துதல் மற்றும் இன்னொரு மூலத்துடன் பக்கச் சார்பற்ற நேர்காணல் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமா எனத் தீர்மானிக்க ஆய்வு உங்களுக்கு உதவும்.

சிலவேளைகளில், நீங்கள் தலைப்பு ஒன்றில் பணியாற்ற ஆரம்பித்துள்ளீர்கள் அல்லது உங்களிடம் குறிப்பிடத்தக்க தகவல்கள் உள்ளன என வெளிப்படுத்துவதன் மூலம் தொடர்புகளை அருட்டலுக்கு உட்படுத்த முடியும். உங்களது தொடர்பாளர் வலைப்பின்னலைப் பயன்படுத்தி நீங்கள் இதை முறைசாரா வகையில் மேற்கொள்ள முடியும்;. சில வேளைகளில் புலனாய்வுத் திட்டம் ஒன்றின் ஆரம்பச் செய்தியை பிரசுரிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படலாம். அந்த நேரத்தில் புதிய நபர்கள் தன்னார்வத்துடன் மேலதிக தகவல்களை வழங்கக் கூடும். அல்லது முன்னர் தகவல் வழங்க மறுத்த மூலங்கள் உங்களது செய்தியை திருத்த முன்வரலாம். எப்போதும் இந்த உத்தியின் சாதக பாதங்களை அமுல்படுத்த முன்னர் ஆராயுங்கள், ஏனெனில் இந்த உத்தி பாதகாமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இங்கு சம அளவில் ஏற்படக் கூடிய சாத்தியமான விளைவு உங்களது கண்காணிப்பில் உள்ள நபர்களையும் இது அருட்டி விடும், அத்துடன் அவர்கள் ஆதாரங்களை மறைக்க விரைவதோடு தகவல் மூலங்களையும் அமைதியாக்க முனைவார்கள் அல்லது உங்களது நகர்வுகளை முன் தடுக்க முனைவார்கள்.

உங்களது செய்திக்கு பின் பலம் வழங்கக் கூடிய துறைசார் வல்லுனரை கண்டு பிடிக்க முடியாமல் போனால் அது உங்களது நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என்று பொருள்படாது. நீங்கள் பிழையாக விளங்கியிருக்கக் கூடும் – அல்லது நீங்கள் தவறான துறைசார் வல்லுனரிடம் கேட்டிருக்கக் கூடும் அல்லது உங்களது கேள்விகள் பிழையானவையாக இருக்கக் கூடும். உங்களது செய்தியில் பல்வகைத் தன்மை கொண்ட கருத்துகளை உள்ளடக்குவது நீங்கள் திறந்து மனது கொண்டவர் எனக் காண்பிக்கக் கூடும். அது வேறுபட்ட பார்வைகளைக் கொண்ட ஏனைய துறைசார் வல்லுனர்கள் முன்வருவதை தூண்டக் கூடும்.