1.1.2. ஊதல் அடிப்போர் (whistleblowers) வாயிற்காவலாளிகள் (gatekeepers) மற்றும் கதவு திறப்போர் (door-openers)

1.1.2. ஊதல் அடிப்போர் (whistleblowers) வாயிற்காவலாளிகள் (gatekeepers) மற்றும் கதவு திறப்போர் (door-openers)


சிலவேளைகளில் வாசிப்பு சிலவேளைகளில் ஊதல் அடிப்போரை நோக்கி உங்களை வழிநடத்தும் (நிறுவனம் ஒன்றுடன் அதிருப்தி அடைந்த ஊழியர் ஒருவர் தனது நிறுவனம் பற்றிய கெட்ட விடயங்களை உங்களுடன் பகிர்பவர்). அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அதிகமான கம்பனிகள், நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களில் உத்தியோகப் பற்றற்ற இலத்திரனியல் சந்திப்பு அறைகள் காணப்படுகின்றன, அங்கு முக்கியமான கருத்துகள் மற்றும் தகவல்கள் பகிரப்பட முடியும். எனினும் இந்த தளங்களில் கிடைக்கும் தகவல்களை உங்களது செய்தியில் உடனடியாக உட்புகுத்த வேண்டாம். குறித்த ஊதல் அடிப்பவர் உண்மையானவர் மற்றும் தான் கூறுபவற்றுக்கு ஆதரவு வழங்கக் கூடியவர் என உறுதிப்படுத்த வேண்டும். அவன் அல்லது அவள் வழங்கிய சான்றை உறுதிப் படுத்த குறித்த மூலத்தை நேரடியாக சந்திக்க முயலுங்கள்.

நிறுவனம் ஒன்றின் அகத்தே காணப்படும் தொடர்பு நபர்களே மிகவும் பயன் மிக்கவர்களாகும், அவர்கள் உங்களின் ஒழுக்கம் தொடர்பான குழப்ப நிலை மற்றும் நீங்கள் தலைமரைவாதல் என்பற்றில் இருந்து பாதுகாப்பார்கள். இவ்வாறான நபர்களே வாயிற்காவலாளிகள் எனப்படுவர்; செயலாளர்கள், வரவேற்பறை பணியாளர்கள் மற்றும் கதவு பாதுகாப்பு அதிகாரிகள் உங்களை குறித்த இடத்துக்குள் நுழையே அனுமதிக்கவோ அல்லது அங்கே நடைபெறும் அனைத்து விடயங்கள் பற்றியும் கூறுவார்கள். உயர் அதிகாரிகளை மாத்திரம் கவனிக்கும் தவறைப் புரிய வேண்டாம்; அனைவருடனும் சிறந்த உறவை உருவாகக் முயற்சி செய்யுங்கள். வாயிற்காவலாளிகள் உருவகமான வகிபாகம் ஒன்றையும் கொண்டுள்ளனர்;. நபர்களின் வருகையை விட தகவல்களின் அணுகலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். வங்கிப் பணியாளர்கள், கடன் வழங்கும் திணைக்களங்கள் அல்லது அரச கட்டமைப்புகளில் பணியாற்றும் நபர்கள் போன்ற வாயிற் காவலாளிகள் இரகசியம் காக்கும் நிபந்தனைகளை தமது வேலை ஒப்பந்தத்தின் பகுதியாகக் கொண்டு கையொப்பமிட்டுள்ளனர். எனவே அவர்கள் சட்ட ரீதியாக தகவல்களை எவருக்கும் வெளியிட முடியாது. எனவே அவர்களின் உதவியை அற்பமான காரணங்களுக்காக நாடாதீர்கள் அத்துடன் அவர்களுடனான தொடர்பை எப்போதும் இரகசியமாகப் பேணுங்கள். இதன் மூலமாக உங்களால் இயன்ற அளவுக்கு அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க முடியும்.

புலனாய்வு ஒன்றின் போது பயன்படுத்தப்படும் மிகவும் பயன் மிக்க கேள்வி “யாரிடம் இந்த தகவல் உள்ளது?” என்பதாகும். அனேகமாக தகவல்களுக்கு பல வாயிற் காவலாளிகள் காணப்படுவர். கிடையாகச் சிந்தியுங்கள்: சுகாதார அமைச்சு உங்களுக்கு ஒரு ஆவணத்தை தர மறுத்தால், சில வேளைகளில் இன்னொரு அரச கட்டமைப்புக்கு அந்த ஆவணத்தை அணுகக் கூடியதாக இருக்கும். உதாரணமாக, உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதாரத்துடன் தொடர்புடைய ஓர் அரச சார்பற்ற நிறுவனம், குறித்த துறையில் பணியாற்றும் ஓர் ஆய்வாளர் அல்லது பரிவு மிக்க பாராளுமன்ற சுகாதாரக் குழு உறுப்பினர் ஆகியோருக்கு அந்த ஆவணத்தை அணுகக் கூடியதாக இருக்கும். உள்ளக தொடர்பு நபர்களுக்கு உணர்திறன் மிக்க அறிவு இல்லாமல் இருக்கலாம் எனினும் அவர்களால் யார் என்ன பதிவி நிலையில் உள்ளனர், யார் முக்கியமானவர் மற்றும் யார் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர் போன்ற தகவல்களை வழங்க முடியும்.

கதவு திறப்போர் செல்வாக்கு உள்ள நபர்களாகும். அவர்களுக்கு உங்களைப் பிடித்திருந்தால் அல்லது உங்களது பணி பெறுமதியானது என அவர்கள் நம்பினால் ஏனையவர்கள் உங்களுடன் உரையாட ஊக்கமளிப்பார்கள். கதவு திறப்போர் மதிப்பு மிக்க வயதான இராஜ தந்திரியாகவோ கனி~;ட அதிகாரியாகவோ இருக்கக் கூடும், எனினும் அவர்கள் சமூகக் குழு அல்லது நிறுவனம் ஒன்றின் நம்பிக்கைக்கு உரிய நபர்களாகும். சிலவேளைகளில், ஒரு பாரம்பரியம் மிக்க தலைவர் ஒருவர் அவனது அல்லது அவளது சமூகத்தின் கதவு திறப்பவராக இருக்கக் கூடும். இவ்வாறான நபர்களே மக்களை தாம் கூறும் விடயங்களை கேட்க வைப்பவர்கள்: அவர்கள் பின்வருமாறு கூறினால் மக்கள் கேட்பார்கள் “இந்த ஊடகவியலாளர் நல்லவர் நீங்கள் அவனுடன் அல்லது அவளுடன் உரையாட முடியும்”. இவ்வாறான நபர்களை உங்களது பின்புல ஆய்வின் மூலம் கணடறிந்து முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களுடனான உறவைப் பேணுங்கள்.