1.1.3. திரித்துக் கூறும் நபர்கள் (spin doctors)


உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் மற்றும் ஆதரவு திரட்டுவோரை (Lobbyist) நாம் திரித்துக் கூறுவோர் என அழைப்போம்: அவர்கள் தங்களது வேலை தருனரின் விடயத்தை உருவாக்க அத்துடன் அதை மிகவும் நேர்மறையான முறையில் சமர்ப்பிக்கும் அல்லது நிகழ்வுகளை சுழல விடும் நோக்கில் கொடுப்பனவு வழங்கப்படும் நபர்களாகும். எனினும் அவ்வாறான திரித்துக் கூறும் நபர்களை அடையாளம் காண்பது எல்லா வேலைகளிலும் இலகுவானது அல்ல. அமைச்சர் ஒருவரின் பத்திரிகைத் தொடர்பு அதிகாரி ஒரு தெளிவான திரித்துக் கூறும் நபராகும். எனினும் குறிப்பிட்ட விடயம் அல்லது கட்சி ஒன்றை ஊக்குவிக்கும் வகையில் இரகசிய கொடுப்பனவுகளைப் பெறும் ஊடகவியலாளர்கள் பற்றி என்ன கூறலாம்? பத்திரிகைக்கு இரகசியமாக இயங்கும் அதிகாரிகள் அல்லது வர்த்தக மூலங்களால் அனுப்பப்படும் செய்திகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அல்லது குறிப்பிட்ட கம்பனி ஒன்றின் உற்பத்திப் பொருட்களை மேம்படுத்த பணம் வழங்கப்படும் துறைசார் வல்லுனர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அத்தடன் பரிசோதனை மேற்கொள்ளாத இணையத்தளங்களில் பெயர் குறிப்பிடாமல் பதிவேற்றப்படும் விடயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? பாரம்பரியமற்ற இந்த அனைத்து திரித்துக் கூறும் நபர்களும் அதிகரித்த வகையில் சிறிய மற்றும் பெரிய விடயங்களை மேம்படுத்தி வருகின்றனர். உதாரணமாக அமெரிக்க அரசாங்கம் தனது வளைகுடா யுத்தம் பற்றிய பிரதி விம்பத்தை மக்கள் மத்தியில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றைப் பயன்படுத்தியது, அதன் நிறைவேற்று அதிகாரி தன்னைப் பெருமையாக “தகவல் போராளி” என அழைத்துக் கொண்டார்.

எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்ட திரித்துக் கூறும் நபர்களை பொய்யான செய்தி தொடர்பில் கையாள்வது இலகுவானதாகும். அமைச்சரின் பேச்சாளர் பிரச்சனைகளை பூசி மெழுகவும் அடைவுகளை பிரசித்தப்படுத்தவுமே கொடுப்பனவு வழங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகவும் திறன் குறைந்த நபர்களே பொய்களைக் கூறுவார்கள் ஏனெனில் ஒரு விடயம் பொய் என நிரூபிக்க குறைந்த அளவான ஆய்வே போதுமானது. ஆரம்ப ஆய்வுடன் கூடிய சிறந்த நேர்காணல் உத்திகள் மூலம் மழுப்பல் மற்றும் தவறாக வழிநடத்தல் என்பவற்றை தகர்க்க முடியும். நீங்கள் உங்களது பணியை மேற்கொள்வது போலவே பேச்சாளர்களும் அவர்களது பணிகளை மேற்கொள்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேச்சாளர்களுக்கு மறுபுறத்தில் அரசாங்கங்கள் மற்றும் சில பாரிய குழுமங்கள் என்பன தமது முதலாளிகளை இரகசியமாக முன் நகர்த்த, அத்துடன் சில வேளைகளில் தமது சொந்த நோக்கங்களை அடைய புலனாய்வு முகவர் அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அரசாங்கம் சதாம் ஹ_சைனிடம் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய கதைகளை ஊடகங்களில் விதைக்க புலனாய்வு முகவர் அமைப்புகளைப் பயன்படுத்தியது எனினும் இறுதியில் அவரிடம் அவ்வாறான ஆயுதங்கள் இல்லை எனத் தெளிவானது.

ஊடகங்களில் கதைகளை விதைப்பது புலனாய்வு அமைப்புகளின் நாளாந்த பணிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்துக்கு அவை ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் பிரத்தியோகமான பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அவை வழமையாக புலனாய்வு ஊடகவியலாளர்களை அவர்கள் எவற்றை அறிந்துள்ளனர் எனக் கண்டறியும் நோக்கில் அவர்களை வேவு பார்க்கின்றன. அத்துடன் சிலவேளைகளில் அவர்களை பணியமர்த்தவும் முனைகின்றன (சில சந்தர்ப்பங்களில் இது வெற்றியடைந்துள்ளது). எனினும் வழமையாக அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு மக்களை நோக்கி சுழல விடும் நோக்கில் தகவல்களை வழங்குவார்கள் (வழமையாக மிகவும் அழகான தொனியில்). எனினும், ஒருவர் உங்களுக்கு முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஒளிப்பதிவு நாடாக்கள் தொடர்பில் மிகவும் ஆர்வத்துடன் முன்வரும் போது அவர்களின் ஆர்வம் நியாமானது எனத் தோன்றினாலும் குறித்த நபர் தொடர்பில் நீங்கள் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஆபிரிக்க புலனாய்வு ஊடகவியலாளர் மன்றத்தை தோற்றுவித்த எவிலீன் க்ரோநின்க் பாரிஸ் நகரில் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதியான டுல்சீ செப்டம்பர் என்பவரின் கொலை தொடர்பில் புலனாய்வை மேற்கொண்டார். இந்த விடயத்தில் பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் கொலையில் தமது வகிபாகத்தை மறைத்து குறித்த கொலை வெளிநாட்டுக் கொலையாளி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டது எனக் காண்பிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையான பிழையான செய்திகளை பத்திரிகைகளில் விதைத்தன. ஒருமுறை க்ரோநின்க்கு 300 மணித்தியாலங்கள் உரையாடல்கள் கொண்ட ஒலி நாடாக்கள் பிரசித்தமான பிரான்ஸ் ஆயுதத் தரகரால் வழங்கப்படும் என வர்த்தகர் போல் நடித்த ஒருவரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. குறித்த தகவல் மூலத்திடம் ஊடகங்களை அணுகுவதற்கான நம்பக்கூடிய நோக்கம் ஒன்றும் காணப்பட்டது தான் ஏமாற்றப்பட்டதற்கு பழி வாங்கப் போவதாக குறித்த தகவல் மூலம் கூறியது. எனினும் க்ரோநின்க் குறித்த தகவல் மூலத்திடம் காணப்பட்ட பெருந்தொகைப் பணம், நேரம், வேவு பார்க்கும் வாய்ப்புகள், விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் தொடர்பு நபர்களின் வலைப்பின்னல் தொடர்பில் கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் குறித்த தகவல் மூலம் தான் வசித்த லண்டனை நோக்கி பறந்து விட்டது. க்ரோநின்க் குறித்த தகவல் மூலம் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் அல்லது அந்த நாட்டின் ஆயுத தொழில் துறையில் பணியாற்றும் நபராக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கின்றார்.

எப்போதும் பயன்படுத்தும் வழிமுறையாக எப்போதும் நீங்களே தகவல் மூலங்களைத் தேடிக் கண்டறியுங்கள், அவர்கள் உங்களை அடைவதை அனுமதிக்க வேண்டாம். கரகரப்பான குரலில் தன்னை நீங்கள் இரகசிய இடமொன்றில் சந்திக்க வேண்டும், அவர்கள் என்னைப் பின்தொடர்வதால் நமது சந்திப்பு பற்றி எவரிடமும் கூற வேண்டாம் எனக் கூறும் அவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். சூடான செய்திகள் தொடர்பில் நீங்கள் குறிப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளை அநேகமான சந்தர்ப்பங்களில் உங்களுடன் பேச மறுக்கும், தாம் சொல்வது அனைத்தும் உத்தியோகப் பற்றற்ற விடயங்கள் அல்லது பெயர் கூற மறுக்கும் மூலங்களைக் காண்பீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் அந்த நபர் யாரென அறிதல் வேண்டும். உங்களது தகவல் மூலத்தின் பின்புலம் பற்றிய தகவல்கள் உங்களிடம் இல்லாத விடத்து அவர்கள் எந்த வகை தகவல்கள் தொடர்பில் பேசுவதற்கு தகுதி உடையவர்கள் என உங்களால் அறிய முடியாமல் போதும். மிகவும் அபாய நேரிடர் கொண்ட தகவல் மூலம் தொலைபேசியின் மறுமுனையில் உள்ள அடையாளம் தெரியாத குரலாகும் – அது கரகரப்பான குரலாக இருந்தாலும் கூட வாட்டர் கேட் போன்ற புலனாய்வு செய்திகளைத் தராது.