2.1.1. உறுதி மொழிப் பத்திரம் (Affidavit)


சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, கையொப்பமிடப்பட்ட சாட்சிக் கூற்று (witness statement) உங்களது மற்றும் உங்கள் சாட்சி ஆகிய இருவருக்கும் ஏற்பாடு செய்யப்படக் கூடிய பாதுகாப்பு வடிவங்களில் ஒன்றாகும்: அது ஒரு உறுதி மொழிப் பத்திரம் ஆகும். முக்கிய நபர்களிடம் தன்முனைப்பு (ego) காணப்படும், அதே ஆளுமை இயல்புகள் அவர்கள் உங்களோடு நடைமுறைத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேளை அவர்களை தனித்தன்மை மற்றும் ஆதிக்கம் கொண்டவர்களாக ஆக்குகின்றன. அவர்கள் கொண்டுள்ள இந்த இயல்புகளே அவர்கள் அபாய நேரிடர்களைப் பற்றிக் கவலையின்றி உங்களை நோக்கு தகவல்களுடன் வருபவர்களாக ஆக்குகின்றன.

இவ்வகையான சட்ட ஆவணம் ஒவ்வொரு பக்கத்திலும் பெயரின் முதல் எழுத்துக்கள் அல்லது குறுகிய கையொப்பம் இடப்படுவதோடு சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட வேண்டும். இந்த ஆவணம் அநேகமான நாடுகளின் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அது முக்கிய சட்டப் பின்விளைவுகளையும் கொண்டுள்ளது. இது உங்களது தகவல் மூலம் தேவைப்படின் நீதிமன்றத்தில் ஆஜராகி சான்று வழங்க விரும்புகிறார் என சமிக்ஜை செய்கின்றது. உறுதி மொழிப் பத்திரம் நம்பிக்கைக்கு பொருத்தமான சட்டத்தரணி ஒருவரிடம் பாதுகாப்பாக வைக்கப்படும் பொருட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். செய்தி சட்டச் சவால் அல்லது நடவடிக்கைக்கு எதுவாக அமையுமாயின் உறுதி மொழிப் பத்திரம் காணப்படுவது சவாலை ஏற்படுத்தும் எவருக்கும் உங்களது மூலம் நீதிமன்றப் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் அவன் அல்லது அவள் தன்னை வெளிப்படுத்த தயாராக உள்ளார் என்பதைத் தெரிவிக்கும். உங்களது தகவல் மூலம் எதிர்காலத்தில் செய்தியை மறுத்தால் உறுதி மொழிப் பத்திரம் உங்களை அதில் இருந்து பாதுகாக்கும்.