அத்தியாயம் 5 ஆய்வு, ஆய்வு, ஆய்வு

அத்தியாயம் 5 ஆய்வு, ஆய்வு, ஆய்வு

இந்த அத்தியாயம் ஒரு புலனாய்வு ஊடகவியலாளர் அவரது அல்லது அவளது பணியை ஆரம்பிக்கத் தேவையான அடிப்படை ஆய்வுத் திறன்கள் பற்றிக் கலந்துரையாடுகின்றது. ஊடகவியலாளர்கள் தமது பணிக்கு அவசியமான சில கருவிகள் பற்றி அறிந்திருப்பதுடன் அவற்றை நன்கு பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்: குறித்த கருவிகளில் தரவு அகழ்தல் (Data mining) மற்றும் வரைபடமாக்கல் (Mapping), கடதாசித் துண்டுகள் (Paper Trail) போன்று வழிகாட்டல்களை எவ்வாறு பின்தொடர்வது மற்றும் கணணி உதவியுடனான அறிக்கையிடல் என்பன உள்ளடங்குகின்றன. அத்துடன் புலனாய்வு ஊடகவியலாளர்கள் அடிப்படை எண்ணறிவைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் சில செய்திகள் அளவுசார் தரவுகளின் பகுப்பாய்வை வேண்டி நிற்கும்.