1. தகவல்களை எவ்வாறு அணுகுவது?


அநேகமான நாடுகளில் அரச அல்லது தனியார் தரப்புகளின் தகவல்கள் பொது மக்களின் பார்வையில் இருந்து தூரமாக்கப்பட்டிருக்கும். அவை உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டமூலம், பயங்கரவாத சட்டமூலம் அல்லது பொது உத்தியோகத்தர்களின் விருப்பமின்மை போன்றவற்றினால் மறைக்கப்பட்டிருக்கும். பல ஐரோப்பிய நாடுகளை தகவல் சுதந்திரத்தின் மூலம் வியாபார மானியங்கள் விவகாரம் தொடர்பான தகவல்களை வழங்க வைக்க 2000 தொடக்கம் 2007 வரையான 7 ஆண்டு காலப்பகுதி தேவைப்பட்டது. ஐரோப்பிய பொது மக்கள் அரசின் வியாபார மானியங்கள் எங்கே அறிந்து கொள்ள ஆறு நாடுகளில் கடப்பாடு மிக்க ஊடகவியலாளர்கள் இணைந்து பணி புரிந்து நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்து குறித்த தகவல்கள் வெளியிடப்படுவதை உறுதி செய்தனர். இதன் மூலம் அடையப்பட்ட அடைவுகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன. இந்த அரச மானியங்களைப் பெறும் பட்டியலில் தொழில் துறைத் தலைவர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் காணப்பட்டனர். அவை நலிவடையும் சிறிய வியாபாரங்களாக அன்றி இலாபம் கொழிக்கக் கூடிய பாரிய வர்த்தகங்களாக இருந்ததுடன் வரி செலுத்துவோரின் மில்லியன் கணக்கான பவுண்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.

தகவல் உரிமைச் சட்டங்கள் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அமுலில் உள்ளன எனினும், குறித்த சட்டங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துவதே சிரமமாக உள்ளது. ஊடகவியலாளர்கள் தமக்கு தேவையான தகவல்களைப் பெற எப்போதும் கடினமாக உழைப்பார்கள். சட்டம் என்பது கதவு திறக்கப்பட முடியும் என்பதையே குறிக்கின்றது எனினும் கதவை அடைவதற்கான வழியை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் அத்துடன் அது திறக்கப்படும் வரை தட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இதை மேற்கொள்வதற்கு தொடர்புடைய சட்டங்களை நீங்கள் விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் தகவல் அறியும் சட்டம் அமுல்படுத்தப்படாத வாழும் நிலையில் மேலும் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்ட மூலம் காணப்படும் நாடு ஒன்றில் வாழ்வீர்களேயானால் அனேகமாக நீங்கள் நாளாந்தம் அரச மற்றும் தனியார் துறைத் தகவல்களைப் பெற பெரும் போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். மேலும், இலஞ்சம் வழங்கினால் மாத்திரம் ஆவணங்களை வழங்கும் அரச அதிகாரிகளின் போக்குகளால், அவர்களுக்கு பணம் வழங்குவதைத் தவிர ஆவணங்களை அணுக வேறு வழிகள் இல்லாத நிலையில் நீங்கள் ஏமாற்றம் அடைந்தவராக இருக்கக் கூடும். தகவல்களை பெற வேறு எந்த வழிகளும் இல்லாத நிலையில் எவ்வாறு உங்களால் அவர்களுக்கு ஆவணங்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்க முடியும்? இதற்குரிய நீண்ட மற்றும் கடினமான வழி தகவல் சட்டங்கள் மற்றும் அவற்றின் அமுல்படுத்தல் மூலமாக போராடுவதே ஆகும். இலங்கையைப் பொருத்தவரையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ( 12ம் இலக்க 2016 ம் ஆண்டு) அமுலில் இருப்ப்பதனால் பின்வரும் பொதுவான கொள்கைகள் உங்களின் அணுகுதல் பெறுவதற்கான முயற்சிக்கு வழிகாட்டும்:

  • விடயதானதின் சூழமைவு தொடர்பில் விசேடமாக அல்லது பகுதியளவில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள விடயங்களைக் கண்டுபிடிப்பதுடன் உங்களுக்கு தொடர்புடைய ஆவணங்களை நோக்கவிடக் கூடிய நபர் ஒருவரை அடையாளம் காணுங்கள்.
  • எப்போதும் தகவல் வெளியில் காணப்படுகின்றதா என முதலில் சோதனை செய்யுங்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாசகர்களைக் கொண்ட பத்திரிகைப் பிரசுரங்கள் சிலவேளைகளில் இரகசிய ஆவணங்களாக இருக்க வேண்டிய ஆவணங்களின் சுருக்கம் அல்லது பொழிப்புகளைக் கூட பிரசுரித்திருக்கக் கூடும்.
  • தகவல் சுதந்திர சட்ட மூல ஏற்பாடுகளை உங்களது இறுதி ஆயுதமாகவே பயன்படுத்துங்கள். நீங்கள் ஏனைய வழிமுறைகள் அனைத்தையும் முயற்சி செய்தீர்கள் என நிஷரூபிக்கக் கூடியதாக் இருப்பின் அது உங்களது ஆவணக் கோரிக்கைக்கான நியாயத்தை வலுவாக்கும்.
  • முன்கூட்டியே திட்டமிடுங்கள்: தகவல் சுதந்திர நடைமுறைகள் மெதுவானவை அத்துடன் உங்களுக்குத் தேவையான ஆவணத்தை நாளையே பெறுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவாகும். எனவே தகவல்களைக் கொண்டுள்ள சரியான நபர்களை அடையாளம் காணுங்கள்.
  • ஆவணத்தின் பெயர் (அல்லது இலக்கம்) உள்ளடங்கிய துல்லியமான வேண்டுகோள்களை மேற்கொள்ளுங்கள். “உங்களிடம் உள்ள அனைத்தையும்…..” போன்ற வேண்டுகோள்களை அடைவுகளை எட்டாது.
  •  உங்களுடைய ஆவணக் கோரல்கள் மற்றும் அவற்றுக்கு கிடைக்கப்பெறும் பதில்கள் என்பவற்றை கவனமாக ஆவணமாக்கலுக்கு உட்படுத்துங்கள். இந்தப் பதிவுகள் வேண்டுமென்றே தகவல் சுதந்திர சட்டங்களை மீறும் அதிகார மையங்களின் நடவடிக்கைகளை நிரூபிக்க பயன்படும் அத்தடன் அவை சில விடயங்களை மறைக்கக் கூடும்.