WHAT'S NEW?
  • We are happy to share the Korean edition with you. READ MORE
  • Don’t miss the newest edition – The Chinese manual READ MORE
  • New: Case studies on investigative reporting from the Balkans READ MORE

அடுத்த படிமுறை உங்களது கருவி மற்றும் அதில் காணப்படும் தரவுகளை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்துவதாகும். மறை குறியீடாக்கம் என்பதன் பொருள் தகவல்கள் அல்லது குறுந்தகவல்களை அனுமதிக்கப்பட்ட நபர் மாத்திரம் சரியான கடவுச்சொல் வைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் குறித்த கோவையை நேர் குறியீடாக்கி வாசிக்கும் வகையில் குறியீடாக்கத்துக்கு உட்படுத்துவதாகும். எனவே குறும்பர்கள் இதனை தகர்த்து தொகுதிக்குள் உள்நுளையாது இருக்கும் வகையில் பலமான கடவுச்சொல் ஒன்று இதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். மறை குறியீடாக்கம் வழமையை விட உங்களது கணணியை சிறிது மெதுவாக இயங்க வைக்கும் என்பதை அறிந்து இருங்கள்.

வன் வட்டு குறியீடாக்கம் (Hard drive encryption)
வெளி நபர்கள் உங்களது வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும் வகையில் உங்களது வீட்டின் முன் உள்ள கதவு ஒன்றைக் கற்பனை செய்யுங்கள். இந்தக் கதவு நீங்கள் உள்ளிருந்து பல சங்கிலிகளால் பூட்டப்படும் வேளை மாத்திரமே பாதுகாப்பானதாக இருக்கும். இந்தக் கதவு போன்றதே உங்களது வன் வட்டு ஆகும். வன்வட்டை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்துவது உங்களது சங்கிலிகள் போன்று உங்கள் கணணிக்குள் குறும்பர்கள் நுழைவதைக் கடினமாக்கும். இந்த சங்கிலிகள் உறுதியானவையாக இருக்க சம காலத்தில் உள்ள மிகவும் வெற்றிகரமான வன் வட்டு மறை குறியீடாக்க முறையான AES – 256 முறை பாவிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது வன் வட்டு மறை குறியீடாக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட ஏனைய முறைகளாக VeraCrypt (Windows இயங்கு தளத்துக்கு ) மற்றும FileVault (Mac இயங்குதளத்துக்கு) என்பன காணப்படுகின்றன.

தரவு குறியீடாக்கம் (Data encryption)
உங்களது வன் வட்டை மறை குறியீடாக்கத்துக்கு உபடுத்தியதன் மூலம் நீங்கள் அதிலுள்ள தகவல்களை பூட்டி விட்டீர்கள். நீங்கள் இரட்டை பாதுகாப்பை விரும்பும் பட்சத்தில் மாத்திரம் தகவல்களை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்த வேண்டும். இது சாத்தியமான ஒற்றர்கள் கருவியில் உள்ள உங்களது ஆவணங்களை அணுகுவதை அல்லது வாசிப்பதை தடுக்கும். தரவு மறை குறியீடாக்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட மென் பொருட்களில் ‘VeraCrypt’ (Windows)> ‘FileVault’ (Mac) மற்றும Crypto Disk’ என்பன உள்ளடங்குகின்றன. கோவைகளை ஒன்றாக அழுத்தி ஒற்றை மறை குறியீடாக்க ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்குதல் கூட சாத்தியமானது. இந்த செயன்முறை ‘7-Zip’ (Linux) என்ற மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்படலாம்.

உங்களது கையடக்க தொலைபேசியை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தல்
சமகாலத்தில் கையடக்கத் தொலைபேசிகளும் கணனிகள் போன்றே பயபடுத்தப்படுகின்றன, எனவே உங்களது கையடக்கத் தொலைபேசி மற்றும் அதில் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் என்பனவற்றை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தல் மிகவும் முக்கியமானதாகும். iPhone ரக கையடக்க தொலைபேசிகள் அவற்றை வாங்கும் பொழுதே மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வசதியை நீங்கள் வேறாக தொலைபேசிக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனினும் அண்ட்ரோய்ட் வகை தொலைபேசிகளுக்கு நீங்கள் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இதனை எவ்வாறு மேற்கொள்வது என்ற செய்முறை பின்வரும் காணொளியில் வழங்கப்பட்டுள்ளது:

USB மறை குறியீடாக்கம் மற்றும் காப்பு (Backup)

ஒருUSB கருவி என்பது ஊடகவியலாளர்கள் தகவல் மற்றும் தரவுகளை சேமிக்கும் ஒரு இடமாகும். எனவே இந்த கருவிகளும் கணனிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்று பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான முதன்மைக் கருவிகளை காப்பு மேற்கொள்வதற்கும் ஒரு USB பயன்படுத்தப்படும். உங்களது தகவல்களை பல்வேறுபட்ட பிரதிகளாக வைத்திருப்பது உங்கள் தரவுகளுக்கு ஏதும் ஏற்படின் தரவுகளை மீட்க இயலுமாக இருக்கும். எனவே இது பரிந்துரை செய்யப்படுகின்றது. மறை குறியீடாக்கம் மற்றும் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளைகளில் பிரதிகள் வௌ;வேறு கருவிகளில் அல்லது கோப்புகளில் செமிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.