1.3. பயன்பாட்டில் உள்ள தரவுகள்


பயன்பாட்டில் உள்ள தரவுகள் என்பது உங்களது கருவியில் உயிர்ப்புடன் காணப்பட்டு ஆவணங்களாக அல்லது கொடுப்பனவுகளாக மாறிக் கொண்டிருக்கும் தரவுகளைக் குறிக்கின்றது. அவை அநேகமான சந்தர்ப்பங்களில் இவை நேரணுகு நினைவகத்தில் (Random Access Memory) அல்லது இடைமாற்று (Cache) நினைவகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த அத்தியாயம் இந்த தகவல்களை பாதுகாக்க காணப்படும் பல்வேறு பாதுகாப்பு நிரலர்கள் (Programs) மற்றும் செயல்கூறுகள் (Functions) பற்றி கலந்துரையாடுகின்றது.