2. பாதுகாப்பான தொலைபேசி அழைப்பை எவ்வாறு மேற்கொள்வது?

2. பாதுகாப்பான தொலைபேசி அழைப்பை எவ்வாறு மேற்கொள்வது?


இரகசியமான தகவல்களை உங்களது தகவல் மூலத்துடன் நேருக்கு நேர் பேசவே எப்போதும் முயற்சி செய்யுங்கள். மூன்றாம் தரப்பினால் உங்களது தொலைபேசி உரையாடல்கள் இலகுவாக ஒட்டுக் கேட்கப்படலாம், எனவே இரகசியமான விடயங்களை எல்லா வகையிலும் தொலைபேசியில் உரையாடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். Skype போன்ற பிரசித்தமான சேவைகள் முனைக்கு முனை மறை குறியீடாக்கத்தை உறுதிப் படுவத்துவதில்லை. WhatsApp, Signal அல்லது Wire போன்ற கருவிகள் இரண்டு கருவிகளுக்கு இடையான உரையாடலில் மறை குறியீடாக்கத்தை மேற்கொண்ட போதும் அவை 100 % பாதுகாப்பை உறுதி செய்வதில்லை.

உங்களது தகவல் மூலத்தை சந்திக்க ஒரு இடத்தை ஏற்பாடு செய்த பின்னர், உங்களது தொலைபேசியை வீட்டில் வையுங்கள் அல்லது அதை செயலிழக்க செய்து அதன் மின்கலத்தை கழற்றி எடுத்து விடுங்கள். இதன் மூலம் உங்களது தொலைபேசி இயங்கு நிலையில் இல்லாதிருப்பதை உறுதி செய்ய முடியும். மேலதிகமாக நீங்கள் Faraday Cage ரக கைத் தொலைபேசி மேலுறைகளைப் பாவிக்க முடியும் அவை மின்காந்த அலைககளைத் தடுக்கின்றன. Edward Snowden, உரையாடல்களின் அந்தரங்கத்தைப் பேண உரையாடல்களின் போது கருவிகளை வழக்கமாக குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மேலதிகமாக உங்களது தொலைபேசியில் உள்ள செயலிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு தடவையும் செயலி ஒன்றை உட்புகுத்தும் போதும் குறித்த செயலி உங்கள் தொலைபேசியில் உள்ள குறிப்பிட்ட செயற்பாடுகள், தரவுகள் அல்லது தகவல்களைக் கோரும். எனவே, முடிந்த அளவுக்கு செயலிக்கான அனுமதியைக் குறைப்பது அவசியமானது.


சுருக்கமாக, இந்த அத்தியாயத்தின் நோக்கம் பாதுக்காப்பான பணிச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் புலனாய்வு ஒன்றின் போது ஒருபோதும் 100மூ பாதுகாப்பு கிடைக்காது என்ற விடயங்களைக் கோடிட்டுக் காட்டுவதாகும். இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எவ்வாறு உங்களது தகவல் மூலத்தை பாதுகாப்பாகத் தொடர்பு கொள்வது மற்றும் அவரைத் தொடர்பு கொள்ளுமுன்னர் எவ்வாறான விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பவற்றுக்கான விளக்கங்களை வழங்குகின்றன. நீங்கள் பின்வரும் புலனாய்வு படிநிலைகளை எதிர்வரும் அத்தியாயங்களில் கற்க தயாராக இருப்பீர்கள்: உங்களது புலனாய்வின் அனைத்து அம்சங்களையும் எவ்வாறு கண்டு பிடிப்பது? சரியான கேள்விகளை உங்கள் தகவல் மூலத்திடம் சந்திப்பின் போது கேட்பது எவ்வாறு? அத்துடன், உங்களுக்கு தேவையான தகவல்களைப் பெற பயன்படுத்தக் கூடிய சிறந்த நேர்காணல் உத்தி என்ன?