2. ஒலி/ஒளிபரப்புக்காக எவ்வாறு எழுதுவது?

2. ஒலி/ஒளிபரப்புக்காக எவ்வாறு எழுதுவது?


குறிப்பு: இது ஒலிபரப்பு எழுதுதலுக்கான முழுமையான வழிகாட்டி அல்ல, எனினும் இது மொழிநடையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் புலனாய்வு ஒலிபரப்பு ஒன்றுக்காக விவரணம் ஒன்றை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் சில சாடைக் குறிப்புகள் ஆகும்


அனைத்து ஒலிபரப்பு செய்திகளும் காணொளிப் பதிவுகள் அல்லது ஒலிக் கூற்றுக்களைக் கொண்டிருக்கும். சூழமைவுக்கு ஏற்றபடி படம் அல்லது கூற்று பல கதைகளைக் கூறக் கூடும். சூழக் காணப்படும் வர்ணனையின் நோக்கம் நேயர்கள் உங்களது செய்தியை முழுமையாக விளங்கிக் கொண்டனர் என உறுதி செய்வதாகும்.

புத்தி சாதுரியம் மிக்க எழுத்து ஒரு பாரம்பரியமான படம் அல்லது சுவாரசியம் கூற்று ஒன்றை புதிய வெளிச்சத்தில் காண உதவ முடியும். வானொலியில் பதிவு செய்யப்பட்ட கூற்றுகளைச் சுற்றி எழுதப்பட்ட வானொலிப் பேச்சேடு உறுதியான சூழமைவை ஏற்படுத்துகின்றது. எனினும் தொலைக்காட்சியில் படங்கள், செய்தியின் தாக்கத்தில் 85% ஆன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சிறந்த எழுத்து வடிவம் சுவாரசியம் அற்ற படங்கள் அல்லது கூற்றுக்களை எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரதியீடு செய்வதில்லை. ஏனெனில் வாசகர்கள் அவற்றின் பால் ஈர்க்கப்ப்டாவிட்டால் அதிலிருந்து விலகி விடுவார்கள். இந்த இரண்டு விடயங்களிலும் உங்களது செய்தியை படங்கள் மற்றும் கூற்றுக்களை சுற்றி உருவாக்க வேண்டும். இது “காதுகளுக்காக எழுதுதல்”, படங்களுக்காக எழுதுதல்” அல்லது சத்தங்களுக்காக எழுதுதல்” என அழைக்கப்படும்.

நீங்கள் சம்பவ இடத்தில் கமராவின் மூலமாக ஒளிப்பதிவு செய்த தள அறிக்கையுடன் ஆரம்பம் செய்யுங்கள். பின்னர் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை உங்களது வர்ணனையில் மற்றும் நிலை மாற்றத்துக்கு பயன்படுத்தவும்.

  • (a) செய்தியின் மிக முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டுங்கள்
  • (b) படங்கள் அல்லது கூற்றுகள் சில விடயங்களை மாத்திரம் காண்பிக்கும் வேளை சமநிலையைப் வழங்குங்கள்.
  • (c) நேயர்கள் கவனம் செலுத்த வேண்டும் என நீங்கள் விரும்பும் விடயங்களை தெரிவு செய்து அழுத்திக் கூறுங்கள்
  • (d) வித்தியாசமான அல்லது கூற்றுகளை ஒன்றிணைத்து அவை நேரத்துடன் எவ்வாறு மாறுபடுகின்றன என விளக்குங்கள்
  • (e) படங்கள் அல்லது கூற்றுகளை சூழமைவுக்கு உட்படுத்துங்கள்
  • (f) மேலதிக கருத்து அல்லது விளக்கங்கள் படங்கள் அல்லது கூற்றுக்களை சுழல விடுங்கள் (எனினும் தகவல்களை தவறான புரிதலுக்கு உட்படுத்த அல்லது சூழமைவை விட்டு வெளியே எடுக்க வேண்டாம்)

அறிவிப்பாளர் அல்லது நிருபர் இந்த முன்னுரிமைகள் தொடர்பில் ஊக்கம் தளராமல் இருக்க முடியும் அத்துடன் இருக்க வேண்டும். எனினும் இதன் பொருள் அவன் அல்லது அவள் செய்தி மற்றும் நேயர்கள் இடையே தொடர்ச்சியாக குறுக்கீடுகளை மேற்கொண்டு ஒரு நிரப்புதலை அல்லது தடையை உருவாக்க வேண்டும் என்பதல்ல. உங்களது செய்தி தொடர்பான விடயம் ஒன்றை நபர் ஒருவரின் குரலில் சொல்லப்படும் வேலை அந்தக் குரல் நிலத்தில் உள்ள நபரொருவரின் குரலாக பொழிப்புரையுடன் வழங்குவது விரும்பத் தக்கது.

  • ஒலிபரப்பு மற்றும் அச்சு ஊடகம் என்பவற்றின் இடையான வேறுபாடுகளில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன்
  • வாசகர்கள் ஒரு விடயத்தை வாசிக்கும் பொழுது விடயம் விளங்காத பட்சத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டு பின்னர் மீண்டும் வாசிக்க முடியும். ஒலிபரப்பு ஒருதடவை மாத்திரம் நிகழ்வதுடன் அது நேயர்களை பறந்து கடக்கக் கூடியது.
  • வாசிக்கும் பொழுது தவறுகள் வெளிவரும். வாசகர் எந்த வேளை பக்கத்தைப் புரட்டினாலும் தவறுகள் அங்கே காணப்படும். எனினும் ஒலிபரப்பில் வாசகர்கள் தவறுகளை முதல் தடவை நோக்கலாம் அல்லது அவர்களால் ஒரு போதும் நோக்க முடியாது.
  • வாசகர்கள் வாசிப்பில் ஈடுபடும் போது அங்கு தெளிவான தலையங்கங்கள், இணைக் கூற்றுகள் மற்றும் பந்திகள் போன்ற தெளிவான சமிக்ஞைகள் பக்கத்தில் சஞ்சரிக்க உதவி புரியும். ஒளிபரப்பு ஒன்றின் இடைநடுவில் இணையும் புதிய நேயர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என அறிவது கடினமாக இருக்கும்.
  • வாசகர்கள் வாசிப்பை இடை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது பணியில் ஈடுபடலாம். அவர்கள் திரும்ப வரும்போது எவற்றையும் தவற விடாமல் நிறுத்திய இடத்தில் இருந்து வாசிப்பைத் தொடர முடியும். எனினும் ஒளிபரப்பில் குறித்த பகுதி பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாத பட்சத்தில் நேயர்களால் வாசிப்பில் உள்ள அந்த வசதிகளைப் பெற முடியாது.
  • செய்தி ஒளிபரப்புகள் அது சொல்லப்படும் விடயம் தொடர்பில் அதிக ஆதாரங்களை வழங்குகின்றது (உதாரணமாக குரல் ஒலிகள் மற்றும் படங்கள்) அது நம்பகத் தன்மையைக் கூட்டுவதாக அமையக் கூடும் (அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் அதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்). இதே காரணத்துக்காக, அது வலுவான முறையில் உண்மையை திரித்துக் கூற முடியும்.
  • ஒளிபரப்புகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன, வலையொலி (pழனஉயளவ) விதிவிலக்காகும். அத்துடன் அங்கு செய்திப் பத்திரிகை போன்ற தொட்டுணரக் கூடிய பொருட்கள் காணப்படாது.
  • செய்தி ஒலிபரப்புகளில் கவனம் செலுத்துவது கடினமாகும், ஏனெனில் அது வாசகர்களை அதி உயர் வேகத்தில் கடந்து செல்கின்றது. எனவே நேயர்கள் ஒரு விபரமான நினைவை விட கருத்து ஒன்றையே பெற்றுக் கொள்வார்கள். இதன் காரணமாகவே அனைத்தும் அடங்கிய பொதி ஒன்று முக்கியமானது.
  • செய்தி ஒளிபரப்பை நோக்க உயர்நிலை எழுத்தறிவு தேவையில்லை, எனினும் விரைவாக அசையும் மற்றும் மாறுபடும் செய்திகளில் இருந்து பொருளைப் பெற சிறந்த பொது அறிவு தேவைப்படலாம்.
  • செய்தி ஒளிபரப்புகள் நரை நிற செய்தித் தாள்களை விட பார்வைக்கு அல்லது கேள்விக்கு பளபளப்பானதாக இருக்கின்றன. எனினும், வாசிப்பதற்கு அதிக நேரம் எடுத்த போதும் வாசகர்கள் எழுதப்பட்ட செய்தி ஒன்றில் இருந்து அதிக விபரம் மிக்க தகவல்களைப் பெறுவர்.

இந்த அனைத்துக் காரணங்களுக்காகவும் – ஒலிபரப்பு ஊடகத்தின் இயல்பு மற்றும் நேயர்கள் அதை நுகரும் விதம் என்பவை காரணமாக- ஒளிபரப்புக்கு அச்சு ஊடகத்தில் பயன்படுத்தப்படுவதை விட வேறுபட்ட மொழிநடை அணுகுமுறை அவசியமாகும். எனினும் ஊடகத்தின் வகை வேறுபாடின்றி நீங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் அல்லது இடத்தில் குறிப்பிட்ட அளவு உண்மைகளை எடுத்துச் சொல்லப் போராடுகின்றீர்கள். வாசகர்களால் உடனடியாகக் கவரப்படக் கூடிய நட்சத்திர அந்தஸ்துள்ள உண்மை ஒன்றைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். அத்துடன் உங்களது இந்த ஆரம்பத்தை புலனாய்வுப் பொதியை ஆரம்பிக்க பயன்படுத்துங்கள்.