எம்மைப் பற்றி

புலன் விசாரணை ஊடகவியலாளர் கையேடு என்பது கொன்ரட் அடினோர் ஸ்டிப்டங் (Konrad Adenauer Stiftung - KAS) நிறுவனத்தின் உலக ஊடக நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு செயல்;திட்டமாகும்..இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் ஜோகனஸ்பேர்க் ( ஆபிரிக்க உப சகரா), சிங்கப்பூர் (ஆசியா) மற்றும் சோபியா (வட கிழக்கு ஐரோப்பா) போன்ற பிரதேசங்களில் உள்ள ஊடக நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கையேடானது மிகவும் கடினமான சூழலில் ஊடகவியலாளர்களுக்கு புலன் விசாரணை ஊடகவியல் அறிக்கையில் மைய திறன்களை வழங்கும் வகையிலும் வேட்டை நாய் போன்ற கடமையை திறம்படச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் பணியின் விளைவுகளானது காணப்படுகின்ற உள்;ர் நிறுவனங்களை வலுப்படுத்துவதாகவும் அல்லது ஜனநாயக கட்டமைப்பு காணப்படாத இடங்களில் அவற்றை நிர்மாணிப்பதற்கான ஒரு கருவியான உபயோகப்படுகின்றது. இந்த கையேடானது 7 வருடங்களுக்கு முன்னர் KAS நிறுவனத்தினால் ஆபிரிக்கா ஊடக நிகழ்ச்சித்திட்டத்தின் போது பிரசுரிக்கப்பட்ட வழிகாட்டியின் புதிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும். இது கிட்டதட்ட 30000 நபர்களால் வருடந்தோறும் அணுகப்பட்ட ஒரு வழிகாட்டியாகும். எமது 1வது வடிவத்தின் வெற்றியானது KAS நிறுவனம் உலக ஊடக நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இதனை மீளமைத்து சர்வதேசப்படுத்த தீர்மானித்தமைக்கான காரணமாகும்.

ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் புலன் விசாரணை ஊடகவியலாளது மிகவும் சவால் மிக்க ஒரு சூழ்நிலையில் தான் இடம்பெற்று வருகின்றது. ஆகவே சில அத்தியாயங்களானது அவற்றை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேடானது இவ்வாறான சவால்களுக்கு எதிர்நோக்கும் ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்கின்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்;டுள்ளது. இங்கு ஊடக சட்டங்களை உதாசீனப்படுத்தல், பயங்கரவாத தடைகளுக்கு எதிரான ஒழுங்குவிதிகள், வெளிப்படு தன்மை இல்லாத கலாச்சாரம் மற்றும் வரையறுக்கப்;பட்ட வளங்கள் போன்ற சவால்களை குறிப்பிடலாம்.

இந்த IJM கையேடானது ஒரு பயிற்றுவிக்கும் கருவியாக தொழிற்படுகின்றது. இது இதனை வாசிப்பவர்களுக்கு அவர்களது அறிவை பரிசோதணை செய்து பார்ப்பதற்கான வினாக்களை ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் கொண்டுள்ளது. அதே போன்று பொருத்தமான சம்பவக்குறிப்புக்கள் புதுமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

The Konrad Adenauer Stiftung (KAS) என்பது ஜேர்மன் நாட்டின் அரசியல் நிறுவனம் ஆகும். இது உலககளவில் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சியை மேம்படுத்தும் அதற்காக பிரச்சாரம் செய்யும் அதே போன்று மனித உரிமைகளை அமுல்படுத்தும் ஒரு நிறுவனமாகும். இதன் காரணமாக KAS ஆனது சுதந்திர மற்றும் நடுநிலையான ஊடகத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதோடு, அரசியல்வாதிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகக் குழுக்க்களை பயிற்சியினூடாக கல்வியூட்டல் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. ஒரு சமூகத்தின் வெற்றியானது நிலைத்திருக்கும் தன்மை, வினைத்திறன், மற்றும் வெளிப்படுத்தன்மையிலேயே தங்கியுள்ளது. இது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்புடையதொன்றாகும்.

இந்தப்பணியானது ஜேர்மன் அரசியலமைப்பில் காணப்படுகின்ற பெறுமதி அடிப்படையிலான முறைமை மற்றும் சுதந்திரம் மற்றும் நீதி என்பவற்றின் அடிப்படைகள், ஒற்றுமை மற்றும் சமாதானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே KAS நிறுவனம் பணியாற்றுகின்றது. இதனது செயற்பாடுகளானது கிறிஸ்டியன் சமூக பெறுமதிகளுக்கான அர்ப்பணிப்புக்களை அடிப்படையாகவும் லிபரல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது. எமது தூர நோக்கானது கட்டமைக்கப்பட்ட அடிப்படைகளை கொண்ட மற்றும் ஒற்றுமையான ஒருவருக்கொருவர் உதவக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குதல்.அது சுதந்திரம் மற்றும் நீதி என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலும், சுயாதீளமான அடைவ மற்றும் கூட்டுறவு அடிப்படையிலும் பொது நலனில் அக்கறை செயல்பட வேண்டும்.