இந்த அத்தியாயம் புலனாய்வு செய்தித் திட்டமிடலில் உள்ள படிநிலைகள் பற்றிய விளக்கத்தை வழங்குகின்றது. உங்களிடம் நீங்களே கேள்வி கேட்பது, உங்களது தகவல் மூலங்களை கேள்விகள் மூலம் தூண்டுவதில் தொடங்கி பாதீடு (வரவு-செலவு) உருவாக்கம் என்பவை பற்றி விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உதாரணமும் புலனாய்வு அறிக்கையிடல் திட்டத்தில் திட்டமிடல் மிக முக்கியமானது என்பதை விளக்குகின்றது. அத்துடன் நம்பகத்தன்மை வாய்ந்த மூலங்களை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் செய்தி விபரங்களை சுவாரசியம் மிக்க செய்தியாக சான்று அடிப்படை அறிக்கையிடல் மூலம் எவ்வாறு கதையாக தொகுப்பது போன்ற விடயங்களையும் அறிமுகம் செய்கின்றது.