1.1. யோசனை ஒன்றில் இருந்து கருதுகோள் ஒன்றினை நோக்கி


செய்தி யோசனை ஒன்றைப் பற்றி கவனமாகச் சிந்தித்த பின்னர் இந்த எண்ணங்களை உங்கள் செய்தி விடையளிக்கக் கூடிய குறிப்பிட்ட கருதுகோளாக அல்லது கேள்விகளாக மாற்ற வேண்டும். நீண்ட அல்லது குறுகிய – ஒன்று அல்லது இரண்டு வசனங்களைக் கொண்ட ஒரு கருதுகோள் அல்லது கேள்வி எவ்வகையான ஆதாரங்கள் இதனுடன் தொடர்பு பட்டவை மற்றும் எவை இதை நிறுவக் கூடியவை என்பவற்றை தீர்மானிக்க உதவும். மேலதிகமாக்

  • எல்லைகள் மற்றும் இலக்குகளை வழங்குவதால் உங்களது பணியை முகாமைத்துவம் செய்யக் கூடியதாக மாற்றும்
  • அது உங்களது யோசனையை தொடர்பாடவும் மற்றவர்களை ஏற்க வைக்கவும் உதவும்
  • அது நேரம் மற்ற வளங்களை துல்லியமாக பாதீடு செய்ய உதவும்
  • அது ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொருத்தப்பட்டு வரன்முறைகளை வழங்கும்
  • அது தெளிவான இறுதிச் செய்திக்கான அடித்தளத்தை இடும்

ஒவ்வொரு செய்தி யோசனையும் இறுதிச் செய்திக்கான பல கருதுகோள்கள் அல்லது வழிகளைக் உருவாக்க முடியும். உதாரணமாக வறுமை, தனியார் மயமாக்கல் மற்றும் நீர் தொடர்பான நோய்கள் பற்றிய செய்திகளுக்கு இரண்டு தொகுதி கருதுகோள்கள் இருக்க முடியும்.

(A) தனியார் மயமாக்கல் ஏழைகள் குடிநீர் வாங்குவது அதிக செலவு மிக்கதாக ஆக்கியுள்ளது, எனவே அவர்கள் சுகாதாராமற்ற நீர் மூலங்களில் இருந்து குடி நீரைப் பெறுகின்றனர், இது நோய்ப் பரம்பலுக்கு வழிவகுத்துள்ளது.

(B) தனியார் நீர் நிறுவனங்கள் செலவுகளைக் குறைப்பவை, எனவே நீர் பாதுகாப்பு நியமங்கள் குறைவடைகின்றன, இது நோய்ப் பரம்பலுக்கு வழிவகுக்கின்றது.

எனினும் நீங்கள் இந்தக் கருதுகோள்களை கவனமாக மீளாய்வு செய்ய வேண்டும்: அவை என்ன எடுகோள்களை கொண்டுள்ளன, அத்துடன் அந்த எடுகோள்களின் செல்லுபடித்தன்மை பற்றி நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? இந்த இரண்டு கருதுகோள்களும் நோய்ப் பரம்பலின் மூலம் தொடர்பான சோதிக்கப்படாத எடுகோள்களில் தங்கியுள்ளன: கருதுகோள் யு நீர் வழங்கல்கள் பிழையானவை எனக் கருதும் அதே வேலை கருகோள் டீ நீர் சுத்திகரிக்கும் வசதி நியமங்கள் தொடர்பாக அக்கறை காட்டவில்லை என்ற எடுகோளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு கருதுகோள்களும் எங்கே நோய் ஆரம்பமாகியது என்ற ஆழமான கேள்வியில் தங்கியிருப்பதால் நீங்கள் இந்த சாத்தியங்கள் தொடர்பிலும் நோக்க வேண்டியுள்ளது. எனவே மிகச் சிறந்த கருதுகோள் ஒன்று பின்வருமாறு அமையும்:

(C) அண்மையில் ஓ மாநகர சபைப் பகுதியில் நீரினால் ஏற்பட்ட நோய்ப்பரம்பல் தனியார் மயப்படுத்தப்பட்ட நீர் வழங்கலில் அல்லது உத்தியோகபூர்வமற்ற நீர் மூலங்களில் இருந்து உருவாகியது.

செம்மைப் படுத்தப்பட்ட இந்த எடுகோள் நீங்கள் மீண்டும் உங்களது செய்தி சுருக்கத்துக்கு செல்ல அனுமதிப்பதோடு தெளிவான மற்றும் பக்கச்சார்பற்ற புலனாய்வை திட்டமிட உங்களுக்கு உதவும்.

(D)  நீர் வழங்கல் தனியார் மயப்படுத்தப்பட்ட ஓ மாநகர சபைப் பகுதியில் அண்மையில் பாரிய நீரினால் ஏற்படும் வயிற்றோட்டம் பரவியது. இந்த செய்தி எவ்வாறு அந்த நோய் ஆரம்பமானது என்று கண்டறிய முயற்சிக்கும். மக்கள் நீருக்கு பணம் செலுத்த இயலாமையினால் மாசுபட்ட நீர் நிலைகள் மற்றும் கிணறுகளை நீரைப் பெற பயன்படுத்தியதால் ஏற்பட்டதா? அல்லது, தனியார் நீர் வழங்கல் கம்பனி செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தனது சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதியல் நீர்த் தூய்மை நியமங்களைக் கடைப்பிடிக்காமையினால் ஏற்பட்டதா? இந்த நோய்ப் பரம்பலை ஏற்படுத்திய காரணங்கள் பற்றி நாம் அறிவியலாளர்களுடன் பேசுவோம். நாம் வறிய மக்களை அவர்களின் நாளாந்த நீர்த் தேடல் தொடர்பில் பின் தொடர்வோம். அத்துடன் நீர் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதிக்கு சுயாதீன துறை சார் வல்லுனருடன் சென்று அவர்களின் பாதுகாப்பு நியமங்கள் தொடர்பில் நோக்குவோம். எவ்வாறு இந்த நோய் ஆரம்பமாகியது என்பதைக் கண்டறிந்தவுடன் குறித்த நோய் மீண்டும் ஏற்படாதிருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் நோக்குவோம்.

தெளிவாக வரையறுக்கப்பட்ட கருதுகோள் ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்பு நீங்கள் தகவல் மூலங்ககளைக் கண்டறிதல், சான்றுகளுக்கான வரன்முறைகளை உருவாக்குதல், ஆய்வு செயன்முறை ஒன்றைத் தீர்மானித்தல், கால எல்லைகளை வரையறுத்தல் மற்றும் பாதீடு ஒன்றை உருவாக்குதல் உள்ளடங்கிய ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இந்த அத்தியாயத்தின் பின்வரும் பகுதிகள் எந்த படிநிலைகள் எவ்வாறு திட்டமிடப்படல் வேண்டும் என்று மேல்நோக்கு ஒன்றை வழங்கும். இந்த வழிகாட்டி நூலின் ஏனைய அத்தியாயங்கள் இந்த படிநிலைகள் அனைத்தும் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விபரமான பார்வையை வழங்கும்.