1.3. முறைமை


எடுத்த உடனேயே தேவையான மூலங்கள் அல்லது ஆவணங்களைக் கண்டறிவது எப்போதும் இலகுவான விடயம் அல்ல. இவ்வாறான விடயங்களில் ஊடகவியலாளர் ஒருவர் அவற்றைப் பெற புத்தாக்கமான முறைகளை வடிவமைக்க வேண்டும். இங்கு நாம் எமது ஆய்வை மேற்கொள்ள கல்வி நடவடிக்கை சார் முறைமைகளைப் பின்பற்ற முயற்சிக்கின்றோம், அது எமது ஆய்வை மேற்கொள்ள அந்த முறையைப் பயன்படுத்துகிறோம் என்பதே அதன் பொருள் ஆகும். காணப்படும் பல முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு ஆவணத் தேடல், களப்பயணம் அல்லது அவதானிப்புகள், நேரடி நேர்காணல்கள் மற்றும் ஏனைய அணுகுமுறைகளை ஒன்றிணைத்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். எந்த மூலங்களை பயன்படுத்துவது, ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நேரத்தை செலவிடுவது, என்ன குறுக்குப் பரிசோதனை ஒழுங்குகள் காணப்படுகின்றன மற்றும் இந்த படிநிலை முழுவதும் எவ்வாறு பணியை முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களில் நீங்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

உங்களது கருதுகோளை செல்லுபடியாக்கும் ஆதாரங்களையே நீங்கள் எப்போதும் தேட வேண்டும். இதை நீங்கள் மறைமுகமாக சில விடயங்கள் அநேகமாக இடம்பெற சாத்தியமான சூழமைவு, பின்புலம், வரலாறு அல்லது காலநிலை என்பவை கொண்ட காட்சி ஒன்றை கட்டி எழுப்புவதன் மூலம் மேற்கொள்ள முடியும். எனினும் உங்களின் மூலங்களில் இருந்து தொடர்புடைய ஆதாரங்களை சேகரிக்குமிடத்து இந்த விடயத்தை உங்களால் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்.

முறைமைத் திட்டமிடலின் ஒரு முக்கிய பகுதி நீங்கள் சந்திக்க எதிர்பார்க்கும் தடைகள் தொடர்பில் முன்னரே சிந்திப்பதாகும். ஒருவேளை குறித்த ஆவணம் ஒன்றுக்கான அணுகுதல் கிடைக்காவிட்டால் அல்லது முக்கிய மூலம் ஒன்று உங்களிடம் பேச மறுத்தால் உங்களது மாற்றுத் திட்டம் என்ன? மாற்று ஆதாரங்களை சம பலம் வழங்கும் வகையில் எவ்வாறு நிறுவுவீர்கள்?

உங்களது முறைமையைத் தீர்மானித்த பின்னர் புலனாய்வுக்கான கால அட்டவணை மற்றும் பாதீடு என்பவற்றை உங்களால் உருவாக்க முடியும். கால அட்டவணை என்பது உங்களது புலனாய்வு எவ்வளவு காலத்துக்கு செல்லும் என நீங்கள் கணக்கிடுவதாகும்: ஆவணத் தேடலில், நேர்காணலில், இணையத்தேடலில் மற்றும் எழுதுவதில் எவ்வளவு காலம் செலவழிப்பது என்பது பற்றியதாகும்.

பல்வேறுபட்ட பணிகளுக்கு நேரம் பயன்படுத்தப்படும் அதேவேளை உங்களது கால அட்டவணையை உருவாக்குததில் கால எல்லைகள் மற்றும் போட்டி என்பன இரண்டு ஏனைய முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன. உங்களது செய்தி உருவாக்கப்பட்டு அல்லது தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் சமர்ப்பிக்கும் கால எல்லையில் இருந்து பின்னோக்கி பணி புரியுங்கள். அத்துடன் தேவையான நேர்காணல்கள் மற்றும் ஆய்வு என்பவற்றை உங்களது கால எல்லைக்குள் ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு செய்தி ஆசிரியருக்காக செய்தி ஒன்றை தயாரிப்பவராக இருப்பின் உங்களது ஆரம்பப் புள்ளியில் இருந்து பணி புரிய ஆரம்பியுங்கள். இதன் மூலம் உங்களால் செய்தி தயாராக இருக்கும் தினத்தை எதிர்வு கூறக் கூடியதாக இருக்கும். பேச்சுவார்த்தைகள் இந்த தொடர் செயன்முறையின் பகுதியாக வழமையாக அமைகின்றன, எனினும் உங்களது கால அட்டவணைக்கு ஏற்ப நீங்கள் பணி புரியும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தேவைப்படும் மேலதிக நேரத்தை பேச்சுவார்த்தை மூலம் பெறக் கூடியதாக இருக்கும்.

உங்களது செய்தி மக்கள் கரிசனை தொடர்பான சூடான விடயமாக இருப்பின், போட்டி ஊடக அமைப்புகள் அவற்றை தேடிக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் உண்டு. இதை நீங்கள் அறிந்திருப்பின், முதலில் பிரசுரம் செய்யும் நோக்கில் உங்களது பணியினை விரைவு படுத்துதல் அவசியமானது. எனினும் புலனாய்வு அறிக்கையிடல் அவசரப்படுத்தப்பட்டதாக அல்லது கஞ்சத்தனம் கொண்டதாக அமைவது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்த காரணமாக அமையலாம். கால அட்டவணை உங்கள் முன்னே இருப்பதன் காரணமாக இசைந்திணைகின்ற மற்றும் போதிய அளவான விடயங்களை உங்களது புலனாய்வு நடவடிக்கைகள் முற்றுப் பெறாத நிலையிலும் பிரசுரிக்கக் கூடிய திகதி ஒன்றை உங்களால் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.