2.1. முன்னுரிமைப்படுத்தல்


விசேடமாக உங்களது புலனாய்வின் ஆரம்பத்தில் உங்களால் இயன்ற அளவு வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உணரக் கூடும். எனினும் இது எல்லா வேளைகளிலும் சிறந்த மூலோபாயமாகக் கருதப்பட முடியாதது. வாசித்தல் மிகவும் மெதுவான செயன்முறை ஆகும். விசேடமாக நீங்கள் இணையவழித் தேடலில் ஈடுபடும் போது ஒரு சில அல்ல சில நூற்றுக் கணக்கான தொடர்புடைய உசாத்துணைகளை பெறக் கூடும். எனவே, உங்களது இணைய வழித்தேடல் மிகவும் பரந்ததாக இல்லாமல் இருக்க (மேற்கோள்களுக்குள் உங்களது முக்கிய பதங்களை இடுவதன் மூலம் குறித்த பதங்கள் அனைத்தும் உள்ளடக்கிய கட்டுரைகளை மாத்திரம் பெற முடியும்) வேண்டும். நீங்கள் பின்புல தகவல்களை மேலெழுந்தவாரியாக வாசிக்கலாம். சுவாரசியம் மிக்க இணைய உசாத்துணைகளை புத்தகக்குறி (Bookmark) இட்டு வைப்பதன் மூலம் எதிகாலத்தில் அவற்றை மீண்டும் தேடுவதில் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி ஏற்படாது.

அத்துடன் நழுவல் தன்மை மிக்க ஒற்றை துறைசார் வல்லுனரை தேடிக்கொண்டிருப்பதில் உங்களது நேரத்தை விரயமாக்க வேண்டாம். உங்களது தொலைபேசித் தொடர்பு பட்டியலில் உள்ள நபர்களில் பொருத்தமானவர்களுடன் உங்களால் முடிந்த அளவு தொடர்பு கொண்டு அதிகமான பொருத்தமான புதிய கேள்விகளைக் கேளுங்கள். அத்துடன் நீண்ட செய்தியை உருவாக்கும் வேளை உரையாடிய நபர்களை மீண்டும் அடைந்து தொடர்புடைய புதிய கேள்விகளைக் கேளுங்கள். இந்த கட்டத்தில் நீங்கள் பரந்துபட்ட தேடலில் ஈடுபட வேண்டுமே அன்றி ஆழமான தேடலில் அல்ல.

சிறிய நேர அட்டவணை ஒன்றை உருவாக்குங்கள்; உங்களது ஆய்வின் ஒவ்வொரு கட்டமும் எந்த அளவுக்கு முக்கியமானது மற்றும் எவ்வளவு நேரத்தை குறித்த ஒவ்வொரு கட்டத்துக்கும் உங்களால் செலவிட முடியும் எனத் தீர்மானியுங்கள். நழுவுகின்ற நபர், ஆவணம் அல்லது படங்களை தேடுவதில் மேலதிக நேரத்தை விரயமாக்க வேண்டாம். உங்களுக்கு தேவையானதை அடைய மாற்று வழிகளைக் கண்டு பிடியுங்கள்.