அத்தியாயம் 1 யார் அந்த புலனாய்வு ஊடகவியலாளர்?

அத்தியாயம் 1 யார் அந்த புலனாய்வு ஊடகவியலாளர்?

இந்த அத்தியாயம் புலனாய்வு ஊடகத்துறை செயற்பாட்டை வரையறுப்பதோடு அதன் குறிக்கோள் மற்றும் நோக்கங்கள் என்பவற்றை எடுத்தியம்புகிறது. அத்துடன் இங்கு வழமையான ஊடகவியல் மற்றும் புலனாய்வு ஊடகத்துறை என்பவற்றின் இடையே காணப்படும் வேறுபாடுகளின் மீதான பிரதிபலிப்புகளை தருகின்றது. மேலும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கொண்டிருக்க வேண்டிய திறன்கள் மற்றும் தரங்கள் என்பனவற்றுடன் புலனாய்வு அறிக்கையிடலுக்கு பொருத்தமான குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் அணுகுமுறைகள் என்பனவும் இந்த அத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன.