1.2. புலனாய்வு அறிக்கையிடல் பற்றிய கட்டுக்கதைகள்


அது கவர்ச்சிகரமானதுடன் பிரபலமாவதற்கான ஒரு புள்ளியாக அமையும்.

இரகசியமாக ஜனாதிபதியின் நபர்கள் என்ற போர்வையில் வாட்டர்கேட் என்ற அமெரிக்க ஊழலை வெளிக்கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்கள் எவரும் பிரபலமானவர்கள் அல்ல எனினும் அவர்களின் வேடத்தில் நடித்த ரொபேர்ட் ரெட்போர்ட் மற்றும் டொனால்ட் ஹோப்மன் போன்ற நடிகர்கள் பிரபலமானவர்கள். எனவே, விழித்துக் கொள்ளுங்கள்! யதார்த்தத்தில் புலனாய்வு ஊடகவியல் கடினமானது, சுவையற்றது அத்துடன் சிலவேளைகளில் அயாயகரமானது.

ஊடகவியலாளர்கள் தாம் அறிக்கையிடும் செய்தியை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

புலனாய்வு ஊடகத்துறை என்பது ஒரு பொதுச் சேவை ஆகும். அது ஒரு ஆணவத்துடன் கூடிய பயணமல்ல. ஒரு புலனாய்வு ஊடகவியலாளராக இருப்பது தொழில்சார் மற்றும் ஒழுக்க நியமங்களை உடைப்பதற்கான உரிமையை வழங்கி விடாது.

புலனாய்வு ஊடகவியலாளர் என்பவர் தனித்து சாகசம் புரியும் நபராவார்.

திரைப்படம் தயாரிப்பு புள்ளி நோக்கில் ஒரு தனித்த கதாநாயகனாக இருப்பது சாத்தியமானது. ஏனெனில் அங்கு செயற்பாடுகள் அனைத்தும் ஒரு தனிமனிதனைச் சூழ வளம் வர முடியும். எனினும் புலனாய்வு ஊடகத்துறை குழுப் பணியாக அல்லாதவிடத்து பேண்தகு தன்மையைக் கொண்டிருக்க மாட்டாது.

புலனாய்வு ஊடகத்துறை பிரதானமாக தனியார் ஊடகங்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

இது பகுதியளவில் உண்மையாகும். எனினும் அரசாங்க ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராக அதிர்வுகளை ஏற்படுத்தும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு நன்கு அறியப்பட்ட உதாரணங்கள் காணப்படுகின்றன.

புலனாய்வு ஊடகத்துறையானது கெட்ட விடயங்களில் மாத்திரமே கவனக்குவிவைக் கொண்டுள்ளது.

சமூகங்கள் மற்றும் அவற்றுக்கு சேவை புரியும் ஊடகங்கள் என்பவற்றின் முன்னுரிமை பிழையான விடயங்களைக் கண்டறிவதும் அவற்றைத் திருத்துவதுமாகும். எனினும் புலனாய்வு ஊடகத்துறைக்கு நேர்மறையான விடயங்களைக் கண்டறியும் வகிபாகம் ஒன்றும் உள்ளது. உதாரணமாக, எதிரிடையாக செயற்படும் சமமற்ற, மக்களின் அல்லது சமூகங்களின் எதிர்மறை பிரதிவிம்பம் உண்மையான மற்றும் சிறந்த புலனாய்வுச் செய்திகளின் அடிப்படையாக அமையலாம். அதற்கு புறம்பாக சேற்றை வடித்தல் என அறியப்படும் இந்த வகையான புலனாய்வு ஊடகத்துறை பொது மக்களை கோபமடையச் செய்யும். எளிமையான, சர்ச்சைகளை உருவாகும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புலனாய்வு ஊடகத்துறை நடவடிக்கைகள் மக்கள் ஏனையோரின் அந்தரங்க வாழ்வு பற்றிப் பேசுதல் தவிர்த்த வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருப்பதில்லை. புலனாய்வை மேற்கொள்ள பெறுமதியான விடயங்கள் தனிநபர் துர்நடத்தைக்கு மேலாக பொது நலன்களை உண்மையாக பாதிக்கும் விடயமாக அமைய வேண்டும்.

புலனாய்வு அறிக்கையிடல் என்பது சிறந்த அறிக்கையிடல் ஆகும்.

ஊடகவியலாளர்கள் எனப்படுவோர் சமூகத்தின் காவலர்கள், அவர்களின் பணி பிழைகளைக் கண்டறிவது, குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் மீது விரல்களை நீட்டுவது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கையிடலை மேற்கொள்வது என்ற பாரம்பரியமான நோக்கில் இருந்தே இந்த வரைவிலக்கணம் பெறப்படுகின்றது. அத்துடன் இது நிச்சயமாக அவர்களின் வகிபாகத்தின் ஒரு பகுதியாகும். ஊழல் மிக்க தனிநபர்கள் தடுக்கப்பட வேண்டும். எனினும் புலனாய்வு அறிக்கை ஒன்று குற்றவாளிகளுக்கு மேலதிகமாக அவர்களின் இந்த நடத்தையை அனுமதிக்கும் பிழையான முறைமையை தொடர்பில் நோக்காத விடத்து அது புதிய குற்றவாளிகள் மீண்டும் அதே பிழையை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே அமையும் (அவர்கள் குறித்த பிழையை எவ்வாறு சிறப்பாக மேற்கொள்வது என்ற அறிவை வழங்கும் சாத்தியமும் உண்டு). புலனாய்வுச் செய்தி ஒன்று காணப்படும் அடிப்படைப் பிரச்சனைகளை அடையாளம் காண்பதுடன் காணப்படும் ஓட்டைகளை அடைக்கக் கூடியவர்களை அருட்டக் கூடியதாகவும் அமைய வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் அவற்றை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் புலனாய்வுச் செய்தி அதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும். எனவே, புலனாய்வு ஊடகவியலாளர்கள் சிறந்த அறிக்கையிடலுக்கு தேவையான திறன்களான அவதானித்தல், ஆய்வு மற்றும் விடைகளைத் தேடுவதற்கான உறுதிப்பாடு என்பவற்றை கொண்டிருக்க வேண்டும். எனினும் இந்த வரன்முறைகள் மாத்திரம் அவர்களின் பணிகளை முழுமையாக வரையறை செய்ய மாட்டாது அத்துடன் ஏனைய துறைகளில் இருந்து அவர்களின் துறையை தனித்துவம் வாய்ந்ததாகக் காண்பிக்காது.