அத்தியாயம் 2 செய்தி ஒன்றைக் கண்டு பிடிக்கத் தயாராகுதல்!

அத்தியாயம் 2 செய்தி ஒன்றைக் கண்டு பிடிக்கத் தயாராகுதல்!

ஒவ்வொரு செய்தியும் ஒரு எண்ணக்கரு ஒன்றுடனேயே ஆரம்பமாகும் அத்துடன் இந்த அத்தியாயம் அந்த எண்ணக்கரு எங்கு உருவாகின்றன என விளக்குகின்றது. அந்த எண்ணக்கருக்கள் செய்திப்பத்திரிகைகள், தகவல் மூலங்களுடன் உரையாடுதல், செல்வாக்கு மிக்க நபர்களை சந்தித்தல் அல்லது பரந்து பட்ட புதிய விடயங்களைக் கண்காணித்தல் என்பவற்றின் ஊடாக உருவாகலாம். அத்துடன் இந்த அத்தியாயம் சமூக வலைப்பின்னல் தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றன புதிய செய்தி வெளியீடு மற்றும் அதன் தொடர்ச்சி என்பவற்றைக் கண்காணிப்பதில் எவ்வாறு முக்கியத்துவம் மிக்க வகிபாகங்களைக் கொண்டுள்ளன என்பதிலும்; கவனக் குவிவைக் கொண்டிருக்கும். புலனாய்வு ஊடகத்துறை என்பது உங்களது ஆறுதல் அல்லது பரீட்சயமான வலயத்தில் இருந்து வெளி நோக்கித் தள்ளுதல், தெரியாதவற்றை ஆராய்தல் மற்றும் கணக்கிடப்பட்ட அபாய நேரிடர்களை மேற்கொள்ளல் பற்றியதே ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும் அத்துடன் எப்போதும் நீங்கள் விழிப்பு மிக்கவராக இருக்க வேண்டும்.