2. சாடைக் குறிப்பு (hint), வதந்திகள் மற்றும் யதார்த்தங்கள் என்பவற்றை எவ்வாறு உறுதி செய்வது?

2. சாடைக் குறிப்பு (hint), வதந்திகள் மற்றும் யதார்த்தங்கள் என்பவற்றை எவ்வாறு உறுதி செய்வது?


ஊடகவியலாளர்கள் செய்தி ஒன்றின் அனைத்து பக்கங்களையும் புலனாய்வு செய்ய வேண்டும். இதில் பிரிந்த தரப்புகள், அவற்றின் இடையான பதற்றங்கள் மற்றும் குற்றம் சாட்டுபவர், குற்றம் சாட்டப்படுபவர் ஆகியோரின் நடத்தைகளும் உள்ளடங்குகின்றன. எனினும் துப்புகள், கிசுகிசுக்கள், தனி நபர் அனுபவங்கள் அல்லது ஆய்வின் ஏனைய வடிவங்களை எவ்வாறு உறுதி செய்து கொள்வது?

இணைய அடிப்படை ஆய்வில் தகவல் சேகரிப்பின் போது பெறப்படும் தகவல்களின் மீது இரண்டு தொகுதியில் அடங்குகின்ற முக்கியமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும். முதலாவது; இதைய எழுதியது யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? அத்துடன் அவர்களின் ஊக்கங்கள் எவை? இணையத்தில் கிட்டத்தட்ட எவராலும் எதையும் பதிவேற்றம் செய்ய முடியும். முகநூல் மற்றும் டுவிட்டர் போன்றவற்றில் உண்மையான துறைசார் வல்லுனர்கள் தொடக்கம் ஆவல் உள்ள சிந்தனையாளர்கள் வரை, பொது மக்கள், அரசியல் அல்லது வர்த்தக நலன்களினால் பணம் செலுத்தப்படும் அரசியல் ஆதரவு தேடும் தரகர்கள் போன்றோர் எவற்றையும் பதிவிட முடியும். எனவேதான் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை தொடர்பில் சோதிப்பது கட்டாயமாகும்.

இரண்டாவது முக்கியமான கேள்வி, குறித்த துப்பை பதிவேற்றம் செய்த நபர் தொடர்பில் என்ன பொதுவான தகவல்கள் காணப்படுகின்றன? புலனாய்வு ஊடகவியலாளர்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வி, அவர்கள் வகிக்கும் பதவிகள் போன்றவற்றை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களின் முகநூல் கணக்கு மற்றும் அவர்கள் அனுப்பும் டுவீட் குறுஞ்செய்திகள் போன்றவற்றை சோதியுங்கள். புதிய வர்த்தக நிறுவனம் ஒன்று குறிப்பிடப்படுமாயின் அதன் முக்கிய நபர்கள் பற்றி புலனாய்வு செய்யுங்கள். அத்துடன் அவர்களின், சகபாடிகள், எதிரிகள் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் இடையான தொடர்புகள் பற்றி குறுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். புதிய விவசாய அமைச்சர் பிரதான தானியம் விற்கும் கம்பனி ஒன்றின் இயக்குனர் சபையில் அங்கம் வகிப்பாராயின், அது சட்ட ரீதியானதா? அது அனுமதிக்கப்பட்ட போதும் நலன்களின் முரண்பாடு ஒன்று கட்டாயமாக அங்கு காணப்படும். இவ்வாறான இணைப்புகளைக் கண்டு பிடிப்பது சாத்தியமான செய்தி ஒன்றிற்கான ஆழமான விடயங்களை உங்களுக்கு வழங்கும்.

பெட்ரோல் மற்றும் புலமைப் பரிசில்கள் போன்ற அருமையான வளங்கள் பற்றிய அறிக்கைகள் இந்த வளங்களின் பகிர்வில் காணப்படும் சாத்தியமான ஊழல்கள் பற்றி உங்களுக்கு பரிந்துரை வழங்கும். இவ்வாறன வளங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, அதன் பகிர்வுப் பொறிமுறைகள் எவ்வாறு அமையப் பெற்றிருக்க வேண்டும் போன்ற கேள்விகள் இந்த வளங்களின் அருமைத்தன்மை ஒருவரின் தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்படும் சாத்தியமான ஊழல்களை அடையாளம் காண உதவும். இணையத் தளங்களை நெருக்கமாக பரிசோதிப்பதன் மூலம் இந்த தனி நபர்கள் எவ்வளவு தகவல்களை வெளியிட்டுள்ளனர் மற்றும் எவ்வளவு தகவல்களை மறைத்துள்ளனர் போன்ற விடயங்களில் தெளிவு கிடைக்கும்.

முக்கியமான அரச அதிகாரி அல்லது அரசியல் வாதி ஒருவருக்கு பகுதியளவிலான அல்லது பிழையான குற்றச்சாட்டுகளை மறுக்க தேவையான ஆவண ஆதாரத்தை அடைவது அல்லது உருவாக்குவது மிகவும் இலகுவான காரியம். எந்த ஆவணமும் கடிதத் தலைப்புக்கள், கணணி மற்றும் நிழற் பிரதி இயந்திரம் என்பன வைத்திருக்கும் எவராலும் இலகுவாக மோசடியான முறையில் உருவாக்க முடியும். எனினும் அவை உண்மையாக இருந்தாலும் அரைவாசி உண்மையான பகுதியளவான பிரதி விம்பத்தை உருவாக்க தேவையான ஆவணங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏனைய ஆவணங்களை உபாய ரீதியாக அவர்களால் மறைக்க முடியும்.

சில வேளைகளில் ஆவணங்கள் அந்த துறை சார் நிபுணத்துவம் அற்ற ஊடகவியலாளர்களால் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கல் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படும். அவற்றை விளங்கிக் கொள்ள நிபுணர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான ஆவணங்கள் பற்றி கணக்கியலாளர்கள், சட்டத்தரணிகள் அல்லது வைத்தியர்கள் போன்ற சுயாதீன நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டி ஏற்படும். எனினும் எளிமையான ஆவணங்கள் கூட தவறாக விளங்கிக் கொள்ளப்படக் கூடும். சிலவேளைகளில் ஒரு குற்றச்சாட்டு உண்மையானதாகக் காணப்பட்ட போதும் அது தொடர்பான தவறான நடத்தை முக்கியத்துவம் அற்றதாகக் காணப்படலாம். ஊழல் குற்றச்சாட்டுகள் நுளம்புகள் போல பரவிக் காணப்பட்டாலும் அவை பற்றி தகவல் தரும் நபர்கள் பற்றி ஊடகவியலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த நபர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டு குறித்த தகவல் தருனரின் போட்டியாளர்களை இல்லாமலாக்கும், அவர்களை தடைகளை நீக்கும் மற்றும் அவரது இலட்சியங்களை அடைய உதவும் நபர்களாக ஊடகவியலாளர்கள் மாறக் கூடாது.

வழமையான புலனாய்வின் இன்னொரு வடிவம் பலவேறு துறைகளில் உள்ள தொடர்புகளுடன் வழமையான உரையாடல்களை மேற்கொள்வதாகும். சிறந்த உறவைக் கட்டி எழுப்புதல் சிறப்பான செய்திகள் ஏனைய நிருபர்களை சென்றடைய முன்னர் உங்களை நோக்கி வருவதை உறுதி செய்யும். இதற்கு ஏற்கனவே உருவாக்கப்படாத நிகழ்ச்சி நிரல் கொண்ட மூலங்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவது அவசியமாகும். தேவையேற்படும் போது மாத்திரம் தகவல் மூலங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது அந்த மூலங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். இது உங்களின் தொடர்புகளை “பணி புரிய வைப்பது” எனக் கூறப்படும். எவ்வாறாயினும் இந்த மூலங்களில் இருந்து செய்திகள் தாமாகவே உங்களை அடைவதில்லை. சிறந்த செய்தி யோசனைகளை கண்டறிய நீங்கள் புத்தாக்கமுள்ளவராகவும் தேடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

INSEAD கல்வி நிறுவன பேராசிரியரும் புலனாய்வு ஊடகவியலாளருமான மார்க் ஹன்டர் மற்றும் அவரது டச்சு சகபாடி லூக் சென்கெர்ஸ் ஆகியோர் சில அறிவுரைகளை வழங்குகின்றனர்: “செய்தி ஒன்றைப் பெறும் நோக்கிலேயே நாம் தகவல்களை சேகரிக்கின்றோம், தகவல்களைப் பெறும் நோக்கில் நாம் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதில்லை. நீங்கள் உணர்வுகளைக் கலக்க வேண்டும். உங்களது வாசகர்கள் கோபமடைய வேண்டும், அழ வேண்டும், அதன் மூலம் விடயங்களை மாற்றுவதற்கு திட சங்கற்பம் பெற வேண்டும் என்பதே உங்களது தேவை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் சான்றுகளை பெற அதிக நேரத்தை செலவிட மற்றும் உங்களது மற்றும் உங்களது உறவுகளை அபாய நிலைக்கு உட்படுத்த என்ன தேவை உள்ளது? உங்களது புலனாய்வில் மக்கள் உண்மையான வகிபாகங்கள், அவர்கள் வெறுமனே கூற்றுக்கள் அல்ல”