1.1. தனிப்பட்ட காரணி


செய்திக்கரு தொடர்பில் செயற்படும் போது இரண்டு வகையான பிரச்சனைகள் எழ முடியும்: முதலாவது, நடுநிலையான புலனாய்வை மேற்கொள்வதில் உங்களின் சொந்த உணர்வுகள் குறுக்கிடலாம். நீங்கள் பொது அதிகாரி ஒருவரின் நடத்தை பற்றி கோபமடைவது செய்தியை உண்மையாகக் கண்டு பிடித்து வெளியிடுவதற்கு பதிலாக அந்த அதிகாரியின் நடத்தை உங்களை அதீத கோபத்துக்கு உட்படுத்தியதன் காரணமாக குறித்த செய்தி குறை கூறுவதாகவும் குற்றம் சாட்டுவதாகவும் மாற்றமடையலாம். இங்குதான் ஊடகவியலாளர்கள் யதார்த்தங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் செய்தி பக்கச்சார்பின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில் தமது சொந்த உணர்வுகள் மற்றும் நடத்தைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இரண்டாவது சாத்தியமான பிரச்சனை தனிப்பட்ட அனுபவங்கள் விடயம் ஒன்றை பிரதி நிதித்துவம் செய்ய முடியாததாக இருக்கக் கூடும். நீங்கள் ஒரு தனி நபர் மாத்திரமே, எனவே ஒரே மாதிரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் புரிதல் ஒன்றைப் பெற்றுக் கொள்ளல் பயன் மிக்கது. நீங்கள் ஒரு ஊடகவியலாளராக அல்லது ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக அல்லது கல்வியறிவுள்ள ஒரு மனிதனாக இருப்பதன் காரணமாக குறித்த ஒரு வகையில் நடத்தப்பட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? ஏனையோரும் அதே வகையில் நடத்தப்பட்டுள்ளனரா? ஒரு பிரச்சனை ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறதா அல்லது இன்று வித்தியாசமாக நடைபெற்றதா? இந்த சாத்தியமான பிரதி கூலத்தை தவிர்ப்பதற்கு சிறந்த வழி செய்தியை ஒரு சம்பவத்துடன் மட்டுப்படுத்தாது விரிவாக்கம் செய்வதாகும். தனிப்பட்ட அனுபங்களை புலனாய்வு அறிக்கையில் வெளியிடாமல் கருத்தப்பகுதியில் எழுதி வெளியிட முடியும். ஒரு ஒழுங்கான அறிக்கை ஒன்றை உருவாக்க காரணங்களைத் தேடுதல், சூழமைவைப் புரிந்து கொள்ளல் மற்றும் இறுதிச் செய்தி வெறுமனே உங்களது தனிப்பட்ட மனக்குறைகளை மாத்திரம் வெளியிடாவண்ணம் வேறுபட்ட மனிதர்களுடன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதே அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் உங்களுக்கு தெரிந்த மற்றும் உங்களுடன் பணி புரியும் நபர்கள் தொடர்பிலும் காணப்படும். அவர்களின் அனுபவங்கள் உண்மையானவை எனினும் அவர்களது தனிப்பட்ட உணர்வுகள் காரணமாக விடயம் நடுநிலையாக பிரதிநிதித்துவப் படுத்தப்படாமல் பக்கச்சார்பானதாகக் காணப்படலாம். மேலதிகமாக, ஒரு விவகாரம் அல்லது பிரச்சனை தொடர்பான நேரடியான தெளிவான தகவல்கள் குறித்த பிரச்சனை அல்லது விவகாரத்துடன் நேரடி அனுபவம் அற்ற நண்பர்களிடம் இருந்தும் கிடைக்கக் கூடும்: “எனது மச்சானுக்கு அவரிடம் விமான நிலையத்தில் வைத்து இலஞ்சம் கோரிய பெண் ஒருவரைத் தெரியும்” இந்த பெண்ணின் பெயர் மற்றும் விலாசம் என்பன தெரியாத இடத்து அல்லது குறித்த பெண் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட முடியாதவிடத்து இது வதந்தி மாத்திரமே ஆகும். எனவே, அனுபங்கள் சிறந்த புலானாய்வு ஒன்றின் ஆரம்பப் புள்ளியாக அமைய முடியும், எனினும் அவை ஆரம்பப் புள்ளிகள் மாத்திரமே.

மேலதிகமாக, புலனாய்வு ஊடகத்துறைக்கான நிலையத்தின் (CIJ) பின்வரும் அறிவுரையை கருத்தில் கொள்ளுங்கள்: “உங்களுக்கு தெரிந்த சில நபர்கள் மேற்கொள்ளும் பணிகளில் தகவல்களை வெளியிட முடியாத கடப்பாடு காணப்படலாம்…. உதாரணமாக ஒரு பொலிஸ் அதிகாரி. எனவே உங்களுக்கு தெரிந்த நபர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி முதலில் சிந்தியுங்கள். அத்துடன் ஒரு நபர் உங்களின் நண்பராக அல்லது அயலவராக இருப்பதன் காரணமாக உங்களுக்கு விருப்பத்துடன் உதவுவார் என எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் அவ்வாறு உதவுவது அவர்களின் வாழ்வையே அபாயத்தில் தள்ளிவிடக் கூடும். ஒருவரது சொந்தக் கதையை பயன்படுத்த முன் அவரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்”