1.2. கிசுகிசு மற்றும் வதந்தி என்பவற்றைக் கையாளுதல்


நகர்ப்புறக் கதைகளை உருவாக்குவதில் “வீதியோர வானொலி”களைத் தவிர வேறந்த ஊடகமும் சிறந்தது அல்ல. விரைந்து பரவும் கிசுகிசுக்கள் மற்றும் வீதியோர வியாபாரிகளின் உப கதைகள், விளையாட்டு மைதான சிறுகடைகள், வாடகை வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொலிசாருக்கு நெருக்கமான நபர்கள், நிலத் தரகர்கள், சிற்றுச்சிண்டிச்சாலை மற்றும் மதுபான நிலையங்களின் சிப்பந்திகள் என்பன இந்த வீதியோர வானொலிகளாகும். எனினும், வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் உண்மையான போக்குகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பில் எம்மை விழிப்படையச் செய்ய முடியும். ஊடகங்கள் நிகழ்ச்சி நிரலை உருவாக்குவவை அல்லது வாசகர்கள் எவற்றில் விருப்பைக் காண்பிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுவதுண்டு. எனினும் வதந்திகளுக்கும் தமது நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. ஊடகவியலாளர்களின் கண்கள் செய்திகள் தொடர்பான துப்புகள் தொடர்பில் எப்போதும் விழிப்பாக இருப்பதுடன் மக்கள் எவற்றைப் பற்றி உரையாடுகின்றனர் என்பதை அறியும் வகையில் தமது காதுகளை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் காணாமல் போவது ஆட்கடத்தல் காரணமாக ஏற்படுகின்றதா? புதிய வகை உள்ளூர் சாராயம் ஒன்றை மக்கள் து~;பிரயோகம் செய்ய ஆரம்பித்துள்ளனரா? நன்கு பிரபலமான வியாபாரி சடுதியாக பணத்தை செலவிடுவதை நிறுத்தியுள்ளாரா? அல்லது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பெரிய குற்றவாளி ஒருவருடன் சகஜமாகப் பழக ஆரம்பித்துள்ளாரா? இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் வீதியோர வானொலிகள் உங்களுக்குச் சொல்லும். இந்த கதைகளில் அநேகமானவை உண்மையாகவே இருக்கும். எனினும் ஊடகவியலாளர்கள் ஏன் இதனை மக்கள் நம்புகின்றனர் என தமக்குத் தாமே கேட்க வேண்டும். எமது காலப்பகுதிகள் மற்றும் எமது நாடு பற்றி இவை என்ன சொல்கின்றன? முகநூலில் மக்கள் எதைப் பற்றி கிசுகிசுத்துக் கொள்கின்றனர்?

இங்கு மேற்கொள்ளப்பட பட வேண்டிய முதலாவது நடவடிக்கை வதந்தியின் செல்லுபடித் தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போதும் இவை பற்றி அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் உள்ள மூலங்களிடம் இவை பற்றி சோதனை செய்ய வேண்டும். அதன் பின்னர், உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன பெண் குழந்தைகள் தொடர்பான அறிக்கைகளைச் சோதிக்க வேண்டும், வைத்தியர்களுடன் மதுபான து~;பிரயோகம் தொடர்பில் விசாரிக்க வேண்டும். குறித்த வர்த்தகரின் ஊழியர்களிடம் அவரின் வர்த்தக நிறுவனம் எந்த நிலையில் உள்ளது என விசாரிப்பதுடன் சந்தை போக்குகள் பற்றி நிதிப் பகுப்பாய்வாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தனி நபர்கள் அண்மையில் ஏதும் சொத்துக்களை விற்பனை செய்துள்ளனரா என நோக்க வேண்டும். விளையாட்டின் போது குறித்த பொலிஸ் அதிகாரியை அவதானியுங்கள். வதந்தியில் சிறிது விடயம் உள்ளது எனில் மாத்திரமே செய்திக்கான திட்டமிடலை ஆரம்பிக்க வேண்டும்.