அத்தியாயம் 4 தகவல் பாதுகாப்புக்கான உத்திகள்

அத்தியாயம் 4 தகவல் பாதுகாப்புக்கான உத்திகள்

புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது ஆய்வின் போது பாரிய அளவிலான தகவல்களை சேகரிக்கிறார்கள் மற்றும் உருவாக்குகிறார்கள். இவற்றில் அநேகமானவை கையடக்க அல்லது கணணி உபகரணங்களில் சேமிக்கப்படுகின்றன. டிஜிட்டல் அடிப்படை தகவல்களைக் கையாளும் போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பு அபாய நேரிடர்களை எவ்வாறு அகற்றுவது என தெரிந்திருப்பது அவசியமாகும். புலனாய்வு ஒன்றின் போது அனைத்து வேளைகளிலும் மூலங்களுடனான தொடர்பாடல் பாதுகாப்பானது என உறுதிப்படுத்துவது பிரதான கரிசனையாகும். இந்த அத்தியாயம் டிஜிட்டல் பாதுகாப்பு அபாய நேரிடர்கள் பற்றி கலந்துரையாடுவதோடு பலதரப்பட்ட பாதுகாப்பான பணிச்சூழலுக்கு துணை புரியும். இது கணணி தொகுதிகள் (Mac, Windows) மற்றும் நவீன ஸ்மார்ட் போன் வகை கையடக்க தொலைபேசிகள் (அண்ட்ரோய்ட்,IOS ) ஆகியவற்றில் கவனக்குவிவைக் கொண்டுள்ளது.