உங்களது ஆய்வுத்திட்டத் தயாரிப்பு மற்றும் தொடர்புடைய மூலங்களை அடையாளப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்பட்ட பின் நீங்கள் விரைவாக புலனாய்வைத் தொடங்க வேண்டும் என நினைப்பீர்கள். எனினும் ஆய்வை ஆரம்பிக்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு படிநிலை உள்ளது; அது தரவுப் பாதுகாப்பு ஆகும். சர்ச்சைக்குரிய எடுகோள் ஒன்றை புலனாய்வு செய்வதன் மூலம் எதிர்த் தரப்பில் உள்ள நபர்கள் மூலம் நீங்கள் பதற்றம் அடைய முடியும். அவர்கள் உங்களது ஆய்வைத் திசை திருப்ப அல்லது ஆய்வில் உளவு பார்க்க விரும்பக் கூடும். உங்களது ஆய்வு பொது மக்களுக்கு வெளிக்காட்டப்படுவதில் இருந்து உங்களைத் தடுக்க யார் விரும்பக்கூடும் என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அவ்வாறான தனி நபர்களிடம் (உங்களிடம் இல்லாத) என்ன வழிகள் உள்ளன? உங்களது ஆய்வு மனித அல்லது டிஜிட்டல் மூலங்களை அடிப்படையாகக் கொண்டதா? உங்களது பணியைப் பாதுகாக்க என்ன பாதுகாப்புக் கருவிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்?
சொல்வதற்கு அவசியமற்ற விதத்தில் உங்களது மூலங்களும் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எதிரிகள் உள்நுளைவதில் இருந்து தம்மைப் பாதுகாக்க பாதுகாப்புக் கருவிகள் தொடர்பில் அறிந்துள்ளனர் என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருந்த போதும் எங்கும் 100% பாதுகாப்பு கிடைக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது கருவியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை எதிரி அடைவதை கடினமாக்க, செலவு மிக்கதாக மாற்ற மற்றும் அதிக நேரம் தேவைப்படுவதாக மாற்ற மாத்திரமே உங்களால் முடியும்.
இந்த அத்தியாயம் உங்களது கருவிகளைப் பாதுகாக்க உதவும் பாதுகாப்பு மூலோபாயங்கள் தொடர்பான மேல்நோக்கை வழங்குகின்றது. நீங்கள் பாவிக்கக் கூடிய செயலிகள் (Apps) மற்றும் மென்பொருட்களுக்கான உதாரங்கங்கள் வழங்கப்படும். எந்த ஒரு மென்பொருளையும் (இங்கு பரிந்துரை செய்யப்படும்) கணணிக்கு உட்புகுத்து முன் இணையம் எப்போதும் மாறுபடுவதன் காரணமாக குறித்த மென்பொருள் அதன் பிந்திய வடிவத்தில் (Latest Version) உள்ளதா என சோதித்துக் கொள்ளுங்கள். அத்துடன் மிகவும் விலை குறைந்த மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். சந்தையில் ஒவ்வொரு மென்பொருளும் இலவச மற்றும் பணம் செலுத்திப் பெற வேண்டிய வடிவங்களில் கிடைக்கின்றன. உங்களது தேவைக்கு எது பொருத்தமானது என சோதித்த பின்னர் எந்த வடிவம் உங்களுக்கு அவசியமானது எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். திறந்த மூல மென்பொருளின் (Open Source Software) கிடைத்தல் தன்மையை சோதனை செய்தல் தகவல் தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர் அதனை சோதனை செய்து அதன் பாதுகாப்பு வல்லுமையை அறிய உதவும். சாத்தியமான பாதுகாப்பு ஓட்டைகள் திறந்த மூல மென்பொருளில் விரைவாகக் கண்டுபிடிக்கப் படலாம். தனியார் மென் பொருட்களில் அதன் வரிவடிவம் (Code) காட்சிப்படுத்தப்படுவதில்லை. இதன் பொருள் அந்த மென்பொருளின் உரிமையாளர் மாத்திரமே பாதுகாப்பு அபாய நேரிடர்களை சோதிக்க முடியும்.