1.3.1. தீச்சுவர் (Firewall) வைரஸ் தடுப்பு (Antivirus) மற்றும் விருந்தோம்பு உள்வருகை தடுப்பு (Host Intrusion Prevention)

1.3.1. தீச்சுவர் (Firewall) வைரஸ் தடுப்பு (Antivirus) மற்றும் விருந்தோம்பு உள்வருகை தடுப்பு (Host Intrusion Prevention)


உங்களது கருவியில் தீச்சுவரை இயலுமாக்குவது மிகவும் முக்கியமானது. இந்த தீச்சுவர்கள் இணையத்துடன் தொடர்புறும் தகவல்களைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் அவை மதுபானசாலை வாயிற் காவலர்கள் போல் செயற்படுகின்றன. ஒவ்வொரு தீச்சுவரும் விருந்தாளியை உள்நுழைய அனுமதிப்பதா அல்லது உங்களது வலையமைப்புக்கு தகவல்களை அனுப்புவதா என்பதைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு திறக்கப்பட்ட கதவும் உங்களது கருவிக்குள் தீங்கு விளைவிக்கும் நிரலர்களை அனுமதிப்பதன் மூலம் இலகுவாக தீங்கு விளைவிக்க ஏதுவாகின்றது. அநேகமான கணணிகளில் உங்களால் தீச்சுவர்களை தொகுதியில் இயலுமாக்கக் கூடியதாக இருக்கும். அத்தடன் புற பாதுகாப்பு மென்பொருட்களான McAfee, BitDefender or Kaspersky பாவிப்பது மிகவும் பரிந்துரை செய்யப்படுகின்றது.

உங்களது விண்டோஸ் இயங்குதளக் கணணியில் எவ்வாறு தீச்சுவரை இயலுமாக்குவது என்பதை பின்வரும் காணொளி இணைப்பில் காண்க. Windows அல்லது Mac இயங்கு தளக் கணணியாயின் பின்வரும் காணொளி இணைப்பை நோக்குக: Support Apple

NoRoot Firewall, NetGuard’ (Android) மற்றும் Norton’ (iOS) போன்ற வெளியக மென்பொருட்கள் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு கூட தீச்சுவரை இயலுமாக்க முடியும்.

இணையத்துடனான தரவுப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்திய பின்னர் உங்களது கருவியை உங்களது செயற்பாடுகளைக் கண்காணிக்கும் அல்லது உங்களது கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களுக்கான அணுகலைக் கொண்டுள்ள தீங்குநிரல்களில் (Malware) உங்களது கருவிகளைப் பாதுகாத்தல் அவசியமானது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் இவ்வகையான தீங்குநிரல்களை தடுப்பதுடன் அவற்றை அழித்தும் விடுகின்றன. இவ்வகையான நிரலர்கள் உங்கள் கணணிக்கு மாத்திரமன்றி கையடக்கத் தொலைபேசிகளுக்கும் அவசியமானவை. இந்த வகையில் பரிந்துரை செய்யப்பட மென்பொருட்களாக ‘ESET’, ‘Kaspersky’, ‘BitDefender’ (Windows and Linux), ‘Microwold’, ‘BitDefender’  மற்றும் ‘AVG’ (Mac) என்பன விளங்குகின்றன. ஸ்மார்ட் போன் வகை கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படக் கூடிய கருவிகளாக Avast Mobile Security (Android) or Norton Lookout (Mac) மற்றும்  Lookout (Mac) என்பன காணப்படுகின்றன.

அநேகமானவர்கள் முதல் இரண்டு செயலிகள் பற்றி அறிந்திருப்பதோடு குறைந்தது ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையாவது தமது கருவிக்கு உட்செலுத்தி இருப்பர். எனினும் பயன்பாட்டில் உள்ள தரவுகளின் முழுப் பாதுகாப்பை உறுதி செய்ய குறைந்தது ஒரு விருந்தோம்பு உள்வருகைத் தடுப்பு (HIP) நிரலியையாவது பயன்படுத்த வேண்டும். இந்த மேலதிக முன்தடுப்பு நடவடிக்கை அனைத்து செயற்பாடுகளும் விதிகளுக்கு ஏற்ப நடைபெறுகிறதா என கண்காணித்து ஏதாவது கொள்கை மீறல் இடம்பெறும் வேளை பாவனையாளரை அறிவுறுத்தும். தீங்கு நிரலி ஒன்றைக் கண்டுபிடிக்கHIP சமகால பாவனை வடிவத்தை உங்களது ஒழுங்கான நிரலரின் ஒழுங்கான பாவனைப் பழக்கத்துடன் ஒப்பீடு செய்யும். இந்த பாதுகாப்பு மென்பொருளை வழங்கும் சேவை வளங்குனர்களில் ஒருவர் ‘McAfee’ ஆகும்.

முதல் பார்வையில் பரிந்துரை செய்யப்பட்ட இந்த மூன்று நிரலர்களையும் உட்புகுத்துதல் கடினமான பணியாகத் தோன்றிய போதும் இவை மூன்றையும் ஒன்றிணைத்து வழங்கும் மென் பொருள் நிரலர்கள் காணப்படுகின்றன. இந்த இணைக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு பரிந்துரைக்கப் படுவது ஏனெனில் மிகவும் இக்கட்டான நிலையில் மூன்று ஒற்றை நிரலர்கள் ஒன்றை ஒன்று இயலுமானதாக ஆக்கும். இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட கருவிகளுக்கான உதாரணங்களில் ‘McAfee’, ‘BitDefender’ மற்றும் ‘Kaspersky’ என்பன உள்ளடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் பல நிறுவனங்கள் மற்றும் சஞ்சிகைகள் என்பன இந்த மென்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் வினைத்திறனை வரிசைப் படுத்துகின்றன. ஒரு மென்பொருளை கொள்வனவு செய்யும் முன்னர் மிகச் சிறந்த தீங்குநிரலி பாதுகாப்பு வழங்கும் சேவை வழங்குனர் யார் என ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் இதை ஆரம்பிக்க உதவி வழங்கும் பயனுள்ள இணையத்தளம்: AV Test.