1.3.2. அநாமோதய இணைய உலாவல்


கம்பியில்லா இணைய வழிப்படுத்திக் கருவி (Wi-Fi Router) குறைத்து மதிப்பிடப்படும் அபாய நேரிடர் ஆகும். குறும்பர் ஒருவர் உங்களது வழிப்படுத்திக் கருவியுனுள் நுழைவதன் மூலம் உங்களது ஒட்டு மொத்த வலையமைப்புக்கான அணுகலைப் பெற முடியும். எனவே இணைய வெளிப்படுத்திக் கருவிக்கு முதன்முதலாக தரப்படும் கடவுச்சொல் மாற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அத்துடன் புதிய கடவுச்சொல்லை பலம் மிக்கதாக ஆக்குங்கள். அதன் பிறகு இணைய வழிப்படுத்தியை மறை குறியீடாக்கம் செய்து கொள்ளுங்கள். தற்சமயம் காணப்படும் மிகவும் பாதுகாப்பான மறை குறியீடாக்க முறை WPA2 ஆகும். எனவே உங்களது தகவல்களை குறியீடாக்கம் மேற்கொள்ளும்போது இந்த நடைமுறை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது வழிப்படுத்திக் கருவியை எவ்வாறு மறை குறியீடாக்கம் செய்வது என்பது தெரியாத பட்சத்தில் உங்களது சேவை வழங்குனர் அதை மேற்கொள்ள வேண்டும். எனினும் இணையத்துடன் இணைவதற்கான மிகவும் பாதுகாப்பான வழி குறும்பரப்பு வலையமைப்பு (Local Area Network / LAN) வடம் (Cable) ஊடாக இணையத்துடன் இணைவதாகும். வீட்டில் இருந்து பணியாற்றும் வேளை இந்த உத்தி மிகவும் பரிந்துரை செய்யப்படுகின்றது.

உங்களது வழிப்படுத்தி பாதுகாக்கப்பட்ட பின்னர் இது உங்களது இணைய ஆய்வு பற்றி சிந்திக்க வேண்டிய நேரமாகும். உங்களது புலனாய்வின் போது நீங்கள் இணையத்தை பின்புலத் தகவல்களை பெற அல்லது சாத்தியமான மூலங்களை தேட அநேகமாகப் பயன்படுத்துவீர்கள். உணர்திறன் மிக்க தலைப்புகளை தேடுவது ஒற்றர்கள் உங்களை கண்காணிக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடும். எனவே உங்களது ஆய்வை, உங்களது எதிர்கால மூலங்களை மற்றும் உங்களை பாதுகாக்கும் நோக்கில் உங்களது இணையத் தேடலை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்துதல் அவசியமானது.

பாதுகாப்பான இரு இணையத் தேடல் முறைகள் காணப்படுகின்றன, இவை தணிக்கைள் தாண்டிய தேடலை உங்களுக்கு வழங்கும்: நீங்கள் கற்பித தனி வலையமைப்பு (Virtual Private Network / VPN) அல்லது பதிலி சேவையகம் (Proxy Servers) ஊடாக உங்களது இருப்பிடத்தை மறைத்து இணைய வழித் தேடலை மேற்கொள்ள முடியும். VPN ஒரு சுரங்கம் போல் செயற்பட்டு நீங்கள் வேறொரு வலையமைப்பில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

VPN எவ்வாறு இயங்குகின்றது என்பது தொடர்பான விபரமான தகவளைகளைப் பெற இந்த இணைப்பில் உள்ள காணொளியை நோக்குங்கள்:

VPN ஐப் பயன்படுத்த இலகுவான வழி மென்பொருள் ஒன்றை உங்கள் கருவிக்கு உட்புகுத்துவதாகும். அநேகமான சந்தர்ப்பங்களில் கைத் தொலைபேசிக்கான செயலி மற்றும் கணணிகளுக்கான செயலி என வேறு வேறாக தெரிவு செய்ய முடியுமானதாக இருக்கும். VPN இயங்க ஆரம்பித்த பின்னர் நீங்கள் இருப்பதாகக் காண்பிக்க விரும்பும் இடத்தை உங்களால் தெரிவு செய்ய இயலுமாக இருக்கும். பரிந்துரை செய்யப்பட்ட சில VPN வழங்குனர்களில ‘ZenMate’, ‘CyberGhost’ மற்றும ‘ExpressVPN’ என்பன உள்ளடங்குகின்றன. எனினும் அதிகமான VPN வழங்குனர்கள் தமது சேவைகளை இலவசமாக வழங்குவதில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது பணக் கொடுப்பனவுத் தகவல்கள் சேமிக்கப் படுகின்றன. அத்துடன் இந்த முறை மூலம் இணையத்தை பயன்படுத்தினாலும் நீங்கள் சில தடயங்களை விட்டுச் செல்கின்றீர்கள் என தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு மாற்றீடாக நீங்கள் உங்களது சொந்த VPN வலையமைப்பை உருவாக்கலாம், எனினும் அது மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்தது.

இது எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய தகவல்களைப் பெற பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியை நோக்குங்கள்:

மிகவும் பிரசித்தம் வாய்ந்த பதிலி வலையமைப்பு TOR (The Onion Router) ஆகும். நீங்கள்  TOR மேலோடியை  (Browser) ஐ பயன்படுத்தும் பொது நீங்கள் வேறொரு  IP முகவரியில் இணையப் பாவனையை மேற்கொள்கின்றீர்கள். TOR என்பது மறை குறியீடாக்கப்பட்ட கணணித் தொடர்புகளின் வலையமைப்பாகும். ஒவ்வொரு பயன்படுத்துனரும் இந்த வலையமைப்பில் ஒரு அணுகல் புள்ளியைக் கொண்டிருப்பர். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவையகங்களுக்கு ஊடாக வழிகாட்டப்பட்ட பின்னர், ஒரு பயன்படுத்துனர் வெளியேறும் வழியை அடைவார். இதுவே அவர் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும்  IP முகவரி ஆகும்.

எனினும் இதன் பொருள் நீங்கள் அடையாளம் காணப்பட முடியாது என்பதல்ல. கடந்த நம்பர் 2014 இல் குடீஐ மற்றும் ஐரோப்பிய பொலிஸ் சேவை என்பன 17 நபர்களை அடையாளப்படுத்தின. எனினும் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மும்முரமான சாலவு மிக்கவை ஆகும். எனவே ஆயுத விற்பனை அல்லது சிறுவர் பாலியல் காணொளிப் பகிர்வு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடாத வரை சாதாரண பொது மக்களை பொலிசார் இலக்குவைப்பதற்கான அபாயம் குறைவே ஆகும். எனினும் விசேடமாக மிகக் குறைந்த பத்திரிகை சுதந்திர நியமங்கள் நிலவும் மற்றும் சிறந்த இரகசிய பொலிஸ் சேவை நாடு ஒன்றில் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

வுழுசு மேலோடி கையடக்க தொலைபேசிகளுக்கும் கிடைக்கின்றது: ‘Orfox’ மற்றும் ‘Orbot’. iOS மாதிரி மேலோடிகளைத் தேடும் பாவனையாளர்கள்  ‘Onion Browser’ எனத் தேட வேண்டும்.