1.3.3. மேகச் சேமிப்பு (Cloud) பயன்பாடு


Dropbox, Google Drive அல்லது OneDrive போன்ற பொதுப் பயன்பாட்டு மேகச் சேமிப்பு வசதிகள் பயன்படுத்துவதற்கு இலகுவானவைகளாக அமைந்த போதும் அவற்றை உணர்திறன் மிக்க கோவைகள், புகைப்படங்கள் அல்லது ஏனைய தரவுகளைப் பகிர பயன்படுத்தக் கூடாது. உங்களது ஆவணங்களுக்கு மேகச் சேமிப்பில் நடப்பது உங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. உங்களது தகவல்கள் பாதுகாப்பாக பேணப்படுவதற்கு நீங்கள் சேவை வளங்குனரிடமே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

சேமிக்கப்பட்ட தகவல்களை தன்னியக்க மறை குறியீடாக்கம் செய்யும் மாற்றீட்டு மேகச் சேமிப்பு வசதியாக BlauCloud காணப்படுகின்றது. இந்த சேவை திறந்த மூல (Open Source) மேகச் சேமிப்பு வசதியான OwnCloud ஐ அடிப்படையாகக் கொண்டது. தரவுகள் ஜேர்மனில் சேமிக்கப்படுவதன் காரணமாக பாவனையாளர்கள் ஜேர்மனின் தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பயனைப் பெறுகின்றனர். இந்த அதியுயர் பாதுகாப்பு வசதியில் கூட தரவுப் பாதுகாப்புக்கு சேவை வழங்குனரிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

மேகச் சேமிப்பில் உங்களது தரவுகளை சேமிக்க சிறந்த வழி உங்களது பிரத்தியோக மேகச் சேமிப்பை வலையமைப்பு இணைக்கப்பட்ட சேமிப்பு (Network Attached Storage / NAS) ஊடாக உருவாக்குவதாகும். எனினும் இந்த NAS வசதி இலவசமானதோ செலவு குறைவானதோ அல்ல.

NAS எவ்வாறு இயங்குகிறது என்பதை பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி காண்பிக்கின்றது:

இந்த இணைப்பில் உள்ள காணொளி மேகச் சேமிப்பு மற்றும் NAS இடையே பாதுகாப்பு, அணுகுதல், செலவு மற்றும் பகிர்தல் ஆகிய அம்சங்களில் உள்ள வேறுபாடுகளைக் காண்பிக்கின்றது: