அதி ரகசிய ஆவணங்களைக் கையாளும் வேளை நீங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலத்திரனியல் பிரதிகளைக் கொண்டிருப்பதில்லை. அந்த வகையில் அதி ரகசிய ஆவணங்களை வருடல் (Scanning) மூலம் இலத்திரனியல் பிரதி எடுத்து அவற்றை ஒரு வன்வட்டு அல்லது USB கருவியில் சேமிக்கலாம். இந்த உணர்திறன் மிக்க கோவைகளை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்த மறக்க வேண்டாம். உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை உங்களை ஒற்றர்கள் பின் தொடரக் கூடும் என்பதால் இந்தக் கருவிகளை மறைத்து வைப்பதற்கு சிறந்த பாதுகாப்பான இடம் ஒன்றைத் தெரிவு செய்வதாகும். சிறந்த மறைவிடங்கள் வங்கிகளின் லொக்கர்களாகவோ இரும்புப் பெட்டகங்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களது USB கருவிகள் மிகவும் சிறியதாக இருப்பதன் காரணமாக அவற்றை நீங்கள் பேனைகள், தோடுகள், கைப்பட்டிகள் அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பொருளில் மறைத்து பாதுகாக்க முடியும்.உங்களது உணர்திறன் மிக்க தகவல்களை எங்கு சேமிக்கலாம் மற்றும் மறைவிடத்தை தேர்வு செய்வது என்பவற்றில் புத்தாக்கம் உள்ளவராக இருங்கள்.