1.3.5. கமராக்கள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளை செயலிழக்க வைத்தல்


தொடர்புடைய மென்பொருட்களைப் பாவித்து மூன்றாம் தரப்புகள் உங்களது கருவிகளில் உள்ள கமராக்கள் மூலம் உங்களைக் கண்காணிக்கவும் நுண்ணிய ஒலிப்பதிவுக் கருவிகள் மூலம் நீங்கள் பேசுவதைக் கேட்கவும் முடியும். உங்களின் கமராவின் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான மிகவும் இலகுவான வழி அந்த கமராவில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி விடுவதே ஆகும். இது முட்டாள்தனமான யோசனை போல தோன்றினாலும் குறும்பர் உங்களது நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் இருந்து இதன் மூலம் பாதுகாப்புப் பெறலாம். அத்துடன் நீங்கள் கமராவைப் பயன்படுத்த நினைக்கும் போது இலகுவாக ஸ்டிக்கரை அகற்றி விட்டு பயன்படுத்தலாம். இதற்கு காணப்படும் இன்னொரு மாற்று வழி உங்கள் கருவியின் கமராவை செயலிழக்க செய்வதாகும். எனினும், நீங்கள் கமராவையோ ஒலிப்பதிவுக் கருவியையோ பயன்படுத்த வேண்டுமானால் மீண்டும் அதனை செயற்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இவ்வகையான அபாய நேரிடர்கள் உங்களது ஸ்மார்ட் போன் ரக கையடக்கத் தொலைபேசிக்கும் உண்டு.

Mac இயங்குதள கருவிகளில் செயலிழக்க வைக்கும் செயற்பாடு தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியை நோக்கவும்:

Windows இயங்குதளக் கருவிகளுக்கான காணொளி:

Mac இயங்குதள கருவிகளில் உள்ளக ஒலிப்பதிவுக் கருவியை செயலிழக்க வைக்க:

Windows இயங்குதளக் கருவிகளுக்கான காணொளி: