1.3.6. தரவுகளை எவ்வாறு அழிப்பது?


நீங்கள் பின்தொடரப் படுகின்றீர்கள் என நம்பும் பட்சத்தில் உங்களது கணணியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் எனக் கருதினால் பின்வரும் அறிவுரையைப் பின்பற்றவும்: உங்களது கணணியில் உள்ள அழித்தல் செயன்முறையில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டாம். ஏனெனில் அது அந்த ஆவணத்தின் உசாத்துணையை மாத்திரம் அழித்து விடுவதுடன் ஆவணம் உங்களது வன்வட்டில் இன்னும் சேமிப்பில் இருக்கும். அதை மூன்றாம் தரப்பு இலகுவாக மீள எடுக்கலாம். இந்த உத்தி உங்களது டிஜிட்டல் கமராவில் பாவனையில் உள்ள சேமிப்புக கருவிக்கும் (Flash Drive) பொதுவானது. எல்லா வழிகளிலும் இது உங்களது தரவுகளை மீளப் பதியும். றiனெழறள இயங்குதளத்தில் உள்ள தரவுகளை அழிப்பதற்கு Eraser அல்லது Secure Eraser போன்ற மென்பொருட்களும் Mac இயங்கு தளத்தில் தரவு அழிப்புக்கு Super Eraser என்ற மென்பொருளும் பயன்படுத்தப்படலாம். இந்த நிரலர்கள் கோவையை அழிப்பதற்கு வித்தியாசமான தாயங்களை (Matrix) பயன்படுத்துகின்றன. அதன் மூலம் அழிக்கப்பட்ட கோவை மீண்டும் பெறப்பட முடியாத நிலை ஏற்படும்.

அத்துடன் உங்களது கருவிகளில் காணப்படும் மென்பொருட்களை ஒழுங்கான இடைவெளிகளில் அழித்து மீண்டும் உட்புகுத்த வேண்டும் (குறைந்தது வருடத்துக்கு இரு தடவைகள்). உங்களது வான் வட்டை வெறுமனே கோவை அழித்தல் (Format) செய்வது மாத்திரமன்றி அதே காரணத்துக்காக அவற்றை மேலெழுதுதல் (Overwrite) செய்ய வேண்டும். இந்த செயன்முறைக்காக நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தலாம்.