1.4.1. பாதுகாப்பான மின்னஞ்சல் தொடர்பாடல்


பொது மின்னஞ்சல் சேவை வழங்குனர்களான Gmail, Yahoo or Hotmail போன்றன அவற்றின் குறைந்த பாதுகாப்பு மற்றும் அந்தரங்க நியமங்களின் என்பவற்றின் காரணமாக புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் அவற்றைப் பயன்படுத்துவது அபாயகரமானதாகும்.  Gmail போன்ற கருவிகள் அவற்றின் பிரசித்தம் காரணமாக அவை குறும்பர்களை இலகுவாக ஈர்க்கின்றன. எனினும் மின்னஞ்சல் பயணித்தல் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் என்பன பாதுகாப்பானதாக அமைதல் முக்கிய தேவையாகும். இது இரண்டு படிநிலைகளில் இடம்பெறுகின்றது.

எந்த ஒரு மின்னஞ்சல் சேவையையும் பயன்படுத்த முன்னர் அவற்றின் பின்வரும் இரண்டு வசதிகளின் கிடைத்தல் தன்மையை சோதனை செய்யுங்கள் 1) பாதுகாக்கப்பட்ட துளைகள் அடுக்கு (Secure Sockets Layer / SSL) அல்லது 2) பயண அடுக்கு பாதுகாப்பு (Transport Layer Security / TSL). இந்த சேவைகளை வழங்காத மின்னஞ்சல் சேவை வழங்குனர்களின் மின்னஞ்சல்களை பயன்படுத்த வேண்டாம். ளுளுடு மற்றும் வுளுடு என்பன உங்களது மின்னஞ்சல்கள் ஒரு சேவையகத்தில் இருந்து இன்னொரு சேவையகத்துக்கு நகர்த்தப்படும் போது அவை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றன. எனினும் இரண்டு சேவையகங்களிலும் மின்னஞ்சல்கள் மறை குறியீடாக்கம் அற்ற நிலையிலேயே சேமிக்கப் படுகின்றன. இதன் பொருள் சேவையக நிருவாகிகள் உங்களது மின்னஞ்சல்களை வாசிக்கவோ மாற்றவோ முடியும் என்பதாகும்.

மின்னஞ்சல் ஒன்றின் உள்ளடக்கங்களை மறை குறியீடாக்கம் செய்வதற் Pretty Good Privacy (PGP) என்ற மென்பொருள் மிகவும் பாதுகாப்பான தீர்வை வழங்குகின்றது. இந்த PGP வசதி மூலம் மறை குறியீடாக்கம் மேற்கொள்ளப்பட்ட மின்னஞ்சலை பெறுனர் தவிர்ந்த எவரும் அணுக முடியாது. இதன் கெட்ட விடயம் என்னவென்றால், இதனை அமுல்படுத்துவது மிகவும் கடினம் எனவே இது பரந்த அளவில் பாவனையில் இல்லை.

இந்த பிரதிகூலங்களுக்கு மத்தியிலும் PGP என்பது பொதுவான மற்றும் பிரத்தியோகமான இரண்டு சாவிகளை உருவாக்கும் மறையீட்டு (Cryptographic) தொகுதியாகும். இதில் பொதுவான சாவி மின்னஞ்சலை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தவும் பிரத்தியோக சாவி நேர் குறியீடாக்கத்துக்கு உட்படுத்தவும் அவசியமானவை. பொதுச் சாவி, அதன் பெயரைப் போல் எவராலும் அணுகக் கூடியது. அதேவேளை; பிரத்தியோக சாவி பயனருக்கு மாத்திரமே சொந்தமானதாக இருக்கும்.

நீங்கள் PGP மூலம் மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட மின்னஞ்சலை வேறொரு நபருக்கு அனுப்ப வேண்டுமானால், உங்களது மின்னஞ்சலை மறை குறியீடாக்கத்துக்கு உட்படுத்த பொது PபுP மின்னஞ்சல் மறை குறியீடாக்கத்துக்கு அவசியமாகும். நீங்கள் இந்தச் சாவியை மின்னஞ்சல் அனுப்பும் நபரிடம் இருந்து அல்லது பொது சாவி சேவையகத்தில் இருந்து பெற முடியும். மின்னஞ்சலை பெறுபவர் அந்த மின்னஞ்சலை பிரத்தியோக சாவி மற்றும் தொடர்புடைய கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி திறக்க முடியும். இந்த PGP வசதியைப் பயன்படுத்த உங்களது மின்னஞ்சல் பெறுபவர் அந்த வசதியைக் கொண்டிருக்க வேண்டும்.

பரிந்துரை செய்யப்படக் கூடிய மின்னஞ்சல் சேவை வழங்குநர்களாக Thunderbird

அல்லது பிரபலமான Microsoft Outlook ஆகியன காணப்படுகின்றன

அவை PGP சேவைக்கான வசதிகளை வழங்குகின்றன. நீங்கள்  Gmail போன்ற சேவைகளுடன்  PGP வசதியைப் பெற விரும்பினால் Mailvelope ஐ முயற்சிக்கவும எவ்வாறாயினும், இந்த பொதுவான மின்னஞ்சல் சேவை வழங்குனர்களின் சேவைகளில் PGP வசதியினால் மின்னஞ்சல் அனுப்பும் நபர், பெறுனர் மற்றும் மின்னஞ்சல் உள்ளடக்கம் என்பவற்றை காண முடியும்.

PGP வசதி எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை அறிய, பின்வரும் காணொளியை நோக்கவும்:

இருமுனை மறை குறியீடாக்கத்துடன் மின்னஞ்சல் வசதியை வழங்கும் பரிந்துரைக்கப்பட்ட இன்னொரு சேவை வழங்குனர் ProtonMail ஆகும். இந்த சேவை பூச்சிய அறிவு முறைமை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்துபவரின் முனையில் இருந்து மின்னஞ்சல் ProtonMail சேவையகத்தை அடையும் முன்னர் மின்னஞ்சல் மற்றும் பாவனையாளர் தகவல்கள் என்பன மறை குறியீடாக்கத்துக்கு உட்படும். இந்த சேவையகங்கள் தரவுப் பாதுகாப்பு மிக்க சுவிட்சர்லாந்து நாட்டில் அமையப் பெற்றிருப்பதோடு மறை குறியீடாக்கம SSL, PGP அடிப்படையில் இடம்பெறுவதோடு இதன் குறிமுறை திறந்த மூல அடிப்படையில் மேற்கொள்ளப்படும். Thunderbird மற்றும் அதேபோன்ற கருவியான Evolution இடையான வேறுபாடு ProtonMail சேவையுறுனர் மாத்திரமன்றி உண்மையான மின்னஞ்சல் வழங்குனரும் ஆகும்.