பொதுப் பயன்பாட்டுக் கருவிகளைப் பாவிப்பதைத் தவிர்க்க முயலுங்கள். உங்களது சொந்தக் கருவிகளில் பாதுகாப்பான தொடர்பாடலை உறுதி செய்தல் இலகுவானது. அத்துடன் பொதுப் பயன்பாட்டு கருவியை இறுதியாக யார் பாவித்தது மற்றும் என்ன தீங்கு நிரலர் அந்தக் கருவியில் உள்ளது போன்ற விபரங்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். நீங்கள் ஒரு பொதுப் பயன்பாட்டுக் கணணியை பாவிக்க வேண்டிய தேவை ஏற்படின் ஒரு தொடக்கக் கூடிய USB கருவியை (A bootable USB device) கொண்டு வாருங்கள். இந்தக் கருவி ஒரு தற்காலிக இயக்க அமைப்பாக (ழுpநசயவiபெ ளுலளவநஅ) ஆகத் தொழிற்பட்டு பொதுப் பயன்பாட்டுக் கணணியை அதன் சொந்த இயக்கங்களை பாவிக்காமல் பயன்படுத்த வழி சமைக்கும். உள்ளடக்கங்கள் அனைத்தும் அந்தக் கணணியின் நேரடி அணுகல் நினைவகத்தில் (Random Access Memory / RAM) சேமிக்கப்படும், அத்துடன் இது ஒற்றை அமர்வு ஒன்றுக்கு மாத்திரமே செல்லுபடியானது. கணணியை நீங்கள் செயலிழக்க வைத்தவுடன் அந்த பொதுப் பயன்பாட்டுக் கருவியில் எந்த வித பிரத்தியோக தகவல்களோ நடவடிக்கைகளோ சேமிக்கப்பட மாட்டாது.
வித்தியாசமான இயங்குதளங்களைப் பாவிக்கும் போதும் தொடக்கக் கருவி பரிந்துரை செய்யப்படுகின்றது. உதாரணமாக தொடக்க USB இல் உங்களால Linux இயங்கு தளத்தை உட்புகுத்த முடியும், இந்த USB கருவியைப் பயன்படுத்தி உங்கள் Windows இயங்கு தள கணணியை செயல்படுத்தினால் நீங்கள் Linux இயங்கு தளத்திலேயே பணி புரிகின்றீர்கள். எனினும், அந்தக் கணணியில் எந்த விதத் தகவலும் சேமிக்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொடக்க USB கருவியை உருவாக்குவது இலகுவான காரியமல்ல. நீங்கள் இந்த முறைமையை பயன்படுத்த விரும்பினால் இதற்கான கற்றல் அலகுக் காணொளிகளை நீங்கள் இணையத்தில் நோக்க வேண்டும்.
நீங்கள் இலவச றுi-குi இணைய வசதிகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இங்கும் அந்த வசதியை இறுதியாக யார் பாவித்தது என்பதையோ அவர் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் உடையவரா என்பதையோ நீங்கள் அறியவில்லை. இலவச Wi-Fi வசதியை பயன்படுத்தும் போது இணையப் பாவனைக்கு எப்போதும VPN செயலியைப் பயன்படுத்தவும். இது ஆகக் குறைந்த மட்ட பாதுகாப்பையாவது வழங்கும்.
Windows 10 இயங்கு தளத்தில் எவ்வாறு தொடக்க ருளுடீ கருவி மூலம் பணி புரிவது தொடர்பான ஒரு உதாரணம் இந்த காணொளி இணைப்பில் உள்ளது:
பாதுகாப்பு மாற்றீடு: லினக்ஸ் ( Linux)
‘லினக்ஸ் என்பது கணனிகள் மற்றும் ஸ்மார்ட் போன் ரக கையடக்க தொலைபேசிகளுக்கான மாற்றீட்டு இயங்கு தளம் என்பதுடன் அது பரந்த அளவில் கணணி அறிவியலாளர்களால் பயன்படுத்தப் படுகின்றது. இதுவே கிடைக்கும் இயங்கு தளங்களில் பாதுகாப்பு மிக்கது என துறை சார் வல்லுனர்கள் அடையாளம் கண்டுள்ளனர். நவீன விநியோகங்கள் இந்த இயங்கு தளத்தில் ஏனைய இயங்கு தளங்களைப் போல் இலகுவாக உட்புகுத்தப்பட முடியும். ‘Ubuntu’, ‘openSUSE’, ‘Debian’, ‘Mint’ மற்றும் ‘Elementary OS’ என்பன இங்கு காணப்படும் பொதுவான விநியோகங்கள் ஆகும்.
லினக்ஸ் இயங்கு தளத்தில் காணப்படும் குறிப்பான அனுகூலம் அது இலவசமானது, திறந்த மூலம் உள்ளது மற்றும் உருவமைப்பதற்கு (Configure) நெகிழ்திறன் வாய்ந்தது என்பதாகும். இதன் மூலம் அனைவரும் மூலக் குறிமுறை (Source code), தவறுகள் மற்றும் பாதுகாப்பு பிழைகள் காணப்படின் அவை வெளிப்படுத்தப்பட்டு இலகுவில் திருத்தி அமைக்கப்படுவதால் ஏனைய இயங்கு தளங்களை விட விரைவாக செயற்படும். அத்துடன் இந்த இயங்கு தளம் ஏனைய இயங்கு தளங்களான windows அல்லது Apple போன்று பரந்துபட்ட பாவனையைக் கொண்டிராததால் குறைவான வைரஸ்களையே கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் லினக்ஸ் தனது சிறந்த லினக்ஸ் விநியோகப் பட்டியலை வெளியிடுகின்றது.