2. உங்களது சொந்த தகவல் தளத்தை எவ்வாறு உருவாக்குவது?

2. உங்களது சொந்த தகவல் தளத்தை எவ்வாறு உருவாக்குவது?


புலனாய்வு ஊடகவியல் என்பது முறைமைகள் எவ்வாறு பணியாற்றுகின்றன மற்றும் அவை எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன பற்றிய புரிதல்களை அடிப்படையாகக் கொண்டது – இந்த புரிதலின் அடிப்படையிலேயே நீங்கள் உங்களது செய்தியைக் கண்டுபிடித்து இது வரை உங்களது புலனாய்வை திட்டமிட்டிருக்கக் கூடும். விடைகளைப் பெறும் நோக்கில் உங்களது கேள்விகளை பின்வரும் வகைகளில் வடிவமையுங்கள்: இந்த தொடர் செயன்முறை அல்லது முறைமை எவ்வாறு பணியாற்ற வேண்டும்? யார், எவற்றை, எப்படி மற்றும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? இந்த தொடர் செயன்முறை எவ்வாறு பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றது? என்ன நியமங்கள் அல்லது மட்டக் குறிகள் (Bench Mark) பயன்பாட்டில் உள்ளன, அவை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் யார் அதை அமுல்படுத்துவார்? இவற்றுக்கான விடைகளின் விபரத் தன்மை மற்றும் முழுமை என்பன எங்கே மற்றும் எப்பொழுது தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை துல்லியமாக நிர்ணயிக்க உதவும்.

மேலதிகமாக, உங்களது புலனாய்வின் அகர வரிசை ஒழுங்கை பதிவு செய்து வைத்திருப்பது முக்கியமானதாகும். இதன் பொருள் உங்களது செய்தியை அகர வரிசைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதல்ல, நிகழ்வுகளின் கால அட்டவணையில் நேர ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தங்களை ஊசிகள் மூலம் சுட்டிக்காட்ட முடியும். இந்த செயன்முறை மூலம் எந்த நிகழ்வின் பின்னர் எது நடந்தது, என்ன விடயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன போன்ற விடயங்களின் தெளிவான விம்பம் ஒன்றை உங்களால் உருவாக்க முடியும்.

நீங்கள் அளவுசார் மற்றும் பண்புசார் அறிவுகளை வித்தியாசப் படுத்தி அறிய இயலுமானவராக இருக்க வேண்டும். அளவுசார் என்பது வரைபடத்தில் இலக்கங்களை இடுவது பற்றியது. உதாரணமாக குறித்த மருந்து ஒன்று எத்தனை முறை தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? நீர்நிலை ஒன்றின் மாசு மட்டம் என்ன? கடந்த ஐந்து வருடங்களில் நகரக் குற்றங்களின் போக்குகள் என்ன? அநேகமான சந்தர்ப்பங்களில் இலக்கம் ஒன்று உறுதியான சான்றை வழங்குவதன் காரணமாக சிறிய உள்ளூர்ச் செய்தி ஒன்றினை பாரிய தேசிய புலனாய்வாக மாற்றியமைக்கும் திறன் வாய்ந்தது. உதாரணமாக, உங்களது சமூகத்தில் காணப்படும் பாடசாலை இடை விலகல் எண்ணிக்கை ஒட்டுமொத்த நாட்டினது இடை விலகலுக்கு ஒத்ததாக இருக்கக் கூடும்.

இதற்கு எதிர்மாறாக பண்புசார் வரைபடமாக்கல் மக்கள், நிகழ்வுகள், காரணங்கள், ஊக்குவிப்புகள், உணர்வுகள் மற்றும் வாக்குவாதங்கள் பற்றியவை. உலகின் பல பகுதிகளில் அளவு சார் அல்லது எழுத்து வடிவ பதிவுகளை அணுகுவது சாத்தியம் மிகவும் குறைந்தது ஆகும், ஏனெனில் அவ்வாறான பதிவுகள் எவையும் காணப்படுவதில்லை. அவ்வாறான கடினமான ஆவணங்கள் குறைவான சூழலில் பிரச்சனைகளை புலனாய்வு செய்ய இரு வழிகள் காணப்படுகின்றன: உங்களது சொந்த அவதானிப்புகளைப் பாவித்தல் மற்றும் தொடர்புடைய நபர்களை கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களுக்கு உட்படுத்துதல் மூலமாக அது மேற்கொள்ளப்படலாம். இவ்வாறு உங்களது சொந்த தகவல் தளம் உருவாக்கப்படலாம். பிரச்சனை ஒன்றுடன் ஆரம்பம் செய்வது உங்களை ஒரு நபரை அல்லது மக்கள் குழு ஒன்றை நோக்கி நரக்த்தும், எனினும் தகவல் தளத்தை விபரம் பிரித்தல் (Profiling) இதற்கு எதிர்மாறான வழியில் தொழிற்படுகின்றது: ஒரு சிறிய நிலத்துண்டு அல்லது ஒரு வீதி விலாசம் அதை உரிமையாளரை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

இந்த அனைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தகவல்களையும் ஒழுங்குபடுத்த இலத்திரனியல் திட்ட முகாமைத்துவக் கருவிகள் காணப்படுகின்றன. இவை அறிவு பூர்வம் மிக்க தொடர்பு நபர்களுடனான நேர்காணல்கள், தகவல் தருபவர்கள் மற்றும் அவர்களின் துறைசார் இயலுமைகள் என்பவற்றை சேமிக்கும் தகவல் தளம் ஒன்றை உருவாக்க உதவும். அத்துடன் குறித்த தகவல் தளத்தில் கேள்விகளின் பட்டியல், உருவாக்கப்பட்ட யதார்த்தங்களை சேமிக்கும் யதார்த்தங்களின் பக்கங்கள் அத்துடன் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டி உள்ள கருதுகோள்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். அத்துடன் தொடர்புடைய ஆவணங்களின் இணைப்புகள் (Hyperlinks), யதார்த்தங்கள், புள்ளிவிபரங்கள், தகவல் வங்கிகள், நிகழ்வுகளின் குறிப்புகள் மற்றும் நேர்காணல்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். நுஎநசழெவந என்ற தகவல் தளம் ஊடகவியலாளர்கள் இடையே மிகப் பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கும் அதே வேளை குறித்த தகவல் தளம் இரகசியமான தகவல்களை சேமிக்க தேவையான பாதுகாப்பு வசதிகளை போதியளவில் கொண்டிருப்பதில்லை. முகாமைத்துவக் கருவிகளை தேர்வு செய்யும் போது பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.