உங்களது தகவல் தளத்துக்கான மேலதிகத் தகவல்கள் காகிதத் துண்டுப் பின் தொடர்தல் மூலம் கிடைக்கப் பெறலாம். காகிதத் துண்டுப் பின்தொடர்தல் என்பது பாடசாலை விளையாட்டு ஒன்றில் இருந்து பெறப்பட்ட உவமையாகும். இந்த விளையாட்டில் குழுத் தலைவர் காகிதத் துண்டுகளை தான் செல்லும் வழி தடங்களில் போட்டு விட்டு ஒழிந்து கொள்வார். அவரது அணியினர் குறித்த காகிதத் துண்டுகளைப் பின்பற்றி தம்மால் இயன்றளவு விரைவாக தமது தலைவரைக் கண்டுபிடிக்க வேண்டும். இதே வழியில் காகிதத் துண்டுப் பின்தொடர்தல் புலனாய்வு ஊடகவியலிலும் பணியாற்றுகின்றது. உங்களது கருதுகோளுக்கு ஆதரவளிக்கும் ஆவணங்களை அடையாளப்படுத்தி அவற்றை அணுகுவதற்கான மூலோபாயத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த தொடர் செயன்முறையில் ஒரு ஆவணம் தொடர்புடைய அடுத்த ஆவணத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். பின்னர் நீங்கள் உங்களது கண்டு பிடிப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை அறிவதற்காக காகிதத் துண்டுப் பின்தொடர்தலை எதிரான திசையில் மேற்கொள்வீர்கள்.
இந்த ஆரம்ப ஆவணங்களில் நீங்கள் தொடர்புடையவையாக இருக்கலாம் எனக் கருதும் அனைத்து தகவல்களையும் குறித்து வையுங்கள். உதாரணமாக ஒரு மனிதரின் சுயவிபரக் கோவை அவர் அகழ்வு நிறுவனம் ஒன்றில் சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வைரச் சுரங்கங்களில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றியத்தை காண்பிப்பதாக இருக்க கூடும் (யுத்த வைரங்களுடன் தொடர்புடையதாக). இந்த தனி நபரின் சுய விபரக் கோவையில் அவரின் வேலை வரலாற்றில் உள்ள இடைவெளிகள் குறிப்பிடப்படாமல் இருக்கக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் அடிப்படை எண்கணித அறிவு பயன் மிக்கதாக அமையும். பல்வேறுபட்ட பணிகளில் அவர் கழித்த காலங்களைக் கூட்டி ஆவணப்படுத்தப்படாத காலப்பகுதி ஏதாவது காணப்படுகின்றதா என நோக்குங்கள். வேலை அல்லது நிறுவனப் பதிவுகளில் யாராவது ஒரு நபர் சடுதியாக பணியை விட்டு நீங்கிச் சென்றுள்ளாரா என நோக்குங்கள். இது அந்த நபரின் வேலைத்தள வரலாற்றை அறிய மேலதிக ஆவங்களைத் தேடுவதற்கு வழிவகுக்கும். அந்த நபருக்கு எதிராக மனித வளப் பிரிவினால் களவு அல்லது மோசடி சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொண்ட தகவல் உங்களுக்கு கிடைக்கக் கூடும். நீங்கள் இந்தக் காகித சிறு துண்டைப் பயன்படுத்தி அந்த நபருக்கு எதிரான பொலிஸ், நீதிமன்ற அல்லது சிறைச்சாலை பதிவுகளை தேட முடியும். வேறொரு வழியில் கூறுவதானால் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் போது அது இன்னொரு உறுதி செய்யும் சான்றை நோக்கி உங்களை வழிநடத்தும்.
நீங்கள் தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற ஆவணங்களை வேறுபடுத்தி அறிந்த பின்னர் பரிவை செயன்முறைப் படுத்த வேண்டும். உங்களை குறித்த நபராக உருவகப் படுத்தி சாத்தியமான சூழ்நிலைக் காட்சிகளைக் காணுங்கள்: அவன் அல்லது அவள் என்ன செய்திருக்கக் கூடும்? அவன் அல்லது தெரிவு யு அல்லது தெரிவு டீ ஐ தேர்ந்தெடுத்திருந்தால் ஏதாவது வித்தியாசங்கள் இருந்திருக்கக் கூடுமா? இது உங்களுக்கு புத்திசாலித்தனமற்ற தேடல்களில் இருந்து விடுபட உதவும். ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் காலம் கழித்த ஒரு நபர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பின் அவரைப் பற்றிய வரலாற்று தகவல்களை ஜனாதிபதி செயலகத்தில் தேடுவதில் எந்தப் பயனும் இருக்காது. இந்த நியமனம் இரகசியமாக சில விபரங்களை மாத்திரம் கொண்ட குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மாறாக இது பற்றி அந்த நபர் வசித்த வெளிநாட்டில் தகவல்களைத் தேடுவது அல்லது அவரது எல்லைகள் தாண்டிய நகர்வுகளை கண்டுபிடிப்பது விளைதிறன் மிக்கதாக அமையும்.
அதிகமான காகிதத் துண்டுப் பின்தொடர்தல் பொது ஆவணப் பதிவுகளை தொடர்வதன் மூலம் மேற்கொள்ளப்படலாம், எனினும் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை அணுகுவதற்கு புத்தாக்கமுள்ள மூலங்களை அடைதல் திறனைப் பயன்படுத்த வேண்டும். அதிகமான ஊடகவியலாளர்கள் நூலகங்கள் மற்றும் ஏனைய ஆவணக் காப்புகளை பயன்படுத்துவது இலகுவான விடயம் என எண்ணுகின்றனர். அவைகள் அகர வரிசைப்படி சுட்டெண் வழங்கப்பட்டுள்ளன, எனவே குறித்த நபரின் பெயரைப் பயன்படுத்தி இலகுவாகத் தேடலாம் என எண்ணுகின்றனர். எனினும் அது அவ்வாறு இலகுவானதல்ல. நீங்கள் கணணி மயப்படுத்தப்பட்ட பதிவுகளைத் தேடுகையில் குறித்த நபரின் பெயரை உட்புகுத்துவதன் மூலம் குறித்த நபர் பற்றிய அனைத்து பதிவுகளையும் அனேகமாக மிக அதிகமான பொருத்தமற்ற விடயங்களுடனும் வழங்கும். எனினும் அதிகமான நாடுகளில், விசேடமாக அபிவிருத்தி அடையாத நாடுகளில் பொதுப் பதிவுகள் தூசு மிகுந்த அறை ஒன்றினுள் அடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இந்த அறையின் காவலாளியுடன் பேசி அந்த அறையை அணுகி அவை எவ்வாறு சுட்டெண் வழங்கப்பட்டுள்ளன மற்றும் எவ்வாறு அந்த சுட்டெண்களைப் பயன்படுத்துவது என்பதனைக் கண்டறிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அதிக நேரம் மற்றும் சக்தியைச் சேமிக்க முடியும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் பொதுப் பதிவு ஆவணங்களான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம் போன்றவற்றில் இருந்து தேடலை ஆரம்பிப்பது சிறந்த வழியாகக் காணப்படும். எனினும் இணைய செய்தித் தகவல் தளங்கள் மக்கள் பற்றிய தேடல் ஆச்சரியம் மிக்க வகையில் பயனுள்ள தகவல்களை வழங்க முடியும். அநேகமான உள்ளூர் செய்திப்பத்திரிகைகள் இணைய வடிவிலும் காணப் படுகின்றன அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம். அலுவலகங்களுக்குக் கூட சொந்த இணையத் தளங்கள் உள்ளன தனிநபர்கள் வலைப்பதிவுகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைக் கொண்டுள்ளனர். ஒரு நபர் தேடுதலின் போது தனது சொந்தப் பெயரைப் பயன்படுத்த விரும்பினால் அது சிலவேளைகளில் அவன்ஃஅவள் தேடப்படும் நபரின் பல்கலைக் கழக விழா பங்குபற்றல் வரவுப் பதிவேடு போன்ற அந்தரங்க தகவல்களுடன் தொடர்புபட்டால் குறித்த தேடல் நீதிமன்ற வழக்குகளில் முடிவடையலாம். செய்திகள் கூடியளவான விபரமாக்கல் மற்றும் காகிதத் துண்டுப் பின் தொடர்தல் தொடர்பான உள்ளூர் கட்டட விபரங்கள் போன்ற (உதாரணமாக வங்கிகள், நிறுவனங்கள், அரச அலுவலகங்கள்), மற்றும் செலுத்தப்பட்ட சட்ட அறிவித்தல்கள் (உதாரணமாக, சாசனங்கள், பெயர் மாற்றங்கள், மரணச் சடங்குகள், அறுதியீடுகள், ஏலங்கள், விளைமனுக்கள், கைப்பற்றப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத சொத்துகள் போன்றன) அத்துடன் கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றன. இந்த தகவல் துணுக்குகள் அனைத்தும் நீங்கள் தீர்க்க விரும்பும் புதிரின் ஒரு பகுதியை உங்களுக்கு வழங்குகின்றன.
To sum up, you follow a paper trail by:
- சுருக்கமாக காகிதத் துண்டுப் பின்தொடர்தல் பின்வருவனவற்றின் மூலம் மேற்கொள்ளப்படலாம்.
- இணையத் தேடுதல், ஆவணக் காப்புகளுக்கு சென்று குறித்த நபர் பற்றிய கிடைக்கக் கூடிய ஆவணங்களை திரட்டும் வகையில் மூலங்களை உங்களுடன் பேசுவதற்கு இணங்க வைத்தல்.
- இந்த ஆவணங்களை தரவு வரைபடமாக்கல் உத்திகள் மூலம் வரைபடமாக்கி இடைவெளிகள், முரண்பாடுகள் மற்றும் தொடர்ச்சி அற்ற தன்மைகளை தேடுதல்.
- குறித்த இடைவெளிகளை நிரப்பக் கூடிய மற்றும் முரண்பாடுகளை தீர்க்கக் கூடிய ஆவணங்கள் எவை எனத் தீர்மானித்து அந்த ஆவணங்கள் பற்றிய புலனாய்வை தொடங்குதல்.