2.3. கணணி உதவியுடனான அறிக்கையிடல் (CAR)


கணணி உதவியுடனான அறிக்கையிடலில் ஈடுபாடுள்ள ஊடகவியலாளர் ஒருவர் செய்தி விடயம் ஒன்றுக்கான தகல்வகளை சேகரிக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய கணணி ஒன்றைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இணையம் நிருபர்களுக்கு தகவல்கள் கிடைத்தல் மற்றும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அத்துடன் அவற்றை மீள எடுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான பரப்பு எல்லைகளை அதிக அளவில் அதிகரித்துள்ளது. தேடல் பொறிகள் இணையத்தில் தகவல்களைக் கண்டுபிடிப்பதில் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. அவற்றில் மிக நன்றாக அறியப்பட்டவைகளில் DuckDuckGo மற்றும் meta-crawlers என்பன உள்ளடங்குகின்றன, இவை ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து தேடல் பொறிகளைப் பயன்படுத்தி தேடலை மேற்கொள்கின்றன. வினைத்திறன் மிக்க இணையத் தேடலுக்கான உத்தி முக்கிய சொற்கள் மற்றும் சொற்றொடர்களை கச்சிதமாக தேர்வு செய்வதாகும்;. இது தேவையற்ற விடயங்கள் தேடப்படுவதைத் தடுக்கின்றது. உங்களது தேடல் விருப்பத் தெரிவுகளில் அதி கூடிய அடைவுகளை பெறும் வகையில் தேடல் விருப்பத்தெரிவை மேற்கொள்ள முடியும்.  DuckDuckGo தேடலில் ஒவ்வொரு தேடலுக்கும் அடைவுகளின் எண்ணிக்கையை மட்டுப் படுத்தும் வகையில் நேரம், பிராந்தியம் மற்றும் மொழிகளை வடிகட்ட முடியும் அல்லது ஆய்வு முறையை தேர்வு செய்யவும் முடியும்.

முக்கிய சொற்கள் உங்கள் கவனக் குவிவைக் குறுக்குவதற்கான எளிமையான வழியை வழங்குகின்றன, எனினும், அநேகமான சந்தர்ப்பங்களில் முக்கிய சொற்கள் மாத்திரம் போதுமானவை அல்ல. உதாரணமாக நீங்கள் ஜோன் ஸ்மித் என்பவரின் தகவல்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளீர்கள் எனக் கொள்வோம். தேடல் பொறி ஒன்றில் ஜோன் ஸ்மித் என தட்டச்சு செய்வதன் மூலம் குறித்த தேடல் பொறி அந்த இரண்டு பெயர்களும் காணப்படக் கூடிய பல இலட்சக்கணக்கான ஆவணங்களைக் கொண்டுவரும். இவ்வாறான ஆவணங்களில் மூழ்கி விடுவதைத் தவிர்க்க நீங்கள் தேடும் ஜோன் ஸ்மித் உடைய ஊர் அல்லது தொழில் போன்ற குறிப்பான விடயங்களை அடையாளம் காண வேண்டும். இணையத் தேடலின் போது அனைத்து வெளித்தெரியும் இணையப் பக்கங்களையும் மூடுவதுடன் நீங்கள் கணணித் திரை ஒன்றின் படத்தை பகிர விரும்பினால் அதில் உள்ள விட்டுக்கொடுக்கும் தன்மையுள்ள அனைத்து தகவல்களையும் அகற்றி விட வேண்டும்.

உங்களது தகவல் தளத்தை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் தேடக் கூடிய வகையில் உங்களுக்கு பொருத்தமான வகையில் உருவாக்குவது சிறந்ததாகும். இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது நேர்காணல்கள் அல்லது குறிப்புகளின் வரிவடிங்களை சேமிக்கும் போது அவற்றை மீண்டும் இலகுவாக மீள எடுக்கும் வகையில் சேமிக்க வேண்டும். இந்த விடயங்களுக்கு மேலே விபரிக்கப்பட்ட திட்ட முகாமைத்துவக் கருவிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
இறுதியாக, கணணி உதவியுடனான அறிக்கையிடலில் ஈடுபடுவதற்கு பின்வரும் ஒழுக்க விடயங்களைக் கருத்தில் கொள்ளவும்.

இறுதியாக, கணணி உதவியுடனான அறிக்கையிடலில் ஈடுபடுவதற்கு பின்வரும் ஒழுக்க விடயங்களைக் கருத்தில் கொள்ளவும்:

  • சாத்தியமாயின் மூல ஆவணத்தை வாசிக்கக் கூடிய விபரமான உசாத்துணை அல்லது இணையத்தளங்களுக்கான இணைப்பை குறிப்பிடவும். நீங்கள் கண்டறிந்து பயன்படுத்திய தரவு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
  • தரவைக் கவனமாக, தகவலின் திகதி உட்பட மீள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • புள்ளிவிபரம் மற்றும் எண்கள் தொடர்பு பட்ட தகவல்களில் இருந்து சரியான முடிவுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்; உங்களது வாசகர்கள் கணிப்பீடுகளை மேற்கொள்ள இயலாதவர்களாக, உங்களது கணித அறிவில் தங்கி இருப்பவர்களாக இருக்கக் கூடும்.

சில ஆய்வு உத்திகள் பின்வரும் இணைப்புகளில் காணப்படுகின்றன: