3. உங்களது தகவல் தளத்தை எவ்வாறு அகழ்வது?

3. உங்களது தகவல் தளத்தை எவ்வாறு அகழ்வது?


சான்றுகளை அடைவதில் உள்ள விவாதத்துக்கு உரிய வகையில் ஆக்கக் கூடுதல் உதவி புரிவது தகவல் அகழ்வு (data mining) ஆகும். எந்த வழி உங்களை சரியான பாதையில் கொண்டு போகக் கூடும் என்பது தொடர்பில் சிந்தியுங்கள்: வைத்தியசாலை நோயாளி ஒருவர் மேற்கொள்ளும் தாதிகளின் திருட்டு தொடர்பான முறைப்பாடா அல்லது சுகாதார அமைச்சின் கடந்த ஐந்து வருடங்களில் இடம்பெற்ற திருடுதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் பதவி நீக்கம் பற்றிய தகவல் தளமா? அனைத்து தகவல்கள் தொடர்பாகவும் காணப்படுவது போல், புள்ளிவிபரங்கள் கூட திரிபுபடுத்தப்பட்டு தவறான தகவல்களை வழங்க பயன்படுத்தப்படலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், வினைத்திறன் மிக்க தகவல் தள அகழ்வுகள் கடந்த தசாப்தத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

சர்வதேச தரவுகள் மிகவும் தொடர்பு கூடிய அடைவுகளைத் தர வல்லன. உதாரணமாக, அபிவிருத்தி நிதிக் கொடையாளர் நிறுவனங்கள் சிலவேளைகளில் ஒவ்வொரு வருடமும் தமது நிதி வளங்களை எவ்வாறு செலவு செய்தன என அறிக்கை வெளியிடுவது வழமையாகும். உங்களது நாட்டுடன் தொடர்புடைய அவ்வாறான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்திகளை “கொடையாளர் நிறுவனங்கள் (உங்களது நாட்டுக்கு) அதிக நிதி உதவியை எமது அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்க செலவு செய்துள்ளன” போன்ற தலைப்புகளுடன் உங்களால் செய்திகளை வெளியிட முடியும்.

தகவல் தள அகழ்வு எப்போதும் நிதியியல் தொடர்பானதாகவே அமைய வேண்டும் என்பதில்லை. சமூக வலைத்தளங்களின் பகுப்பாய்வுகள் தீவிரவாத வலையமைப்புகள், அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகங்களில் உள்ள பெரிய செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களின் சமூக வலையமைப்புகள் தொடர்பில் செய்திகளை உருவாக்கியுள்ளன. இந்த வலையமைப்புகள் ஒரு குறித்த துறை ஒன்றின் அங்கத்தவர்கள், ஒரு புவியியல் பிராந்திய சமூகம் அல்லது அரசியல் கட்சி ஒன்றில் உள்ள முக்கிய நபர்களாக இருக்கக் கூடும். இது தொடர்பில்; அவர்கள் உழைக்கும் பணம் பற்றிய ஒன்று திரட்டப்பட்ட தகவல்கள், யாருடன் அவர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் யாரைச் சந்திக்கிறார்கள் தொடர்பான தகவல்கள் அவர்களது சமூக வலையமைப்பு விம்பத்தை உருவாக்கும். அது சமூகத்தில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு பற்றி சில விடயங்களை அறிவிக்கும்.

ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தகவல் தளங்களில் உள்ள தேவையான தகவல்களை நீங்கள் தொகுப்பது முக்கியமானதாகும். ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது தகவல் தளங்களில் சிலவேளைகளில் தலைப்புகளின் அடிப்படையில் தகவல்களை சேமித்திருக்கக் கூடும். இந்த தகவல் தளங்களில் கட்டுரைகள், ஆய்வுகள், கற்கைகள் அத்துடன் ஒப்பந்தங்களும் காணப்படக் கூடும். அவ்வாறான தரவுகள் பின்னர் மேலதிக பின்புல ஆய்வுக்கு பயன்படுத்தப்படலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் அகழ்வுகளுக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் தகவல் தளங்களைக் கொண்ட நிலையங்களை உருவாக்கியுள்ளனர்.