புலனாய்வு ஊடகவியலின் பெரும் பகுதி பண்புசார் வகையாகும்: அது எவ்வாறு மற்றும் ஏன் விடயங்கள் தவறாக இடம்பெற்றன மற்றும் யார் அதற்கு பொறுப்பாளர்களாக இருக்கக் கூடும் என நோக்குகின்றது. எனினும், அனேகமாக எல்லா புலனாய்வுச் செய்திகளும் அளவுசார் தரவுகளையும் கொண்டுள்ளன. துண்டு விழும் தொகை எவ்வளவு பெரியது? உங்களது நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடியின் புள்ளிவிபரம் என்ன? ஒவ்வொரு வருடமும் சிகிச்சை நிலையங்களில் திரும்பிச் செல்வோரின் எண்ணிக்கை என்ன?
இதன் பொருள் சிறிய ஒன்றில் இருந்து ஒரு பெரிய இலக்கத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதே ஆகும். அத்துடன் சதவீதம் போன்ற எளிமையான கணிப்பீடுகளின் மூலம் யதார்த்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதிகமான மக்கள் இலக்கங்களை மிகவும் விரும்புவதின் காரணமாக அவர்கள் ஊடகவியலாளர்களாக மாறுவதில்லை. எனினு, இலக்கங்கள் அவ்வளவு கடினமானவை அல்ல, யதார்த்தத்தில் அவை புலனாய்வு செய்தி வெளியிடலுக்கு அவசியமானவை.
அதிகமான மக்கள் தமக்கு எண்கள் தொடர்பில் திறன்கள் இல்லை என எண்ணிய போதும் ஒவ்வொரு நாளும் எண்களை மிகவும் நளினமான வகையில் பயன்படுத்துகின்றனர்: வாழ்க்கைச் செலவுக்கான பாதீடு உருவாக்கம், புகையிரத பருவகால சீட்டு இலாபகரமானதா எனத் தீர்மானித்தல் அல்லது சம்பள உயர்வு ஒன்றுக்கான பேச்சுவார்த்தை என்பன இதற்கான உதாரணங்களாகும். முழுமையான எண்ணறிவு உள்ள மக்களுக்கு கணிதம் பற்றிய பயத்தை ஏற்படுத்துவதில் அதிகமான பாடசாலைகளில் வழக்கில் உள்ள கற்பித்தல் முறைகளே காரணமாகும். அவர்கள் சுருக்கமான கணித அறிவியலுடன் எண்களின் நடைமுறைப் பயன்பாடுகளை இணைத்துப் பயன்படுத்த கற்பதில்லை.
ஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம் ஊடகங்கள் எண்களின் நடைமுறைப் பயன்பாடுகளிலேயே கவனக் குவிவைக் கொண்டுள்ளதுடன் அவை அளவுசார் சாய்வைக் கொண்டுள்ளன என்பதாகும் (உதாரணமாக, யார் புள்ளிவிபரத்தை தொகுத்தது, எவ்வாறு மற்றும் எதற்காக). எனினும் நீங்கள் அடிப்படையை விளங்கிக் கொள்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சிகிச்சை நிலைய தாதியின் பணி விபரப் பட்டியல் மற்றும் பணி வினைத்திறனை பரிசோதிக்க விரும்பினால், இந்தப் பணியின் சாதாரண நாள் ஒன்றின் நேர அட்டவணையை உருவாக்கக் கூடிய துறைசார் வல்லுநர் ஒருவரின் உதவியைப் பெற முடியும். பின்னர் அவதானித்தல் மற்றும் நேர்காணல்கள் மூலமாக நீங்கள் பின்வரும் விடயங்களைக் கண்டறியலாம்:
- எவ்வாறான பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது? தாதிகள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றனரா? அவை எவை? தமது வேலைத்திட்டத்துக்குள் பொருத்த முடியாத அளவுக்கு அதிக பணிகள் அங்கு காணப்படுகின்றனவா?
- தாதி ஒருவரின் பணி விபரப் பட்டியல் சிகிச்சை நிலையத்துக்கு சராசரியாக வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கையுடன் எவ்வாறு தொடர்பு படுகின்றது? ஒரு நோயாளருடன் பணி புரிய எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றது?
அதே போல், உங்களுக்கு காற்று மாதிரி ஒன்று பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமாக இருந்தால், அந்தக் காற்றில் காணப்படும் மாசுபடுத்திகள் எவை? அத்துடன் இந்த மாசுபடுத்திகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியனவா மற்றும் எந்த மட்டத்துக்கு மேல் அவை கேடு விளைவிக்கும் போன்ற தகவல்களை ஒரு வைத்திய துறைசார் வல்லுனரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். அங்கு காணப்படும் மாசாக்கிகளின் மட்டங்களை உங்களது நாட்டின் தூய்மை ஒழுங்கு விதிகளுடன் ஒப்பிட்டு நோக்குங்கள். இந்த பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னர் உருவாகி இருப்பதையும் காலத்துடன் மாசு மட்ட அளவுகள் பெரிய அளவில் மாற்றமடையாமல் இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். அல்லது, ஒரேவகையான உச்ச அளவுகள் ஒழுங்கான் இடைவெளிகளில் ஏற்படுவதையும் அல்லது அந்த எண்ணிக்கைகள் ஏற்கனவே காணப்பட்ட அளவுகளிலும் பார்க்க குறைவாக இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். இங்கு ஊடகவியலாளரின் பணி குறித்த இலக்கங்களை விளக்குவதும் இந்த பிரச்சனை பெரியதாக மாறியுள்ளதா அல்லது வெறுமனே அதிக பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளதா என விளக்குவதுமாகும். எனினும் இலக்கங்கள் மாத்திரம் போதுமானவை அல்ல. சூழமைவும் தேவைப்படும் – ஏன் இந்தப் பிரச்சனை அதிகம் பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளது? – உங்களது செய்தி அந்த இடத்தில் காணப்படலாம்.
அநேகமான நாடுகளில் காலநிலை புள்ளி விபரங்கள் நீண்ட காலமாக சேகரிக்கப்படும் இலக்கங்களின் பதிவுகளில் ஒன்றாகும். உதாரணமாக ஆபிரிக்காவில் அவை காலனித்துவ அதிகார தரப்புகளினால் சேகரிக்கப்பட்ட ஆரம்ப புள்ளி விபரங்களில் ஒன்றாகும், அத்துடன் வெள்ள மற்றும் வறட்சி அனர்த்தங்கள் தொடர்பான சமூக வாய்வழி வரலாற்று பாரம்பரியங்கள் மூலமாக காலனித்துவ ஆட்சிக்கு முன்னரான விடயங்கள் கூட அறியப்படலாம். அதிகமான ஆசிய நாடுகளில் காலநிலை போக்குகளை ஆவணப்படுத்தும் தனியான தகவல் தளங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டுக்குரிய உத்தியோகபூர்வ காலநிலைப் பதிவுகள் கூடக் காணப்படுகின்றன. எனவே நீங்கள் வெள்ள மற்றும் வறட்சி அனர்த்தங்கள் போன்ற கால நிலை மாற்றங்கள் உங்களது நாட்டில் உண்மையில் அசாதாராணமாகக் காணப்படுகின்றனவா என ஆய்வு செய்ய விரும்பக் கூடும். காலநிலைப் போக்குகளில் காணப்பட்ட மாற்றங்கள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு அல்லது ஒப்பிடலுக்கு உட்படுத்தலாம்.
இங்குள்ள விடயம் யாதெனில், எப்போதும் நீங்கள் எவ்வாறு தரவுகள் உங்களது செய்திக்கு பங்களிக்கும் என நோக்க வேண்டும். சிலவேளைகளில் மக்கள் துணுக்குகளுடன் உங்களை நோக்கி வரலாம், எனினும் நீங்கள்தான் செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். செய்திக்கான யோசனைகள் வாசிப்பதன் மூலம், ஒட்டுக் கேட்பதன் மூலம் அல்லது ஊடக அறிக்கை ஒன்றில் இருந்து கிடைக்கப்பெறலாம். ஊடக அறிக்கைகள் புள்ளிவிபரப் பகுப்பாய்வு உள்ளடங்கியதாக வடிவமைக்கப்படுவதில்லை – அல்லது குறைந்த பட்சம் அது ஊடக அறிக்கை எழுதுவோரின் எண்ணமாக இருக்கக் கூடும். எனினும் ஊடக அறிக்கைகள் முக்கிய தகவல்களை வழங்குவதுடன் பாரிய செய்தியை நோக்கி உங்களை வழிநடத்தக் கூடும். சிறந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் சாத்தியமான எந்த ஒரு செய்தித் துப்பினையும் தவற விட மாட்டார்கள். எனினும், இலக்கங்கள், வரைபுகள் அல்லது அளவுசார் தரவுகளின் ஏனைய வடிவங்கள் தொடர்பில் எப்போதும் சந்தேகக் கண் கொண்டே நோக்க வேண்டும். முதல் பார்வையில் தரவுகள் சுவாரசியம் மிக்க செய்தி ஒன்றை வழங்கக் கூடியன போல் தோன்ற முடியும், எனினும் சிறந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் எவ்வாறு தகவல் சேகரிப்பு நிகழ்த்தப்பட்டது, எவ்வாறு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டன, யார் இதற்கு நிதி வழங்கி பிரசுரித்தனர், அதில் ஏதாவது முக்கிய விபரங்களை தவிர்ப்பது அவர்களது நலனுக்குரிய விடயமாக காணப்பட்டதா போன்ற குறித்த தரவுகள் திரட்டப்பட்ட விதம் குறித்து கேள்விகளை எழுப்புவார்கள்.