4.1. மாதிரிகள் மற்றும் ஒப்பீட்டுக் குழு


வெறும் இலக்கங்கள் மிகக் குறைவான விடயங்களையே கூறும். அவை பெறப்பட்ட பாரிய தொகையின் பகுதியின் கருத்துக்களையே அவை கொண்டிருக்கும். ஐந்து அல்லது ஆறு வைத்தியர்கள் என்பது ஈர்ப்பு மிக்கது போல் தோன்றும், எனினும் ஐக்கிய இராச்சியத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்களில் இருந்து 20 வைத்தியர்களை தெரிவு செய்து பெறப்பட்ட முடிவுகளில் 16 வைத்தியர்கள் மிகவும் ஈர்ப்பு மிக்கவர்களாகக் காணப்படவில்லை எனக் கொள்வோம். அது நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் மற்றும் நடந்து கொள்வார்கள் என்பதை பிரதிநிதித்துவம் செய்யாது.

தகவல் சேகரிப்பு ஒன்று பூர்த்தி செய்ய வேண்டிய பல வரன்முறைகள் உள்ளன. எமது வைத்தியர்கள் உதாரணத்தில், நாடளாவிய ரீதியில் வேறுபட்ட கருத்துகளைப் பெறும் நோக்கில் வேறுபட்ட நகரங்கள் அல்லது வைத்தியசாலையில் இந்த தகவல் சேகரிப்பு மேற்கொள்ளப் பட்டதா என்ற கேள்வியை ஊக்டவியலாளர்கள் கேட்க வேண்டும். விடைகளை சேகரிக்க என்ன முறை பயன்படுத்தபப்ட்டது, தொலைபேசி உரையாடலா, இணையவழியா அல்லது நேருக்கு நேர் நேர்காணல்களா? இவை சில உதாரணங்கள் மாத்திரமே, தகவல் சேகரிப்பின் செல்லுபடித்தன்மை ஒன்றை கேள்விக்கு உட்படுத்தும் போது அதன் செல்லுபடித்தன்மை தலைப்பு மற்றும் அடைவுகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.