படங்கள் மற்றும் வரைபுகளை விளக்கும் போது முதலில் விபரக் குறி காட்டிகளை (legends) நோக்க வேண்டும். வரைபுகளில், அதன் அளவீடுகள் (scale) மற்றும் ஆரம்ப புள்ளி என்பவற்றை புரிந்து கொள்ள வேண்டும். அளவீட்டை பெருப்பித்தல் மற்றும் மாற்றங்களை காண்பிக்க ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து மாத்திரம் ஆரம்பித்தல் போன்ற நோக்கல் மாற்றங்களை மேற்கொள்வது இலகுவானதாகும். வரைபுகளை கருத்தில் கொள்ளும் போது சதவீதம் தொடர்பில் ஐயம் கொண்டவர்களாகவே இருங்கள். மாதிரிகள் மற்றும் ஒப்பீட்டுக் குழு தொடர்பான மேலே தரப்பட்ட தகவல்களை மனதில் நிலை நிறுத்துங்கள்.
சிலவேளைகளில் இலக்கங்களின் தொகுதிகள் இரண்டு ஒரே போக்கை கொண்டனவாக தோன்றக் கூடும். எனினும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டனவாகவோ அல்லது அவற்றுக்கு இடையே காரண காரிய உறவு காணப்படுகிறது என்றோ பொருள் அல்ல. சிறுவர்கள் வளரும் பொது பெரிதகின்றனர். வயது செல்லச் செல்ல அவர்களின் மொழித் திறன்கள் அதே வீதத்தில் முன்னேறுகின்றன. எனினும் அவர்களது உடலியல் வளர்ச்சியுடன் மொழித் திறன்கள் முன்னேறுகின்றன என அர்த்தமல்ல. மீண்டும், ஒரு தொடர்பு ஏன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அறிய நீங்கள் வரைபுகள் மற்றும் அட்டவணைகளை கவனமாக நோக்க வேண்டும். கொடுக்கப்பட்ட தொடர்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒப்பிடக் கூடிய விடயங்களில் செல்லுபடியான ஆய்வுகள் ஏதாவது உள்ளதா? அதே போல் ஒரு விடயத்தை தொடர்ந்து இன்னொரு விடயம் நடப்பது முதலாவது விடயம் இரண்டாவது விடயத்தை ஏற்படுத்தியது என்று பொருள் கொண்டதல்ல. தரவுகள் மாத்திரம் எதையும் நிறுவாது. சூழமைவை சோதிக்க ஆய்வு அவசியமானது, அதன் மூலம் ஏனைய சாத்தியமான காரணங்களை ஒதுக்கி விட்டு முதலாவது விடயம் இரண்டாவது விடயத்தை ஏற்படுத்திய பொறிமுறையை துல்லியமாக அறிவது அவசியமானது.
இந்த இடத்தில், நீங்கள் தகவல்கள் மற்றும் சாத்தியமான மூலங்களின் பெயர்கள் என்பவற்றை சேகரித்து விட்டீர்கள் அத்துடன் உங்களது தகவல் தளத்தையும் உருவாக்கி விட்டீர்கள். அடுத்த அத்தியாயம் சிறந்த மனித மூலங்களை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் அந்த மூலங்கள் அறிந்த விடயங்களின் மீதான ஆழ்ந்த பார்வையை மேற்கொள்வது எவ்வாறு என்பது போன்ற விடயங்களை விளக்கும்.