அத்தியாயம் 6 உள்நோக்கு அறிவு

அத்தியாயம் 6 உள்நோக்கு அறிவு

மனித மூலங்கள் ஆவண புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவரின் பாரிய சொத்துக்களில் சிலவாகும். சிறந்த மூலங்களுடன் ஒருவர் நம்பிக்கை வாய்ந்த உறவைக் கட்டி எழுப்பினால் அது பாரிய செய்திகளை நோக்கி வழிநடத்தும். இந்த அத்தியாயம் மூலங்கள் தகவல்களை விருப்பத்துடன் பகிரும் வகையில் மூலங்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் எவ்வாறு இந்த உறவுகளைக் கட்டி எழுப்புவது என்பது தொடர்பில் கலந்துரையாடுகின்றது. இந்த தொடர்செயன்முறையின் பகுதி மோசடி நபர் ஒருவரிடம் இருந்து துறைசார் வல்லுனரை எவ்வாறு வேறுபடுத்தி அறிவது என்பதாகும். எஞ்சிய பகுதி தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக ஊடகவியலாளர்களை செல்வாக்குக்கு உட்படுத்த முனையும் ஆதரவு தேடுவோர் (Lobbyist) மற்றும் ஊடகவியலாளர்களிடம் தாம் சார்ந்த அமைப்புகளின் நலன் பேணும் நோக்கில் நிகழ்வுகளைத் திரித்துக் கூறும் நபர்கள் (Spin Doctor) ஆகியோரை அடையாளம் காணுவதுடன் தொடர்புபட்டதாகும்.