2.3. புலனாய்வு நேர்காணலின் பொழுது


அது உங்களுக்கு தேவையான விடைகள் பற்றியதாகும்
உங்களது நோக்கம் எப்போதும் செய்தியைப் பெறுவதே அன்றி வெற்றி பெறுவது அல்ல. எனவே நிதானமான மற்றும் அமைதியான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நேர்காணல்களின் முக்கிய நோக்கம் எப்போதும் தகவல்கள் மற்றும் விடைகளைப் பெற்றுக் கொள்வதாகும். உங்களது கேள்விகள் ஒரு முடிவுக்கான வழியே ஆகும். நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்ச்சி வசப்பட்ட சமிக்ஞையும், உயர்த்தப்பட்ட புருவம், ஒரு புன்னகை, ஒரு தோளசைப்பு போன்றன உங்கள் தகவல் மூலத்தின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் மனிதர்கள், எனவே இது உங்கள் பதில்களில் பிரதிபலிக்கக் கூடும். அத்துடன் தொலைக்காட்சியில் ஒரு இறுக்கமான முகம் பார்வையாளர்களை சோம்பலுக்கு இட்டுச் செல்லும். எனினும் கவனமாக இருங்கள், எல்லைகளை அறிந்து கொள்ளுங்கள். ஒரு திடீர் எழுச்சி (outburst) தகவல் மூலங்கள் தமது வார்த்தைகள் விசாரணைக்கு உள்ளாகின்றன என்ற உணர்வை வழங்குவதால் அவர்கள் தமது விடைகள் தொடர்பில் கவனமெடுக்க ஆரம்பிப்பார்கள். தூண்டுதல் (provocation) திடீர் திருப்பமுள்ள பிரச்சனை அல்லது பிரயோசனமற்ற வெளியேறுதலை ஏற்படுத்தும். உங்களது வான் தாக்கம் பொருத்தமற்றது என கூறப்படுவதுடன் உங்களை ஒரு கெட்ட தோற்றத்தில் காண்பிக்கும். உங்களது பதில்களை தன்னியல்பானவை ஆக அன்றி நிதானமானவையாக வைத்துக் கொள்ளுங்கள். யாராவது விவாதம் ஒன்றைத் தூண்டினால் அது அவனை அல்லது அவளை உங்களது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து பாதுகாக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விடயத்துக்கு வாருங்கள்
தகவல் மூலங்களின் விடைகள் உங்களது நெளிவான கேள்விகளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, விடையளிக்கும் போது அவர்களை குழப்பவோ இடையறுக்கவோ வேண்டாம். அனுபவம் மிக்க அரசியல்வாதி அல்லது தொழிலதிபர் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான நேர்காணல்களை சந்தித்திருப்பார். அவர்களின் நேரம் பெறுமதி வாய்ந்தது, அத்துடன் அவர்கள் கேள்வியைத் தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடுவார்கள். அவர்கள் உருவாக்கிய பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதில் நீங்கள் வெற்றி பெற்றால் அவர்களின் புகழ், பதவி, பணம் சிலவேளைகளில் அவர்களின் பணித்துறை என்பவற்றை இழக்க வேண்டி ஏற்படும் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். சூழ்நிலை மற்றும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் ஆகியோரை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், கேள்வி ஒன்றை இலகுவாக கேட்பது பலனளிக்கவில்லை என்றால் அதை நேரடியாகவே கேளுங்கள். அவர்களின் விடைகள் புரிந்து கொளவதற்கு கடினமானதாக இருப்பின் கேள்வியின் சொல்வடிவத்தை மாற்றி கேள்வியைக் கேளுங்கள் அத்துடன் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சில தகவல் மூலங்களுக்கு தமது எண்ணங்களை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை இருக்கும் அத்துடன் அவர்கள் மீண்டும் முயற்சிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் பதில்களைக் கவனமாகக் கேளுங்கள், அது உண்மையாகவே உங்களது கேள்விக்கான விடையாக அமைந்துள்ளதா? இல்லாவிட்டால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். உங்களது தகவல் மூலம் தரும் விடையை நீங்கள் ஒழுங்காகப் பெற்றுள்ளீர்கள் என உறுதி அவர்களின் விடையை நீங்கள் மீண்டும் அவர்களுக்குக் கூட முடியும் (“எனவே நீங்கள் சொல்வது என்னவென்றால்….?)

ஒரு முழுமையான விடையைப் பெறுங்கள்
நீங்கள் நேர்காணலுக்கு உட்படுத்தும் நபர் கச்சிதமான விடை ஒன்றை வழங்காத சந்தர்ப்பத்தில் அவர்கள் “அண்மையில்”, “சில”, “அதிகமான” அல்லது “தீர்க்கமான நடவடிக்கை” போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வார்கள். அவ்வகையான சந்தர்ப்பங்களில் நீங்கள் அவற்றை அதிக குறிப்பான விடைகளைத் தூண்டக் கூடிய “எப்பொழுது?”, “எத்தனை?”, “உங்களால் அந்த எண்ணிக்கையை மதிப்பிட முடியுமா?” அல்லது “குறிப்பாக நீங்கள் என்ன செய்வீர்கள்” போன்ற கேள்விகளைப் பயன்படுத்தி பின் தொடர வேண்டும்.

இதே நிலை மூடப்பட்ட விடைகளுக்கும் பொருத்தமானது. நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதில்களை ஒரு கேள்வி வரிசை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர பயன்படுத்த முடியும். சிலவேளைகளில் உங்களுக்கு அதிக தகவல் தேவைப்படுவதன் காரணமாக அவற்றை மீண்டும் திறக்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படும்; “ஆம்” “அவ்வாறு செய்வதற்கான உங்களின் நோக்கங்களை விளக்க முடியுமா?

அடுத்த கட்டத்துக்கு நகரும் முன்னர் விடையை கவனமாகப் பகுப்பாய்வு செய்யுங்கள். திறன் வாய்ந்த நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் நீங்கள் கேட்க விரும்புவதைக் கூறுவது போல் விடைகளை வழங்கக் கூடும், எனினும் பின்னர் நீங்கள் உங்களது குறிப்புகளை நோக்கும் போது தகவல் மூலம் குறித்த கேள்வியை தவிர்த்திருப்பதை உணர்வீர்கள். உங்களின் கேள்வி: நீங்கள் ஓ மாவட்டத்தில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு மருந்துகளை அனுப்பினீர்களா? தகவல் மூலத்தின் விடை: நிச்சயமாக, அந்த சிகிச்சை நிலையத்துக்கு சகல நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இது ஆம் என்ற தொனியில் பதில் வழங்கப்பட்ட போதும் நீங்கள் நேரடியாகக் கேட்டதற்கான தகவலை வழங்கவில்லை. நீங்கள் பின்வருமாறு அதைப் பின்தொடர்ந்து இருக்க வேண்டும்; என்ன மருந்துகள் அங்கே அனுப்பப் பட்டன? என்ன திகதியில் அவை அனுப்பப் பட்டன? அங்கு மருந்துகள் அனுப்பட்டமைக்கான என்ன உறுதிப்பாடு உங்களிடம் உள்ளது? அவை அங்கே கிடைக்கப்பெற்றன என்பதற்கான உறுதிப்பாடு உங்களிடம் உள்ளதா? நீங்கள் தகவல் மூலத்தின் விடையை விளங்கிக் கொள்ளாத பட்சத்தில் அதை அவர்களுக்குக் கூறுங்கள். உங்களது குழப்பத்தை ஏற்றுக் கொள்வது வெட்கத்தின் காரணமாக விளங்கிக் கொண்டது போல் காட்டுவதை விட சிறந்தது. “எங்களது வாசகர்கள் அல்லது நேயர்கள் அதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். உங்களால் அதை மீண்டும் ஒரு தடவை எளிமையான வார்த்தைகள் மூலம் விளங்கப் படுத்த முடியுமா?” என உங்களால் கூற முடியும். மாற்றீடாக, சொல்வடிவ மாற்ற உத்தியைக் கையாளுங்கள்; “அமைச்சர் அவர்களே, நான் அதை சரியாக விளங்கிக் கொண்டால், நீங்கள் சொல்கிறீர்கள் XY. அவ்வாறு நடந்ததா?

எழுத்து மூல ஆவணங்கள் மற்றும் மீளாய்வுகள்
உங்களின் நேர்காணலின் போது ஊடக அறிக்கைகளின் பிரதிகள், ஆவணங்கள், கற்கைகள் அல்லது புகைப்படங்கள் போன்றவற்றை நேர்காணலின் போது வைத்திருங்கள். நேர்காணலுக்கு உபடுத்தப்படும் நபர் எதிர்பாராத விடயம் ஒன்றைக் கூறும் போது குறித்த ஆவணங்களை உங்களால் அவர்களுக்கு உசாத்துணையாக காண்பிக்க முடியும். உங்களது ஒலிப்பதிவுக் கருவி மற்றும் மூளை என்பவற்றை இயக்கத்தில் வைத்திருங்கள். நேர்காணல் முடிந்த பின்னர் அவை இரண்டும் நிகழ்வுகளின் பதிவை உங்களுக்கு வழங்கும். பொருத்தமான இடத்து பின் தொடரும் கேள்விகளைக் கேட்பதற்கு அனுமதியைக் கோருங்கள்.

முகஸ்துதிக்கு மயங்காதீர்கள்
இது ஒரு நேர்காணல், நட்புறவு நிகழ்வு ஒன்று அல்ல. நீங்கள் அங்கே தகவல்களைக் கண்டறியவே சென்றுள்ளீர்கள், பாராட்டுப் பெறுவதற்காக அல்ல. ஒருவர் “இது மிகவும் கண்ணோட்டம் வாய்ந்த கேள்வி” என்று சொல்லும் போது அவர்கள் உங்களைப் பாராட்டவில்லை, மாறாக அவர்களது விடை பற்றிய சிந்தனைக்கு சில மேலதிக விநாடிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

நேர்காணல் முடிவுற்ற பின்னர் உங்களது தகவல் மூலத்துக்கு ஆசுவாசமடைய வாய்ப்பை வழங்குங்கள். வியக்கத் தக்க வகையில் இது உள்நோக்கை சேர்க்கின்றது. பின்னர், அவர்களிடம், நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா எனக் கேளுங்கள். அது மரியாதை நிமித்தம் கேட்கப்படுவதுடன் செய்தி எவ்வாறு எப்பொழுது பிரசுரிக்கப்படும் என விளக்குவதற்கு காணப்படும் இறுதியான வாய்ப்பாக இருக்கின்றது. நேர்காணலை எப்போதும் பின்வரும் கேள்வியுடன் நிறைவு செய்யுங்கள்; “நான் வேறு ஏதாவது உங்களிடம் கேட்டிருக்க வேண்டுமா?” அல்லது “நீங்கள் வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?”

கடப்பாடு
செய்தியை பிரசுரிக்கும் முன்னர் அதை நான் பார்பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று கூறினீர்கள், இல்லையா? நேர்காணலை முடித்து விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகல்வதற்கு பதட்டத்துடன் செயற்பட்டு பிரசுரத்துக்கு முன்னர் செய்தியைக் காண தகவல் மூலத்துக்கு வாய்ப்பு வழங்க இணங்கி விட்டுச் செல்லாதீர்கள். அவ்விடத்தில் நின்று அவ்வாறன உரையாடல் தொடர்பில் உங்களது புரிதலை தெளிவாக விளக்குங்கள். இல்லை, நான் என்ன சொன்னேன் என்றால், நீங்கள் அது பற்றிக் கலந்துரையாட விரும்பினால் எனது செய்தி ஆசிரியரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவரின் தொடர்பு விபரங்கள் இங்கே உள்ளது. ஊடக அறிவாற்றல் மிக்க மூலங்கள் அவ்வாறான கோரிக்கையை மேற்கொள்ள அவசரமான இறுதி நிமிடங்களைப் பயன்படுத்தும், எனவே நீங்கள் வீட்டுக் கதவின் அருகில் காத்திருக்கப் படுவது தொடர்பில் அவதானமாக இருங்கள்.

இறுதி எண்ணங்களை புறக்கணிக்காதீர்கள்
நேர்காணலின் முடிவுப் பகுதியில் தகவல் மூலங்கள் சௌகரியமாக உணரும். அனேகமாக அவ்வாறான தருணங்களில் அவன் அல்லது அவள் தனது எச்சரிக்கை உணர்வு தளர்ந்த நிலையில் காணப்படுவர். இவ்வாறான தருணங்களை நேர்காணலின் போது வெளிப்பட்ட சொற்பதங்கள், பதவி நிலைகள் அல்லது பெயர்கள் பற்றி சோதனை செய்யப் பயன்படுத்துங்கள். எப்போதும் தகவல் மூலத்தின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி பின்னர் தகவல்களின் சில பகுதிகள் தொடர்பில் விளக்கங்களைப் பெற தேவைப்படின் அவசியமாகும், எனவே அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது தொடர்பு விபர அட்டையை அவர்களுக்கு வழங்குங்கள். இறுதி பாராட்டுகளை மறக்காதீர்கள். அவர்கள் நேரம் வழங்கியமைக்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். அது மிகவும் முக்கியமானது, நீங்கள் உதாசீனப் படுத்தபட்டாலோ அல்லது அவமதிக்கப் பட்டாலோ கூட நன்றி கூறுதல் அவசியமானது. அவர்கள் உங்களுடன் உரையாடுவதற்கு விருப்பப் பட்டதை உளமாரப் பாராட்டுவது போன்று உங்களது தொனியை வைத்துக் கொள்ளுங்கள்.

நேர்காணல் பின்புல தகவல்கள் தொடர்பில் உதவியாக அமைந்தால் அல்லது நட்புறவான தொனியில் அமைந்திருந்தால், மேலதிக உள்நோக்கை வழங்கக் கூடிய தகவல் மூலம் யாரையாவது அவர்களால் பரிந்துரை செய்ய முடியுமா எனக் கேளுங்கள். இந்த தகவல் மூலத்தின் பெயரை ஒரு உசாத்துணையாகப் பயன்படுத்துவது புதிய கதவுகளை உங்களுக்கு திறந்து விடலாம்.

குறிப்புகளை நேர்காணல் முடிந்தவுடன் உடனடியாக சோதித்து உறுதி செய்யுங்கள்
நேர்காணலை முடித்து வெளியேறிய பின்னர் உடனடியாக உங்களது குறிப்புகளை மீள வாசியுங்கள். இந்த நேரத்திலேயே உங்களது குறுகிய கால நினைவு சிறப்பாக பணியாற்றும். அதை நீங்கள் அடுத்த நாளைக்கு விட்டு வைக்கும் போது நீங்கள் சுருக்கமாக கிறுக்கிய விடயம் எதைக் குறிக்கின்றது என்பதை நீங்கள் மறந்திருக்கக் கூடும். அல்லது நீங்கள் உடனடியாக மீள் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என நினைத்த விடயம் மறந்திருக்கக் கூடும். உங்களது குறிப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்பி அவற்றை நீங்கள் எங்கே பின் தொடர் நேர்காணல்களில் கண்டறிய வேண்டும் என குறித்துக் காட்டுங்கள்.