நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உங்களது கேள்விகளுக்கு விடையளிக்க மறுப்பதற்கு பல காரணங்கள் காணக்கூடும். மேலே, நாம் எவ்வாறு தர்காப்புள்ள திரித்துக் கூறும் நபர்களை எவ்வாறு கையாள்வது என நோக்கினோம். எனினும், அனேகமாக மக்களுக்கு ஊடகத்துடன் உரையாடப் பயப்படுவதற்கு உண்மையான மற்றும் சிறந்த காரணங்கள் காணப்படுகின்றன. அதிகமான நாடுகளில் அரசுகளுக்கு விசுவாசமற்ற ஊடகங்கள் மற்றும் அவற்றின் தகவல் வழங்குனர்கள் தொந்தரவை அல்லது அதற்கும் மேலான கெட்ட விடயங்களை எதிர் நோக்குகின்றனர். அதற்கு மேலதிகமாக, நீங்கள் நேர்காணல் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் தாங்கள் விடுபட மறுக்கும் மனத் தாக்கங்களை கொண்டிருக்கக் கூடும். அல்லது அவர்கள் உங்களிடம் வெளியிடும் அந்தரங்கத் தகவல்கள் காரணமாக சமூகத்தில் ஏற்படும் இழுக்கு தொடர்பில் பயத்தைக் கொண்டிருக்கக் கூடும். மிருதுவான வலியுறுத்தல்கள் இந்த விடயத்தில் நன்மை பயக்கக் கூடும். எனினும் மறுக்கும் தகவல் மூலத்தை உங்களுடன் பேச வைப்பதற்கு பயன்படுத்தக் கூடிய சிறந்த வழி மூன்றாம் தரப்பு “கதவு திறப்பவர்” ஒருவரைப் பயன்படுத்துவதாகும்.
குறித்த தகவல் மூலம் எது தொடர்பில் பயத்தைக் கொண்டுள்ளது எனக் கண்டறியுங்கள். அத்துடன் அவனுக்கு அல்லது அவளுக்கு நேர்காணலை நடத்தும் நோக்கில் உங்களால் முடிந்த அளவு உறுதி மொழிகளை வழங்குங்கள். இதன் பொருள் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் நேர்காணல் இடம்பெற முன்னர் உங்களது செய்தி ஆசிரியருடன் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதாகும், ஏனெனில் உங்களால் நிறைவேற்ற முடியாத எந்த ஒரு வாக்குறுதியையும் உங்களால் வழங்க முடியாது.
பொது மக்களிடம் இருந்து தகவல் அளிக்கப்பட விருப்பைப் பெறல்
தகவல் அளிக்கப்பட விருப்பு என்பது தகவல் மூலம் ஒன்றிடம் வெறுமனே “நீங்கள் கூறிய விடயங்களை நாம் பிரசுரிக்கலாமா?” என்று கேட்பது அல்ல. அதன் பொருள், நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர், குறித்த விடயம் பிரசுரிக்கப் படுவதால் ஏற்பட சாத்தியமான பின்விளைவுகள், அபாய நேரிடர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய (அத்துடன் வழங்கப்பட முடியாத) பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தகவல் மூலம் விளங்கிக் கொள்வதாகும். அத்துடன் இவை அனைத்தையும் முழுமையாகத் தெரிந்த பின் பிரசுரிக்க அனுமதி வழங்குவதாகும். மக்களைப் பயமுறுத்த வேண்டாம், எனினும் சாத்தியமான பின் விளைவுகள் தொடர்பில் மறைக்கவும் வேண்டாம். அதிகமான மக்கள் பொது வெளிக்கு வருகை தந்து தகவல் பங்களிப்பை வழங்கும் பொழுது உங்களது செய்தி இன்னும் வலுவடையும். இவ்வாறான உரையாடல்கள் உங்கள் தகவல் மூலங்களுடனான உறவை வலுப்படுத்த உதவுவதோடு சில அடையாளங்கள் மறைக்கப்பட்டாலும் உண்மை மிக்க கலந்துரையாடல்களையும் ஏற்படுத்த உதவும்.
பரிவைக் காண்பியுங்கள் அனுதாபத்தை அல்ல
“அது எவ்வளவு மோசமான விடயம், நீங்கள் பாவம்” இவ்வாறான வார்த்தைகள் உங்களது தகவல் மூலத்தை வலுவிழக்கச் செய்து அவர்களை நலிவானவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் உணரச் செய்யும். அவனுக்கு அல்லது அவளுக்கு தனது கதையைப் பகிரக் கூடிய பாதுகாப்பான தளத்தை வழங்குங்கள். நடுநிலையான, திறந்த செவிமடுத்தலை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் எண்ணங்களை சேகரிக்க மற்றும் அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய நிலையே தேவையானதாகும். ஊக்குவிக்கக் கூடிய ஒழுங்கான தலையசைத்தல், “ஆம்” “மேலே சொல்லுங்கள்” அல்லது “எனக்கு இன்னும் சொல்லுங்கள்” போன்ற பின்னூட்டங்களை வழங்குங்கள். கலாச்சார ரீதியாக பிழை இல்லையாயின் அந்த நபரை நோக்கி அடையக் கூடிய, மீள் உறுதி வழங்கக் கூடிய கரத்தினால் அந்த நபரின் கையில் தட்டுவதில் எந்தப் பிழையும் கிடையாது. உங்களது மனித உணர்வுகள் உங்களை வழிநடத்த அனுமதியுங்கள்.
எழுதுவதை நிறுத்துங்கள்
உங்களின் குறிப்பு எடுத்தல் செயற்பாடு தொடர்பான தகவல் மூலத்தின் பதற்றம் சில வேளைகளில் அடக்குமுறைத் தோற்றத்தை ஏற்படுத்தலாம். கேள்விகள் உணர்திறன் மிக்க பகுதிக்குள் நுழையும்தருணங்களில் எழுதுவதை நிறுத்துங்கள். நீங்கள் பின்னர் குறிப்புகளை எடுக்கலாம்.
மரியாதையைக் காண்பியுங்கள்
கேள்விகளை அவசரமாகக் கேட்க வேண்டாம். அத்துடன் தகவல் மூலத்தின் விடைகளை பரபரப்பாக்குவதன் மூலம் சுரண்டி எடுக்காதீர்கள். தகவல் மூலத்தின் இடத்தில் உங்களை உருவகப்படுத்தி உங்களது கேள்விகள் உணர்ச்சி அற்றவையாக இல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கடுமையாக இருங்கள்
உணர்திறனுக்கான தேவை இருந்த போதும், நீங்கள் கடினமான கேள்விகளைக் கேட்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு நபர் நான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டேன் எனக் கூறுவதை வைத்துக் கொண்டு அதை உண்மை என உறுதி செய்ய முடியாது. எனவே, ஊதிப் பெருப்பிக்கக் கூடிய நபர்கள் தொடர்பில் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். நான் செய்தி தொடர்பில் தன்னம்பிக்கையுடன் இல்லாத பட்சத்தில் அவர்களுடைய பிரச்னையை முன்கொண்டு செல்ல முடியாது என்பதை தெளிவாகக் கூறி விடுங்கள். அத்துடன், ஏனைய வகை நேர்காணல்களில் பெறப்பட்ட குறுக்குப் பரிசோதனைகளை புறக்கணிக்க வேண்டாம்.
மறுதலித்தல் தொடர்பில் கவனமாக இருங்கள்
வேறுபட்ட காரணங்களுக்காக, அவை கெட்ட காரணங்களாக மக்கள் பொய்யுரைப்பார்கள், அல்லது பாதியளவிலான உண்மையைக் கூறுவார்கள். மறுதலித்தல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உளவியல் நிலைகளில் ஒன்றாகும். அந்த நிலையில் முகம் கொடுக்க மிகவும் கடினமான தம்மைப் பற்றிய சில விடயங்களை மறைத்து விடுவார்கள். எனவே, உதாரணமாக மறுதலிக்கும் நிலையில் நபர்கள் தாம் வன்புணரப் பட்டதாகவோ மற்றவர்கள் வன்புணரப் படுவதைக் கண்டதாகவோ கூற மாட்டார்கள்.
சரியான கேள்விகளைக் கேட்பதே உங்களுக்கு செய்தி கிடைக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். எனினும், புலனாய்வு செய்தி ஒன்றில் அனைத்து தகவல் சேகரிப்பும் அடிப்படையான விடயமாகும். அவற்றை உங்களது வாசகர்களுக்காக விபரமாக எழுதுவது அதை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அடுத்த அத்தியாயம் நீங்கள் சேகரித்த தகவல்களை எவ்வாறு வகை பிரித்து ஒரு சுவாரசியம் மிக்க செய்தியாக எழுதுவது என்பதை விளக்குகின்றது.