அத்தியாயம் 8 செய்தியை எழுதுதல்

அத்தியாயம் 8 செய்தியை எழுதுதல்

புத்தி சாதுரியமாக புலனாய்வு செய்யப்பட்ட செய்தி ஒன்று நன்றாக ஒழுங்குபடுத்தப்படாமல் மற்றும் நன்றாக எழுதப்படாமல் இருக்கும் பட்சத்தில் சுவையற்றதாக மாறிவிடும். அந்த செய்தி வாசகர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எனவே உண்மைகள் கொண்டதாகக் காணப்படுவதுடன் நேரத்துக்கு வழங்கப்பட வேண்டும். உங்களுடைய புலனாய்வை நம்புகின்ற தொடர்புடைய மற்றும் முக்கியமான நபர்களின் கூற்றுக்களை செய்தி கொண்டிருப்பது உங்களது செய்திக்கு கண்ணியத்தை வழங்கும். உங்களது புலனாய்வின் சிக்கல் மிகுந்த விடயங்களை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வரைபுகள், அட்டவணைகள் மற்றும் படங்கள் என்பன உதவும்.